Monday 26 August 2019

கலக்கல் காக்டெயில் -192

திமுக

தி.மு.க விற்கு பலவிதமான விளக்கங்களை பார்த்திருக்கிறோம்,

திருட்டு முட்டாள் கழகம்
திருக்குவளை முன்னேற்ற கழகம்
திருடர்கள் முன்னேற்ற கழகம்

இப்பொழுது திராவிட முஜஹிதீன் கழகம்

மாரிதாஸ் யு ட்டுயூபில் போடும் ஆதாரங்களைப் பார்த்தால் திமுக விற்கும் பாக்கிஸ்தானுக்கும் சம்பந்தம் இருக்குமோ இருக்காதோ தெரியாது, ஆனால் கட்டாயமாக காஷ்மீர் அரசியல் தலைவர்களுடன் சம்பந்தம் இருப்பது புலனாகிறது. மேலும் முப்டி, அப்துல்லா குடும்பங்களின் வாரிசுகள் சென்னையில் வசிப்பதாகவும், கட்டுமரக் குடும்ப வாரிசுகளுடன் வியாபாராம் செய்வதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் மாரிதாசின் பதிவிற்குப் பிறகு, உபீஸ் பொங்குவதும், கொலைமிரட்டல் விடுவதையும் பார்த்தால் "நெருப்பில்லாமல் புகையாது போலிருக்கிறது"

மேலும் தீவிரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவல் என்ற செய்தி திராவிட முஜஹிடீன் கழகத்தின் சமீபத்திய டெல்லி போராட்டத்தின் வீர்யத்தை!!! குறைக்க செய்யப்பட்ட திசை திருப்பல் நடவடிக்கை என்று மிருகபுத்திரன் முகநூல் பொங்கல் திமுக கலங்கி இருப்பது தெரிகிறது. ஏதோ நடக்கிறது, பொறுத்திருந்து பார்ப்போம்.

ப.சி திருவிளையாடல்

 ப.சிதம்பரம் முன்ஜாமீன் மறுக்கப்பட்டு இருபத்தியேழு மணி நேர ஓடி ஒளிந்த பிறகு சுவரேறி குதித்து கைதி செய்யப்பட்டது நாடறிந்த விஷயம். அவரது விசாரணை போகும் போக்கைப் பார்த்தல் ஒன்று நன்றாக தெரிகிறது, வினைவிதைத்தவன் வினையறுப்பான். இந்திராணி முகர்ஜி, பெண் நிருபர்கள் ஜல்சா என்று காட்சிகளை போட்டுக் காட்டி முன்னாள் நிதியமைச்சரை கலங்கடித்து  உண்மையை வரவைக்கிறார்களாம். சிபிஐ விசாரணை எப்படி இருக்கும் என்று ஓரளவிற்கு நமக்கு தெரியும்.

ஒரே கேள்வியை வேறு வேறு நபர்கள் கேட்பார்களாம், தொடர்ச்சியாக யாராலும் பொய் சொல்லமுடியாது கான்செப்ட் தான்.

ப.சி கூட ஒரே கேள்வியை திரும்ப திரும்ப கேட்கிறார்கள் என்று புலம்புகிறார். அவருக்கு தெரியாததா இந்த விசாரணையின் போக்கு பற்றி.

இந்த ஊழல் வழக்குகள் பலவற்றை நாம் பார்த்திருக்கிறோம், கடைசியில் இதன் முடிவு என்னவென்று ஓரளவிற்கு யூகிக்க முடிகிறது.

ரசித்த கவிதை 

தாக்கம்

நினைத்த நேரத்தில் 
பறந்து விடுகின்றன பறவைகள்
பாவம் கிளைகள்தான்
நீண்டநேரம் அசைந்து கொண்டிருக்கின்றன.

நன்றி: திரு வெங்கட்

திரையுலகம் 

தமிழ் திரையுலகம் இன்னும் சரியாக உபயோகிக்காத தமிழ் நடிகை "கயல் ஆனந்தி" என்று சமீபத்தில் அவர் படங்களை பார்த்த பின்  தோன்றியது எனக்கு மட்டும்தானா?.


Follow kummachi on Twitter

Post Comment

3 comments:

KILLERGEE Devakottai said...

கேனப்பயல்கள் ஓட்டுப்போட்டு கிறுக்குப்பயல்கள் நாட்டாமை.

திரையுலகுக்கு தங்களது உதவி பெரும்பேறு.

வெங்கட் நாகராஜ் said...

தொடர்கிறேன்.

வேகநரி said...

திராவிட முன்னேற்ற கழகம் மதவெறியன் முஜாஹிதீனை பின்பற்றும் திராவிட முஜாஹிதீன் கழகமாக மாறிவிடுமா? வேதனையாக உள்ளது.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.