Saturday 4 June 2011

அடுத்த ஐந்தாண்டுகள் தமிழர்களின் பொற்காலம்

இந்தப் பதிவை இடுவதனால் நான் தி.மு.க. அனுதாபி அல்ல. அம்மா வந்தவுடன் ஏதோ தமிழ் நாட்டில் தேனும் பாலும் ஓடும் என்று நினைத்த மக்களுக்கு இன்றைய ஆளுநர் உரை வைத்தது பெரிய ஆப்பு. அம்மா போடும் திட்டங்கள் எதிர் பார்த்த ஒன்று தான். ஏன் என்றால் சில ஜென்மங்கள் என்றும் திருந்தாது. திரை உலகத்தினரின் விழாவை புறக்கணித்த முதலமைச்சர் மாறிவிட்டார் என்று நினைத்தேன் அதற்கும் இன்று விழுந்தது இடி. நவரச நாயகன், இளையதலைவலி, அவன் அப்பன் என்று போயஸ் தோட்டத்தில் கூஜா, சொம்புடன் அலைந்த செய்தியை ஜெயா டிவியில் காண்பித்தார்கள்.


போன ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களை எல்லாம் கிடப்பில் போட்டு புதிய திட்டங்கள் ஆரம்பிப்பதின் ஒரே நோக்கம் எங்க கட்சி ஆளுங்களுக்கு காண்ட்ராக்ட் கொடுக்க வேண்டும் என்பதே. இதன் விளைவுகள் நாம் வாங்கும் அரிசி, உப்பு, பருப்பு, புளியில் எதிரொலிக்கும்.

பதினைந்தாயிரம் கோடி செலவில் தொடங்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை கிடப்பில் போட்டு, அம்மா தொடங்கும் முன்னூறு கிலோமீட்டர் தூரத்திற்கு ஓடப் போகும் மோனோ ரயில் திட்டமாம். இந்த மாதிரி மோனோ ரயில் திட்டங்கள் சிறுவர் பூங்காவில் செல்லுபடியாகும். ஒரு மாநகரத்தின் போக்கு வரத்து நெரிசலை போக்க போனியாகாது. ஏற்கனவே இதைப் போன்று ஜல்லியடித்த மலேசியா, சீனாவில் இந்த திட்டம் நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது உலகம் அறிந்த உண்மை. நம் தமிழ் மக்களுக்கு இதையெல்லாம் அறிந்து பார்க்கும் அனுபவம் இருந்ததாக சரித்திரம் இல்லை. பணப்புழக்கம் இல்லை என்று ஆட்சி மாற்றியவர்கள் தான் நாம் “முன் தோன்றி மூத்தகுடி”.

அம்மா வந்தவுடன் மணல் கொள்ளை நின்று விடும், கள்ளச்சாராயம் ஒழிந்து விடும் என்று நினைத்த பாமர அப்பாவி மக்கள் இப்பொழுது புரிந்து கொண்டிருப்பார்கள் கொள்ளை “கை மாறிய” செய்தியை.

நான் மாலை வேலையில் நடந்து செல்லும் பாதையில் உள்ள “தியசாபிகால் சொசைட்டி” சுவர்களில் தமிழை காத்த ராஜ ராஜ சோழன் சுவரொட்டிகள் அகற்றப்பட்டு அம்மா புகழ் பாடும் சுவரொட்டிகள் காண்பதை தவிர வேறு ஒரு மாற்றம் நிகழ தமிழகத்தில் வாய்ப்பில்லை.

வாழ்க தமிழ், வாழ்க தமிழ் நாடு.

Follow kummachi on Twitter

Post Comment

3 comments:

மாசிலா said...

//அம்மா வந்தவுடன் மணல் கொள்ளை நின்று விடும், கள்ளச்சாராயம் ஒழிந்து விடும் என்று நினைத்த பாமர அப்பாவி மக்கள் இப்பொழுது புரிந்து கொண்டிருப்பார்கள் கொள்ளை “கை மாறிய” செய்தியை//

சரியா சொன்னீங்க. முதல் பெருச்சாலியை விட இந்த பழைய பெருச்சாலியே தேவலாம் என்கிற மன விரக்திதான் மக்கள் இது போன்ற பாவச்செயல் செய்ய உந்தப்படுகிறார்கள். இளைய தலைமுறை திறமையாளர்கள்தான் எதிர்காலத்திற்கு தேவை.

RayJaguar said...

no no you are mistaken!!. Actually her rule will be very good except for her anti-govt staff policies.Even that i think she wont repeat this time... lets hope for a peaceful and developed rule

saravanakumar sps said...

சரியான தலைமையை தேடும் தமிழர்கள் ஒன்றிணைந்து புதியதோர்சட்டம் இயற்ற வழிவகை தேடவேண்டும்

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.