Monday 28 March 2011

கலக்கல் காக்டெயில்-26

புரட்சியுடன் புரட்சி இணைந்ததுபுரட்சியோடு புரட்சி இணைந்துள்ளது...............பிரேமலதா விஜய்காந்த்.

யப்பா இந்த தேர்தலில் யார் வேணும் என்றாலும் எதை வேண்டுமென்றாலும் உளறலாம். ஆனால் மக்கள் உஷாரப்பு.

புரட்சிதலைவி என்ன புரட்சி செய்தார்கள் என்று இன்றும் மக்கள் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வேளை “அம்மா” சசிகலா உறவா?

புரட்சிக் கலைஞர் என்ன புரட்சி செய்தார்?. கலையில் என்ன புரட்சி?, ஓரளவுக்கு சொல்லலாம், தொப்புளில் பம்பரம் விட்டார். தீவிர வாதிகளுக்கு புள்ளி விவரம் கொடுத்தே “டம்மி பீஸ்” ஆக்கினார்.

ஒரு புரட்சி ஓகே. இன்னும் ஒரு புரட்சி எது என்று யாராவது சொல்லுங்கப்பு.தேர்தல் அறிக்கை


கலிஞர் மாவாட்ட மெசின் கொடுத்தா அம்மா காத்து வாங்கிக்கினே மாவாட்ட மெசின் கொடுத்துகிறாங்க.

இப்படியே போனா நான் ஒரு கட்சி ஆரம்பித்து “தக்காளி எதுக்கு தாய்மாருங்க (பெரும்பாலான வீடுகளில் தந்தைமார்கள்) மாவாட்டனும்னு” காலைலே பால் பாக்கெட் போட சொல்ல வூட்டுக்கு தலா நாலு இட்லியும் கெட்டிச்சட்னியும் போட்டு வோட்ட அள்ளுவோம்ல. அடுத்த முறையும் ஆட்சிக்கு வந்தால் ஆப்பம் பாயா, பூரி கிழங்கு என்று மெனு விஸ்தரிக்கப்படும்.

இன்னாது மாநில வளர்ச்சியா? ஓகே அதுவும் பத்து கிலோ இலவசமாக வீடு தோறும் வழங்கப்படும்.தங்க, வெள்ளி, பித்தளை பாலு.

காங்கிரசுக்கு எப்போது இவ்வளவு ராஜ தந்திரம் வந்தது.

மைலாப்பூரில் மனைவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்து சைக்கிள் கேப்பில் பாலு நீர் உள்ளே பூந்தது மவனே யாரும் எதிர் பார்க்காத ஒன்று.

பித்தளை “தொங்க பாலு” நீ எங்கேயோ போயிட்டே.நகைச்சுவை +18 மட்டும்

செக்ஸ், சிக்ஸ் இன்னா வித்யாசம்?

