Thursday 29 May 2014

கோச்சடையான்---------பார்த்தாச்சு..

கோச்சடையான் வெளிநாடுகளில் போன வியாழக்கிழமையே வெளிவந்து விட்டது. அப்பொழுது கடல் நடுவே ஆணி பிடுங்கிக்கொண்டிருந்ததால் பார்க்க முடியவில்லை. இரண்டு வாரம் விடுமுறையில் நாட்டிற்கு செல்வதால் அங்கு பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்து விட்டேன்.

இன்று சாந்தம் திரையரங்கில் படத்தை ரஜினி ரசிகர் கூட்டத்தோடு பார்க்க முடிந்தது.

ஏற்கனவே கோச்சடையான் பற்றி நம் பதிவர் பெருமக்கள் ஏகத்திற்கும்   விமர்சனம் எழுதிவிட்டனர் ஆதலால் புதிதாக எழுத  ஒன்றும் இல்லை.

படத்தை பற்றிய எதிர்மறை விமர்சனங்கள் படம் வெளிவரும் முன்பே அவரவர்கள் குத்தி குத்தி கிழித்து விட்டதால் படம் "பூட்ட கேசு" என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால் படம் பார்த்த பொழுது ஒரு புது அனுபவம்.

படத்தில் அனிமேஷனில் நிறைய குறைகள் இருந்தாலும் படம் நல்ல திரைக்கதை, ரஜினியின் காந்தக்குரல், ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் நம்மை கட்டிப்போடுகிறது.

இது பொம்மை படம் என்று சொன்னவர்களுக்கு, படத்தை கட்டாயம் ஒரு முறை பாருங்கள், நிச்சயம் ரசிப்பீர்கள்.

இந்திய திரைப்பட வரலாற்றில் புதிய தொழிநுட்பத்தில் முதல் சோதனை முயற்சி. படம் முடிந்த பின்னும் கடைசியில் படம் எவ்வாறு உருவானது என்று காண்பிப்பதை மக்கள் கடைசிவரை பார்த்துவிட்டு  போவதிலிருந்து  இது இந்த புதிய தொழில்நுட்பத்திற்கு கிடைத்த வெற்றி என்று சொல்லல்லாம்.

Follow kummachi on Twitter

Post Comment

13 comments:

வருண் said...

நல்லதுண்ணே! :)

இப்போத்தான் வினவுனு ஒரு சில்லரைப் பயளுகக் கூட்டம் ஏதோ டிக்கட் விலைப்படி கணக்கு போட்டு தான் ஒரு முட்டாக்கூட்டம்னு உலகுக்குக் காட்டி இருக்காணுக.

அவனுக கணக்குப் படி, ஒரு ஷோவுக்கு சுமார் 200 பேர் அரங்கு நிறைந்த காட்சியாக பார்த்து இருந்தால் 3 நாட்களிலே படம் 200 கோடியைக் கடந்து இருக்கும். :)

இந்தமாரி சிவப்புச் சட்டை அணிந்த கூமுட்டைகள்தான் தமிழ் பதிவுலகில் புரட்சி எலிகளாம்! :) என்னத்தைச் சொல்ல!

கும்மாச்சி said...

வருண் சூரியனைப் பார்த்து நாய் குலைக்கிறதுன்னு விட்டு தள்ளுங்க, படம் குடும்பத்தோடு கண்டு களிக்கலாம். மற்றபடி கலெக்ஷன் பற்றியெல்லாம் நமக்கு கவலை இல்லை.

”தளிர் சுரேஷ்” said...

நானும் பார்க்க வேண்டும்! பகிர்வுக்கு நன்றி!

கும்மாச்சி said...

சுரேஷ் படம் பாருங்கள், குழந்தைகளையும் கூட்டி செல்லுங்கள்.அவசியம் முப்பரிமாணத்தில் பாருங்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த வாரம் தான் பார்க்க வேண்டும்...

r.v.saravanan said...

நான் சாந்தம் திரையரங்கில் இரண்டு நாட்கள் முன்பு பார்த்தேன் நீங்கள் இன்று பார்த்தீர்களா படம் குடும்பத்துடன் சென்று பார்க்கலாம்

அருணா செல்வம் said...

நான் ரஜினியின் தீவிர ரசிகையெல்லாம் இல்லை.
இருந்தாலும் எனக்குப் படம் பிடித்திருந்தது கும்மாச்சி அண்ணா.

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

சரவணன் மிக்க மகிழ்ச்சி.

கும்மாச்சி said...

அருணா நன்று, வருகைக்கு நன்றி.

J.Jeyaseelan said...

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இரண்டு முறை இந்த படத்தை பார்த்துவிட்டேன், இரண்டு முறையும் மேக்கிங் வீடியோவை பார்த்த பிறகுதான் மக்கள் எழுந்து வெளியே செல்கிறார்கள். இது ஒன்றே போதும்.....

drogba said...

எனக்கு படம் நன்றாக பிடித்திருந்தது. ஆனால் ஒரு doubt!! இங்கு motion capturingற்கு என்ன அவசியம்??

saamaaniyan said...

நான் இன்னும் படம் பார்க்கவில்லை !

குறைகள் இருந்தாலும், தமிழ் சினிமாவை மற்றொரு புதிய தளத்திற்கு இட்டு செல்லும் முயற்சி என்பதால் நிச்சயம் பாராட்டலாம்.

நேரமிருப்பின் எனது வலைப்பூவுக்கு வருகை தந்து உங்களின் எண்ணங்களை பகிருங்கள்.

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.