Wednesday 2 March 2011

கலக்கல் காக்டெயில்-23

சுஜாதா- நினைவுநாள்


சுஜாதா மறைந்து மூன்றாண்டுகள் ஆகிவிட்டன. எனக்கு சுஜாதா புத்தகங்களின் அறிமுகம் “ப்ரியா” காலத்திலிருந்து தொடங்கியது. அவருடைய புத்தகங்கள் என்னிடம் அனைத்தும் உள்ளன, ஒன்றைத் தவிர “செப்டம்பர் பலி” என்ற புத்தகம் லெண்டிங் லைப்ரரியிலிருந்து வாங்கிப் படித்தேன். அப்பொழுதெல்லாம் வாடகைக்கு புத்தகம் வாங்கிப் படித்த காலம். பின் வேலைக்கு சென்றவுடன் வாரம் ஒரு புத்தகம் என்று வாங்கினேன். பின்பு இப்பொழுது அவ்வப்பொழுது அள்ளிக் கொள்கிறேன். இரண்டு அலமாரிகள் நிறைந்து இப்பொழுது தங்கமணியுடன் மல்லுகட்டிக்கொண்டிருக்கிறேன். எங்கும் தேடிவிட்டேன் செப்டம்பர் பலி கிடைக்கவில்லை.

ஒரு முறை மின்னம்பலத்தில் அவருடன் chat செய்யும் பொழுது இந்தப் புத்தகத்தை பற்றிக் கேட்டேன். அவரிடமும் பிரதியில்லை என்றார். மேலும் சில புத்தகங்கள் பிரதி காணாமல் போனதாக சொன்னார்.

அவருடைய வர்ணனைகளை அணுஅணுவாக ரசித்திருக்கிறேன்.

“டெல்லியில் காணமல் போன ஒரு பெண்ணைக் கண்டு பிடிப்பது குரங்கு ஒரு தமிழ் டைப் ரைட்டரில் உட்கார்ந்து அடித்தால் அது எப்படி கம்ப ராமாயணமாக வரும் சாத்தியமோ அவ்வளவு சாத்தியம்” என்று எழுதுவார். அவரால் தான் முடியும்.

அவர் மறைந்து போனாலும் அவருடைய பாதிப்பை இன்று பதிவுலகில் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

மே 13

தேர்தல் ஆணையம் கூடி கூடி பேசி, டீ குடித்து, சமூசா கடித்து தமிழக தேர்தல் நாளை அறிவித்துவிட்டார்கள். ஏப்ரல் பதிமூன்றாம் தேதியாம், முடிவு அறிவிக்க ஒரு மாதம் ஏன்?. அப்ப என்னா மசுருக்கு மின்னணு ஒட்டு எந்திரம்? சுஜாதா கேட்டார் என்றால் அதே கேள்வியைத்தான் கேட்டிருப்பார்.

மே பதிமூன்றாம் தேதி தமிழகத்தின் அடுத்த ஐந்து வருடகால “எழுதப்பட்ட” தலைவிதி அறிவிக்கப்படும் நாள்.

உலகக்கோப்பை கிரிக்கெட்

இம்முறை ஆட்டத்தைவிட பெப்சி விளம்பரம் நன்றாக உள்ளது. “உங்கிலி மெ டிங்கிலி” “உப்பர் கட்” ஹெலிகாப்டர் ஷாட்” “ஸ்லிங்கா” “அல்டி பால்டி” என்று கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். நல்ல கற்பனைதான்.

இங்கிலாந்து இந்தியாவிற்கு கண்ணை திறந்து விட்டார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் ஆப்பை அரை அங்குலம் காண்பித்து விட்டார்கள்.

பாகிஸ்தான் ஸ்ரீலங்காவிற்கு முழுவதுமே ஆப்பை சொருகிவிட்டார்கள். இப்பொழுது மேட்ச் பிக்சிங் என்று “மஹேலாவை” மல்லாக்கப் படுத்து புலம்ப வைத்திருக்கிறார்கள்.

இந்த வார ஜொள்ளு

Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

RayJaguar said...

sujatha endrum manathil irukkiraar. by the way indha world cup india alla south africa ivargal iruvaril oruvar mattum dhaan jaikka vaendum!!!!

Chitra said...

அவருடைய வர்ணனைகளை அணுஅணுவாக ரசித்திருக்கிறேன்.

“டெல்லியில் காணமல் போன ஒரு பெண்ணைக் கண்டு பிடிப்பது குரங்கு ஒரு தமிழ் டைப் ரைட்டரில் உட்கார்ந்து அடித்தால் அது எப்படி கம்ப ராமாயணமாக வரும் சாத்தியமோ அவ்வளவு சாத்தியம்” என்று எழுதுவார். அவரால் தான் முடியும்.


.... He was a unique writer.

கத்தார் சீனு said...

வாத்தியார் வாத்தியார் தான் சார். அவர் மறைந்தாலும் அவர் விட்டுச்சென்றவை எல்லா காலத்துக்கும் அவர் பெர்யர் சொல்லும். நேத்து கூட அவருடைய கற்றதும் பெற்றதும் இன்னொமொரு முறை படிச்சிக்கிட்டு இருந்தேன்.

"இறந்ததும் என்ன ஆகிறது என்பதைப் பற்றி நசிகேதனைப்போல யோசிக்கும் போது, சட்டென்று ஒரு திடுக்கிடல் ஏற்படும். அந்தச் சமயத்தில் மல்லிகை வாசனையையோ, ஒரு குழந்தையின் புன்சிரிப்பையோ எண்ணிப் பார்த்துக் கவனத்தைக் கலைத்துக்கொள்வேன். சொர்க்கம், நரகம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கே தான் என்று எண்ணுகிறேன். அப்படி ஒருக்கால் இருந்தால், நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கே தான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச் சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது"

கும்மாச்சி said...

கத்தார் சீனு வருகைக்கு நன்றி, சுஜாதாவை பற்றி எழுத இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.