அடிச்சு தூக்கினா அது சிக்ஸ்

------------------------------------------------- அது செக்ஸ்

அட போங்கப்பு எல்லாத்தையும் விலாவாரியா சொல்ல முடியாது.இந்த வார ஜொள்ளு

Follow kummachi on Twitter

Post Comment

Sunday 20 March 2011

கதாநாயகி அறிமுகம்

போன முறை “கதாநாயகன்” இந்த முறை “கதாநாயகியாம்”. மஞ்சள் துண்டு ஐயா விட்ட தேர்தல் அறிக்கைக்கு முன் கொடுத்த “ஜிஞ்சினக்கா” விளம்பரம். மாணவர்களுக்கு மடிக்கணினி, இல்லத்தரசிகளுக்கு இலவச க்ரைண்டர் அல்லது மிக்ஸி, ஒரு ரூபாய் அரிசி இருபது கிலோவிலிருந்து முப்பத்தைந்து கிலோவாக உயர்வு. எல்லாம் அம்மனிகளை குறி வைத்து ஒட்டுல “ஆட்டை”யைப் போடும் தந்திரம். ஆண்கள் ஓட்டைக் கவர ஏன் டாஸ்மாக்கில இலவச கட்டிங்கை விட்டு விட்டார்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை அடுத்த “குத்தாட்ட நடிகை” அறிமுகப்படுத்தும் பொழுது கொடுப்பார்களோ? இந்த இலவசங்களுக்கு திறப்புவிழா செய்தவர் எம்.ஜி.ஆர். சத்துணவில் தொடங்கி, பல்பொடி, செருப்பாக உயர்ந்து டிவி, கிரைண்டர் மிக்ஸி வரை தேய்ந்துவிட்டது. இனிவரும் அறிக்கைகள் கட்டில், மல்லிப்பூ, அல்வா, காண்டம் என்று போனாலும் ஆச்சர்யமில்லை.


இந்த முறை கார்பரேட் கம்பெனிக்கு “சங்கூதலாம்” என்றால், மாற்று கம்பனியும் வந்து ஒரு மசுரும் பிடுங்கப் போவதில்லை. ஐந்து வருட காலம் அறிக்கைக்கு ஏற்பாடு செய்துவிட்டு ஒய்வு எடுத்துக் கொண்டு, மூன்று மாதம் கால்ஷீட்டில் வந்திருக்கும் அம்மா “கொட்டுவாயில்” கூட்டணி போட்டு இன்னும் தோழமை கட்சிகளிடம் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். கூட்டணி பேசும் பொழுது “ஏணி எப்படியும் அபீட்” என்ற ரேஞ்சில் வேட்பாளர்களை அறிவித்த அவசரம் பிறந்த குணத்தை காட்டி எல்லோரையும் நகைக்க வைத்திருக்கிறது.

ம.தி.மு.க வை முதுகில் குத்தியதை மானமுள்ளவர்கள் மன்னிக்கமாட்டார்கள். அதற்காக வை.கோவின் தேர்தல் புறக்கணிப்பு முடிவு தற்கொலைக்கு சமம். அகந்தை ஆனவம், தன்னிச்சையாக செயல்படுதல் என்ற அம்மாவின் குணம் இப்பொழுதுதான் புரிந்திருக்கிறது. வைகோ தனியாக எல்லா இடங்களிலும் நின்று ஓட்டு வங்கியை தக்க வைத்துக் கொள்ள இந்தத் தேர்தலை பயன்படுத்தலாம்.

ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்கள் மாற்றுக் கட்சியை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த புதிய கட்சியும் இந்த இரு கழகங்களுடனும் கூட்டணி வைத்துக் கொண்டால் பின்பு அந்தக் கட்சிகளாலேயே அழிக்கப் படுவது வரலாறு கண்ட உண்மை. இதை விஜயகாந்தும் போக போக புரிந்து கொள்வார் என நம்புவோம். இந்த கழகங்களின் வேரறுக்க இன்னும் குறைந்தது பத்து வருடமாவது ஆகும்.

அதற்குள் நடிகையின் “தொப்புளில்” முகம் புதைக்காத ஏதாவது ஒரு புண்ணியவான் புதிய கட்சி கொண்டு வந்தால் தான் தமிழனுக்கு விடிவு காலம். இல்லையென்றால் இலவச கவர்ச்சிகளில் மயங்கி இருண்ட காலத்திற்கு போக வேண்டியது தான்.

Follow kummachi on Twitter

Post Comment

Thursday 17 March 2011

வை.கோ, வருவதை எதிர்கொள் ஐயா...........................

கூட்டணியில் இருந்துகொண்டு


கொள்கை உள்ள கட்சி

வெல்லாது என்பது

ஜனநாயகம் வகுத்ததையா

வை. கோ,

இந்திய ஜனநாயகம் வகுத்ததையா

வருவதை எதிர் கொள் ஐயா.

