Saturday 19 December 2009

பிச்சை


யார் பெற்ற பிள்ளையையோ
வேர்வையுடன் சுமந்து
காரருகில் கைநீட்டும்
கருத்த நிறத்தவளின்
ஓயாத தட்டல்கள்
அய்யா அம்மா என்று
அலுக்காத குரல்கள்
இடுப்பில் இருக்கும் குழந்தை
பசியில் சிணுங்க இரக்கமின்றி
அடிக்கும் இவளுக்கும்
கால் கடுக்க படியேறி
ஓட்டுப் பிச்சை எடுத்தவர்கள்
கால்வயிற்று கஞ்சிக்கு
கால்கடுக்க கடையில்
நின்று கடுப்பானவர்களின்
வாழ்கைத் தரம் உயர்த்துவோம்
என்று சூளுரைத்து வெறும்
ஐம்பது ரூபாயிலே அனைத்தும்
தருவோம், பொன் தருவோம்
பொருள் தருவோம் என்று
உறவினரிடமே ஒப்பந்தப்
புள்ளி கூறி, ஓயாமல்
கொள்ளையடித்து, கொள்கை
கடமை என ஜல்லியடிக்கும்
சில்லரைப் பொறுக்கிகளுக்கும்
வித்யாசம் எத்தனை
என்று வியக்கிறது
விவரம் தெரியா மனது

Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

vasu balaji said...

arumai.

பூங்குன்றன்.வே said...

/கொள்கை
கடமை என ஜல்லியடிக்கும்
சில்லரைப் பொறுக்கிகளுக்கும்
வித்யாசம் எத்தனை
என்று வியக்கிறது
விவரம் தெரியா மனது //

அப்படி போடு அருவாள..சரியான சாட்டையடிங்கோ...

கும்மாச்சி said...

தொடர்ந்து என் பதிவுகளுக்கு பின்னூட்டமிடும் அனைவருக்கும் நன்றி. வானம்பாடிகள் உங்களுக்கு எனது சிறப்பு நன்றி.

க‌ரிச‌ல்கார‌ன் said...

போட்டு தாக்குங்க‌ த‌ல‌

உமா said...

அருமையான கவிதை...சமுதாயத்தில்தான் எத்தனை வலிகள் புதைந்திருக்கின்றன....

அண்ணாமலையான் said...

பொறுக்கிப்பயல்களின் பொல்லா ஆட்சி
நடக்கும் காலமிது. நல்லது கெட்டது
பொது மக்கள் எதிர்பார்காமலிருப்பது
சாலச்சிறந்தது...

கமலேஷ் said...

ரொம்ப நல்ல இருக்குங்க..

வாழ்த்துக்கள்..

Chitra said...

அந்த பிச்சைக்காரியின் கையில் உள்ள குழந்தையை கண்டு பரிதாப பட்டிருக்கிறேன். தமிழ் மக்களும் அந்த குழைந்தைகள் போல் என்று சுட்டி காட்டிய பின் ................. சிந்திக்க வைத்ததுக்கு நன்றி.

புலவன் புலிகேசி said...

அருமையா சொன்னீங்க போங்க..

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.