Tuesday 15 March 2011

கலக்கல் காக்டெயில்-25

நிலநடுக்கம், சுனாமி, அணு உலை வெடிப்பு.....................................


நிலநடுக்கம், சுனாமி, பயங்கர குளிர், அணு உலை வெடிப்பு, கதீர் வீச்சின் தாக்கம் என ஜப்பான் நிலை குலைந்துப் போயிருக்கிறது. பஞ்ச பூதத்தில் ஒரு பூதம் கோரத்தாண்டவனம் ஆடினாலே எந்த ஒரு நாடும் நிலை குலைந்து போகும். இங்கு ஐந்தோட ஆறாவதாக அணு உலை வெடித்த கதிர் வீச்சும் போட்டு தாக்கியிருக்கிறது. இரண்டாவது உலகப் போரையே கண்டு எழுந்து நின்றவர்களுக்கு இது ஒன்றும் இல்லைதான். இருந்தாலும் ஜப்பானியர்கள் இயல்பு வாழ்வு திரும்ப எல்லாம் வல்ல பூமித்தாயையும், கடல் தாயையும் கூடவே அணு பகவானையும் வேண்டிக்கொள்வோம்.

இரண்டே நாட்கள்


வேட்பு மனு தாக்கல் செய்ய இன்னும் இரண்டு நாட்கள்தான் உள்ளது. ஒரு வழியாக எண்ணிக்கையை முடிவு செய்துவிட்டார்கள். ஆனால் யார் யார் எங்கெங்கே என்பதில் இன்னும் குழப்பம். காங்கிரெஸ் அறுபத்து மூன்று வாங்கிய இடங்களுக்கு எதற்கு ஐவர் குழு என்று தெரியவில்லை. ட்வீடரில் ஒருவர் இதற்கு “வெண்ணிலா கபடி குழுவே போதுமே” என்கிறார். சரிதான்.

மன்சூரலிகான் வென்றால் வாஷிங்மெசின் கொடுக்கிறாராம். பவுடர் எவன் கொடுப்பனாம்?, தெரியவில்லை.

கார்த்திக் அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகினார் (செய்தி). உரிய மரியாதை இல்லையாம். தோடா இப்பதான் இவருக்கு தெரியுமாம்.

டாக்குடர் விஜய் உரிய மரியாதை இல்லையென்று படப் பிடிப்புக்காக வெளிநாட்டுக்கு “எஸ்” ஆகிவிடுவாராம். ஆனால் ஆதரவாக அறிக்கை விடுவாராம். ஏம்பா இதைக்கூட சொந்தமா செய்யமாட்டிங்களா? அதற்கும் அவரைத்தான் காபி அடிக்கனுமா?

வெளங்கிடும், வருங்கால முதலமைச்சரே?

ரசித்த நகைச்சுவை

தாத்தா பேரனிடம்

டேய் அஜய் போய் ஒளிந்து கொள்ளடா, உங்க மிஸ் தெருவிலே வாறாக, இன்றைக்கு பள்ளிக்கூடத்திற்கு மட்டம் போட்டு விட்டாய்.

பேரன் தாத்தாவிடம்

தாத்தா நீ போய் முதலில் ஒளிந்து கொள், நீ “அபீட்டுன்னு” சொல்லித்தான் மட்டம் போட்டிருக்கேன்.



இந்த வார ஜொள்ளு

Follow kummachi on Twitter

Post Comment

3 comments:

RayJaguar said...

karthik,vijay nu gumbal saeruthu! intha election comedy galaata thaan. by the by anushka superappu!!!!

settaikkaran said...

//ஜப்பானியர்கள் இயல்பு வாழ்வு திரும்ப எல்லாம் வல்ல பூமித்தாயையும், கடல் தாயையும் கூடவே அணு பகவானையும் வேண்டிக்கொள்வோம்.//

நாம் வேண்டிக்கொள்வோம். ஆனால், வருகிற தகவல்கள் அச்சுறுத்துகின்றனவே!

//ஆனால் யார் யார் எங்கெங்கே என்பதில் இன்னும் குழப்பம்.//

காங்கிரஸ் பட்டியலை வெளியிட்டுவிட்டார்களே?

//மன்சூரலிகான் வென்றால் வாஷிங்மெசின் கொடுக்கிறாராம். பவுடர் எவன் கொடுப்பனாம்?, தெரியவில்லை.//

பவுடரை விடுங்க, வாஷிங் மெஷினில் துணிதோய்க்க ஏதாவது ஆள் கிடைத்தால் பரவாயில்லை!

அனுஷ்கா படம் சூப்பர்! :-)

கத்தார் சீனு said...

காக்டெயில் கலக்கல்...
கடவுள் ஜப்பான் மக்களை காப்பாற்றுவாராக...
அனுஷ்கா அற்புதம்....

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.