அம்மாவுடன் நீ இல்லை

ஐயாவுடனும் இல்லை,

தொண்டரும் தொடரவில்லை

ஊர் பழி ஏற்றாய் ஐயா வை.கோ,

தனிமரம் ஆனாய் ஐயா.

பதினெட்டு மாதம்

சிறையில் அடைத்த

பாசிச அம்மாவிடம்

நாற்பது கோடி பெற்று

சேராத இடம் சேர்ந்து

வஞ்சத்தில் வீழ்ந்தாய் ஐயா

வஞ்சகி அம்மா ஐயா

வை.கோ. வஞ்சகி அம்மா ஐயா.

தமிழ் ஈழம் என்று சொல்லி

கழுத்து நரம்பு

புடைக்க மேடையில்

முழங்கினாய் ஐயா

வை.கோ, நடந்து

நடந்து தேய்ந்தாய் ஐயா

நேற்று வந்த கூத்தாடி எல்லாம்

நாற்பது பெற்று உன்னை

நட்டாற்றில் விட்டார்கள் ஐயா

வை.கோ தன்மானம் இழந்தாய் ஐயா

கட்சி காணாமல் போகும் ஐயா

வை.கோ பம்பரம் அபீட் ஐயா

வை.கோ பம்பரம் அபீட் ஐயா.

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 15 March 2011

கலக்கல் காக்டெயில்-25

நிலநடுக்கம், சுனாமி, அணு உலை வெடிப்பு.....................................


நிலநடுக்கம், சுனாமி, பயங்கர குளிர், அணு உலை வெடிப்பு, கதீர் வீச்சின் தாக்கம் என ஜப்பான் நிலை குலைந்துப் போயிருக்கிறது. பஞ்ச பூதத்தில் ஒரு பூதம் கோரத்தாண்டவனம் ஆடினாலே எந்த ஒரு நாடும் நிலை குலைந்து போகும். இங்கு ஐந்தோட ஆறாவதாக அணு உலை வெடித்த கதிர் வீச்சும் போட்டு தாக்கியிருக்கிறது. இரண்டாவது உலகப் போரையே கண்டு எழுந்து நின்றவர்களுக்கு இது ஒன்றும் இல்லைதான். இருந்தாலும் ஜப்பானியர்கள் இயல்பு வாழ்வு திரும்ப எல்லாம் வல்ல பூமித்தாயையும், கடல் தாயையும் கூடவே அணு பகவானையும் வேண்டிக்கொள்வோம்.

இரண்டே நாட்கள்


வேட்பு மனு தாக்கல் செய்ய இன்னும் இரண்டு நாட்கள்தான் உள்ளது. ஒரு வழியாக எண்ணிக்கையை முடிவு செய்துவிட்டார்கள். ஆனால் யார் யார் எங்கெங்கே என்பதில் இன்னும் குழப்பம். காங்கிரெஸ் அறுபத்து மூன்று வாங்கிய இடங்களுக்கு எதற்கு ஐவர் குழு என்று தெரியவில்லை. ட்வீடரில் ஒருவர் இதற்கு “வெண்ணிலா கபடி குழுவே போதுமே” என்கிறார். சரிதான்.

மன்சூரலிகான் வென்றால் வாஷிங்மெசின் கொடுக்கிறாராம். பவுடர் எவன் கொடுப்பனாம்?, தெரியவில்லை.

கார்த்திக் அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகினார் (செய்தி). உரிய மரியாதை இல்லையாம். தோடா இப்பதான் இவருக்கு தெரியுமாம்.

டாக்குடர் விஜய் உரிய மரியாதை இல்லையென்று படப் பிடிப்புக்காக வெளிநாட்டுக்கு “எஸ்” ஆகிவிடுவாராம். ஆனால் ஆதரவாக அறிக்கை விடுவாராம். ஏம்பா இதைக்கூட சொந்தமா செய்யமாட்டிங்களா? அதற்கும் அவரைத்தான் காபி அடிக்கனுமா?

