Monday 7 March 2011

டாஸ்மாக்கில் கடவுள்

இன்னாபா கடையைத் தொறக்க இம்மாம் நேரம், ...த்தா கவ்மெண்டு ஆளுங்க என்னிக்கி கரீட் டயத்துக்கு வேலைக்கு வந்துகிறீங்க.


சரிபா எனிக்கு “பிராந்தி” ஒரு கட்டிங் கொடு.

இன்னது? காலைல லொள்ளு பண்ணாதே, கட்டிங் கிடையாதா?, க்வார்டரா வாங்கணுமா?.

தக்காளி அம்மாம் துட்டு இருந்தா நான் என் கட்டிங் கேக்குறேன்.

சரி இந்தா இத்த வச்சிக்கோ க்வர்டறு நெப்போலியன் கொடு.

ரூம்பு தொரந்துகீதா போவலாம் தானே.

டேய் பொட்டி ஒரு பாக்கிட்டு வாட்டரும் க்ளாசும் கொடு.

...த்தா துட்டு அப்பால தரேன்டா.

மவனே ரூம்பு வச்சிகிரானுங்க பாரு பேமானி, குந்த ஒரு பெஞ்சி கீதா.

மவனே இன்னா சரக்கு கொடுக்கிரானுங்க டாஸ்மாக்கில ரெண்டு கிளாசு வுட்டும் ஏற மாட்டேங்குது.

ஆ வா தல, இன்னா ஷோக்கா கீரபா, இன்னாபா தலிக்கு பின்னால விளக்கு எரியுது, சாமி நீ கடவுள் தானே.

அஹ சொம்மா சொல்லாதே, ஐய கால கவைக்குள்ள உட்டுக்கினு குந்திகின்னு இருப்பாரே அஹான் யோவ நீ அவருதானே, சாமீ மன்னிச்சுக்க.

இந்நாது இல்லியா, அஹான் இல்லே மூஞ்சில முள்ளு முள்ளா தாடி வுட்டுகினு கீரே அஹான் நீ அவருதான், சாமீ இந்தப் பாவிய மன்னியு சாமீ.

ஏன் சாமீ பேஜாரயிட்டே.

அதோ சொவுத்துல எய்தி கீரானுன்களே “நீ தோக்க மாடீனு எய்திகிறது கீய ஒரு பேமானி அப்ப உன்னிய பரீட்சை எய்த சொல்லுன்னு எய்திகிரானே” அத்த கண்டுகினு பெஜாராய்ட்டியா.

அய்ய இன்னா ஒன்னியம் சொல்ல மாட்டேங்கிறே.

ஐய மல மேல கோவணம் கட்டிக்கினு இருப்பார் அவரா நீ, உனுக்கு இன்னாபா ரெண்டு வச்சிகிரே, மவனே எனக்கு ஒன்னு வச்சிக்கின்னு டப்பா டான்ஸ் ஆடுது.

அமிஞ்சிக்கரை அஞ்சலை வேறே காசு கேட்டு மெர்சல் பண்றா நைனா.

அத்த வுடு, நீ எந்தக் கடவுள் சொல்லு.

இன்ன நீ கடவுள் இல்லியா.

அஹான் இப்படித்தான் ஒரு கூட்டம் சொல்லிக்கினு காசு பாக்கரானுங்கோ.

தோ சும்மா கமால் காட்டாதே வாத்தியாரே, உன்னியப் பார்த்தாலே கடவுள் மாதிரி கீரே.

சரி அல்லாருக்கும் அல்லாம் குடுக்கிரியே, நமக்கு ஏதாவது செய் தல.

இன்னாது இன்னா வேணுமா.

ஒரு ஹாபுக்கு வழி பண்ணு சாமீ.

இன்னது துட்டு இல்லியா.

அப்பா இன்னா மயிருக்கு இந்நேரம் குந்திக்கின்னு ஒரு பீர் சப்பிக்கின்னு எண்ணிய லுக்கு வுட்டுகினு கீரே.

..த்தா ஏய் கடவுள, வாங்கிக் கொடுத்துக்கினு போய்க்கினே இரு

யோவ் இன்னாயா கூவிகினேகிறேன் போய்க்கினே கீரே.

மவனே நீ கடவுள இருந்தாலும் எங்கக் கிட்டதான் மவனே வருவடி

உன்னாண்ட கூட்டணி சொல்லிகினு இருந்தவனே எங்க போயிருக்கான் பாரு?.

Follow kummachi on Twitter

Post Comment

5 comments:

Yoga.s.FR said...

நல்லாகீதுப்பா!கண்டினியூ பண்ணு!!கடவுள கீசிடாத!!!!!!!!!!!

Chitra said...

இன்னாபா கடையைத் தொறக்க இம்மாம் நேரம், ...த்தா கவ்மெண்டு ஆளுங்க என்னிக்கி கரீட் டயத்துக்கு வேலைக்கு வந்துகிறீங்க.


.......வெளங்கிரும்.

Chitra said...

உன்னாண்ட கூட்டணி சொல்லிகினு இருந்தவனே எங்க போயிருக்கான் பாரு?.


..... hilarious!

டக்கால்டி said...

இன்னா நைனா?பேஜாரா எழுதி மெர்சல் ஆக்குறியே?ஷோக்கா தான் சொல்லிகீர... ஆத்திகனுங்கோ வந்தாங்கோ டங்குவார டார் ஆக்கிடுவானுங்கோ மாப்ளை... வர்ட்டா

RayJaguar said...

kadasi line!! "captain" taar taar taar

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.