வெளங்கிடும், வருங்கால முதலமைச்சரே?

ரசித்த நகைச்சுவை

தாத்தா பேரனிடம்

டேய் அஜய் போய் ஒளிந்து கொள்ளடா, உங்க மிஸ் தெருவிலே வாறாக, இன்றைக்கு பள்ளிக்கூடத்திற்கு மட்டம் போட்டு விட்டாய்.

பேரன் தாத்தாவிடம்

தாத்தா நீ போய் முதலில் ஒளிந்து கொள், நீ “அபீட்டுன்னு” சொல்லித்தான் மட்டம் போட்டிருக்கேன்.இந்த வார ஜொள்ளு

Follow kummachi on Twitter

Post Comment

Friday 11 March 2011

தேர்தல் வருது..........................

வருது வருது தேர்தல் வருதுபதுங்கிக்கிடந்த புலிகள் எல்லாம்


ஓட்டு கேட்டு பவனி வருது


சரக்கு போட்டு தொண்டரெல்லாம்


துண்டு போட்டு தொடர்ந்து வருது.


நிமிர்ந்து நடந்த புள்ளி எல்லாம்


குனிந்து கும்பிடு போட்டு வருது


சாவப்போற ஆயா எல்லாம்


சாவடி பக்கம் காவடி ஆடுது


க்வார்டருக்கு அலைஞ்சதெல்லாம்


ஃபுல்லோட ஆடி வருது


பழைய சோறு சட்டி எல்லாம்


பிரியாணி நிரம்பி வழியுது


குப்பையில் கிடந்த வழக்கு எல்லாம்


தூசி தட்டி துணிந்து வருது


நடப்பில் இருந்த வழக்கு எல்லாம்


கிடப்பில் போட்டு குப்பையாகுது


ஒட்டு போடும் “ராசா” எல்லாம்


புது வேட்டி கட்டி நிக்குது


கிழிஞ்ச சேலை “ராணி” எல்லாம்


புதிய சேலையில் மினுக்குது


நாறிப் போன நடிகை எல்லாம்


தேரேறி திறந்து வருது


இலவசங்கள் எல்லாம்


இருப்பு தேடி வருது


லட்டினிலே லஞ்சம் வருது


கவரினிலே கையூட்டு வருது


ஐந்து வருட ஆசையெல்லாம்


“ஐந்நூரில்” அடங்கி விடுது.

---------------------------------------------------------------

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 8 March 2011

கலக்கல் காக்டெயில்-24

அறுபத்துமூவர்
கலைஞர் விட்ட கடைசி “அஸ்திரத்திற்கு” இறங்கி எல்லா நிபந்தனைகளையும் கை விட்டு அறுபத்து மூன்றிற்கு மீசையில் மண் ஒட்டவில்லை என்று ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அறுபத்து மூன்றில் எவ்வளவு தேறும் என்பது “தேர்தல் ஆணைய பகவானு” க்குத்தான் வெளிச்சம்.

அம்மா “காங்கிரஸ் கடாட்சம்” எதிர் பார்த்து கடைசி வரை வைகோவை வாசலில் நிறுத்திய அவலம் எந்த கட்சி தலைவருக்கும் நேராத அவமானம். தன்மான சிங்கம் பேசாமல் அ.தி.மு.க. ஜோதியில் ஐக்கியமாகிவிடலாம்.

மொத்தத்தில் கொள்கை, கண்ணியம் என்பதெல்லாம் ..த்தா ரேஞ்சிற்கு இறங்கி விட்டது தமிழ் கூறும் நல்லுலகம் கொள்கை ஓட்டை கொட்டடியில் போட்டு பிரியாணிக்கு மயங்கி க்வார்டரில் குளித்ததால் வந்த வினை.

“வினை விதைத்தவன் வினையறுப்பான்”.

மே பதிமூன்றாம் தேதி பேரம் தொடங்கும் நாள்.

ரசித்த கவிதை

கவிஞன் யானோர் காலக் கணிதம்

கருப்படு பொருளை உருப்பட வைப்போன்!

புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்

பொன்னிலும் விலைமிகு பொருளென் செல்வம்

இவைசரி யென்றால் இயம்புதென் தொழில்

இவை தவறாயின் எதிர்ப்பதென் வேலை

ஆக்கல் அளித்தல் அழித்தல் இம் மூன்றும்

அவனும் யானுமே அறிந்தலை அறிக

பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்

பாசம் மிகுத்தேன், பற்றுதல் மிகுத்தேன்

நானே தொடக்கம் நானே முடிவு

நானுரைப்பதுதான் நாட்டின் சட்டம்.

கவிஞர்: பெயர் சொல்ல வேண்டிய அவசியமில்லை.ஒரு கட்டிங் எஸ்டிரா

Pack my box with five dozen liquor jugs

இந்த வாக்கியத்தில் ஆங்கில எழுத்துக்கள் அனைத்தும் இருக்கின்றன. குடிமகன்கள் பெருமை கொள்ளலாம்.

இந்த வார ஜொள்ளு
Follow kummachi on Twitter

Post Comment

Monday 7 March 2011

டாஸ்மாக்கில் கடவுள்

இன்னாபா கடையைத் தொறக்க இம்மாம் நேரம், ...த்தா கவ்மெண்டு ஆளுங்க என்னிக்கி கரீட் டயத்துக்கு வேலைக்கு வந்துகிறீங்க.


சரிபா எனிக்கு “பிராந்தி” ஒரு கட்டிங் கொடு.

இன்னது? காலைல லொள்ளு பண்ணாதே, கட்டிங் கிடையாதா?, க்வார்டரா வாங்கணுமா?.

தக்காளி அம்மாம் துட்டு இருந்தா நான் என் கட்டிங் கேக்குறேன்.

சரி இந்தா இத்த வச்சிக்கோ க்வர்டறு நெப்போலியன் கொடு.

ரூம்பு தொரந்துகீதா போவலாம் தானே.

டேய் பொட்டி ஒரு பாக்கிட்டு வாட்டரும் க்ளாசும் கொடு.

...த்தா துட்டு அப்பால தரேன்டா.

மவனே ரூம்பு வச்சிகிரானுங்க பாரு பேமானி, குந்த ஒரு பெஞ்சி கீதா.

மவனே இன்னா சரக்கு கொடுக்கிரானுங்க டாஸ்மாக்கில ரெண்டு கிளாசு வுட்டும் ஏற மாட்டேங்குது.

ஆ வா தல, இன்னா ஷோக்கா கீரபா, இன்னாபா தலிக்கு பின்னால விளக்கு எரியுது, சாமி நீ கடவுள் தானே.

அஹ சொம்மா சொல்லாதே, ஐய கால கவைக்குள்ள உட்டுக்கினு குந்திகின்னு இருப்பாரே அஹான் யோவ நீ அவருதானே, சாமீ மன்னிச்சுக்க.

இந்நாது இல்லியா, அஹான் இல்லே மூஞ்சில முள்ளு முள்ளா தாடி வுட்டுகினு கீரே அஹான் நீ அவருதான், சாமீ இந்தப் பாவிய மன்னியு சாமீ.

ஏன் சாமீ பேஜாரயிட்டே.

அதோ சொவுத்துல எய்தி கீரானுன்களே “நீ தோக்க மாடீனு எய்திகிறது கீய ஒரு பேமானி அப்ப உன்னிய பரீட்சை எய்த சொல்லுன்னு எய்திகிரானே” அத்த கண்டுகினு பெஜாராய்ட்டியா.

அய்ய இன்னா ஒன்னியம் சொல்ல மாட்டேங்கிறே.

ஐய மல மேல கோவணம் கட்டிக்கினு இருப்பார் அவரா நீ, உனுக்கு இன்னாபா ரெண்டு வச்சிகிரே, மவனே எனக்கு ஒன்னு வச்சிக்கின்னு டப்பா டான்ஸ் ஆடுது.

அமிஞ்சிக்கரை அஞ்சலை வேறே காசு கேட்டு மெர்சல் பண்றா நைனா.

அத்த வுடு, நீ எந்தக் கடவுள் சொல்லு.

இன்ன நீ கடவுள் இல்லியா.

அஹான் இப்படித்தான் ஒரு கூட்டம் சொல்லிக்கினு காசு பாக்கரானுங்கோ.

தோ சும்மா கமால் காட்டாதே வாத்தியாரே, உன்னியப் பார்த்தாலே கடவுள் மாதிரி கீரே.

சரி அல்லாருக்கும் அல்லாம் குடுக்கிரியே, நமக்கு ஏதாவது செய் தல.

இன்னாது இன்னா வேணுமா.

ஒரு ஹாபுக்கு வழி பண்ணு சாமீ.

இன்னது துட்டு இல்லியா.

அப்பா இன்னா மயிருக்கு இந்நேரம் குந்திக்கின்னு ஒரு பீர் சப்பிக்கின்னு எண்ணிய லுக்கு வுட்டுகினு கீரே.

..த்தா ஏய் கடவுள, வாங்கிக் கொடுத்துக்கினு போய்க்கினே இரு

யோவ் இன்னாயா கூவிகினேகிறேன் போய்க்கினே கீரே.

மவனே நீ கடவுள இருந்தாலும் எங்கக் கிட்டதான் மவனே வருவடி

உன்னாண்ட கூட்டணி சொல்லிகினு இருந்தவனே எங்க போயிருக்கான் பாரு?.

Follow kummachi on Twitter

Post Comment

Wednesday 2 March 2011

கலக்கல் காக்டெயில்-23

சுஜாதா- நினைவுநாள்


சுஜாதா மறைந்து மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. எனக்கு சுஜாதா புத்தகங்களின் அறிமுகம் “ப்ரியா” காலத்திலிருந்து தொடங்கியது. அவருடைய புத்தகங்கள் என்னிடம் அனைத்தும் உள்ளன, ஒன்றைத் தவிர “செப்டம்பர் பலி” என்ற புத்தகம் லெண்டிங் லைப்ரரியிலிருந்து வாங்கிப் படித்தேன். அப்பொழுதெல்லாம் வாடகைக்கு புத்தகம் வாங்கிப் படித்த காலம். பின் வேலைக்கு சென்றவுடன் வாரம் ஒரு புத்தகம் என்று வாங்கினேன். பின்பு இப்பொழுது அவ்வப்பொழுது அள்ளிக் கொள்கிறேன். இரண்டு அலமாரிகள் நிறைந்து இப்பொழுது தங்கமணியுடன் மல்லுகட்டிக்கொண்டிருக்கிறேன். எங்கும் தேடிவிட்டேன் செப்டம்பர் பலி கிடைக்கவில்லை.

ஒரு முறை மின்னம்பலத்தில் அவருடன் chat செய்யும் பொழுது இந்தப் புத்தகத்தை பற்றிக் கேட்டேன். அவரிடமும் பிரதியில்லை என்றார். மேலும் சில புத்தகங்கள் பிரதி காணாமல் போனதாக சொன்னார்.

அவருடைய வர்ணனைகளை அணுஅணுவாக ரசித்திருக்கிறேன்.

“டெல்லியில் காணமல் போன ஒரு பெண்ணைக் கண்டு பிடிப்பது குரங்கு ஒரு தமிழ் டைப் ரைட்டரில் உட்கார்ந்து அடித்தால் அது எப்படி கம்ப ராமாயணமாக வரும் சாத்தியமோ அவ்வளவு சாத்தியம்” என்று எழுதுவார். அவரால் தான் முடியும்.

அவர் மறைந்து போனாலும் அவருடைய பாதிப்பை இன்று பதிவுலகில் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

மே 13

தேர்தல் ஆணையம் கூடி கூடி பேசி, டீ குடித்து, சமூசா கடித்து தமிழக தேர்தல் நாளை அறிவித்துவிட்டார்கள். ஏப்ரல் பதிமூன்றாம் தேதியாம், முடிவு அறிவிக்க ஒரு மாதம் ஏன்?. அப்ப என்னா மசுருக்கு மின்னணு ஒட்டு எந்திரம்? சுஜாதா கேட்டார் என்றால் அதே கேள்வியைத்தான் கேட்டிருப்பார்.

மே பதிமூன்றாம் தேதி தமிழகத்தின் அடுத்த ஐந்து வருடகால “எழுதப்பட்ட” தலைவிதி அறிவிக்கப்படும் நாள்.

உலகக்கோப்பை கிரிக்கெட்

இம்முறை ஆட்டத்தைவிட பெப்சி விளம்பரம் நன்றாக உள்ளது. “உங்கிலி மெ டிங்கிலி” “உப்பர் கட்” ஹெலிகாப்டர் ஷாட்” “ஸ்லிங்கா” “அல்டி பால்டி” என்று கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். நல்ல கற்பனைதான்.

இங்கிலாந்து இந்தியாவிற்கு கண்ணை திறந்து விட்டார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் ஆப்பை அரை அங்குலம் காண்பித்து விட்டார்கள்.

பாகிஸ்தான் ஸ்ரீலங்காவிற்கு முழுவதுமே ஆப்பை சொருகிவிட்டார்கள். இப்பொழுது மேட்ச் பிக்சிங் என்று “மஹேலாவை” மல்லாக்கப் படுத்து புலம்ப வைத்திருக்கிறார்கள்.

இந்த வார ஜொள்ளு

Follow kummachi on Twitter

Post Comment

Tuesday 1 March 2011

பக்கெட் நாராயணன்

நான், நாராயணன், ஜோசப், மோகன், பஷீர், ரவி எல்லாம் ஒரே சமயத்தில் சென்னை வேலையை துறந்து துபாயில் வேலைக்கு சேர்ந்தோம். பின்பு எங்கள் சென்னை கம்பெனியிலிருந்து மேலும் ஒரு இருபது பேர் எங்களுடன் சேர்ந்து கொண்டனர். இதில் முக்கால்வாசி பேர் கல்யாணமாகாதவர்கள். நல்ல பேச்சிலர் லைஃப். வார கடைசியில் டாக்ஸி டிரைவர் பாரில் விடிய விடிய “ஜலப்ரவாகம்”. நாராயணன் ஒன்றரை கேன் பியருக்கே மட்டையாகிவிடுவான். மேலும் குடிக்குமிடத்தில் குமுறி கும்மியடித்துவிடுவான். ஆதலால் வாராவாரம் குடிக்குமிடத்தை மாற்ற வேண்டிய நிர்பந்தம். நாராயணனுடன் பக்கெட்டும் சேர்ந்துக் கொண்டது இதனால்தான். எப்படி?, அவசரபடாதீர்கள் சொல்லுகிறேன்.


எத்தனை நாளைக்குதான் வீட்டில் தனியாக இருக்க விடுவார்கள். மேலும் கூட இருக்கும் சில புல்லுருவிகளின் வேலையால் அவர் அவர்கள் வீட்டில் உஷாராகி கல்யாண ஏற்பாடு செய்து விட்டார்கள். இப்பொழுதுதான் பக்கெட் நாராயணன் உருவானான். ஏதாவது ஒருவன் கல்யாணமாகி புதிதாக வந்தால் பார்ட்டி என்ற பெயரில் எல்லோரும் ஆஜராகி, குப்பி உடைத்துவிடுவது தொன்று தொட்டு வரும் வழக்கம். நாரயணனுக்கு மூடியில் ஊற்றி கொடுத்தாலும் ரெண்டாவது மூடியில் வாந்தி எடுத்து அவர்கள் வீட்டை நாசம் செய்து விடுவான். ஆதலால் நாராயணனுக்கு ஊற்றும் முன்பே அவர்கள் வீட்டு குளியலறையிலிருந்து ஒரு பக்கெட்டை தயாராக வைத்துவிடுவோம். நாளடைவில் பக்கெட்டும் நாராயணனையும் பிரிக்க முடியாத காரணத்தால் நாராயணன் “பக்கெட் நாராயணன்” ஆனான்.

இங்கு நாங்கள் செய்யும் அலம்பல் இரண்டாயிரம் மைலாண்ட இருந்த எங்கள் பெற்றோரை எட்டி ஒவ்வொரு விடுமுறையிலும் தப்பி வந்து மிஞ்சியிருந்த ரவி, பஷீர், நான் மூவரும் ஒரு வழியாக கல்யாணம் செய்து செட்டில் ஆனோம்.

முதலில் ஒரு மூன்று மாதம் ஒழுங்காகப் போனது. அவனவன் குப்பியை மறந்து “புதிதாக திறந்த பப்பியை அடைகாத்துக் கொண்டிருந்தோம்”. குஞ்சு பொரிக்கும் வேளை வந்தவுடன் அவனவன் பழையபடி வீக் எண்ட் பார்ட்டி என்று ஏதாவது ஒரு வீட்டில் பக்கெட் சகிதம் ஆஜர்.

பின்பு கால ஓட்டத்தில் அவனவன் பிள்ளை குட்டி, ஸ்கூல் அட்மிஷன், என்று ஐக்கியமாகி தங்கமணியின் புடவை உள் பாவாடை துவைக்கப் போய்விட்டார்கள். பஷீர் இதில் ஆராய்ச்சி செய்து “டாக்க்க்க்குட்டர்” பட்டம் பெற்றது தனி கதை, வேறொரு பதிவில் பார்த்துக்கொள்ளலாம். பக்கெட் நாராயணனுக்கு வருவோம். நாரயணன் சிங்கப்பூர் சென்று விட்டான். அவனுக்கு இன்னும் கல்யாணமாகவில்லை.

அவனுடைய தொடர்பு டெலிபோன், மின்னஞ்சல் என்று தேய்ந்து அறுந்து போனது. போன கோடை விடுமுறையில் நாங்கள் ஒரு மூன்று நண்பர்கள் குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்றோம். என்னுடைய உறவினர் வீட்டில் விருந்து, நண்பர்கள் குடும்பத்தையும் கூட்டிச் சென்றோம். அங்கு வழக்கம் போல் பார்ட்டி, உறவினர் மனைவி “பக்கெட் நிர்மலா” வந்தவுடன் தொடங்கலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். எங்களுக்கு அதிர்ச்சி அந்த நிர்மலாவுடன் நம்ம பக்கெட் வந்தான். நிர்மலாவின் புருஷன், அவன் கல்யாணத்தை தெரியப் படுத்தாததற்கு அவனை அன்று குமுறு குமுறு என்று குமுறி விட்டோம்.

பின்பு தங்கமணிகள் தங்கள் அரட்டையை தொடங்க எங்களது தீர்த்தவாரி ஆரம்பம். ஒரு பதினைந்து நிமிடம் போன பின்பு அவன் மனைவி நிர்மலா சத்தமில்லாமல் வந்து நாராயணன் பின்னால் ஒரு பக்கெட்டை வைத்து விட்டு எங்களை பார்த்து ஒரு புன்னகை வீசி சென்றாள்.

நாராயணனின் வள்ளல் தன்மை இப்பொழுது புரிந்தது. தன் பட்டப் பெயரை மனைவிக்கு கொடுத்திருக்கிறான்.

Follow kummachi on Twitter

Post Comment