Tuesday 28 October 2014

டீ வித் முனியம்மா பார்ட்-24

டேய் மீச ரண்டு இட்லி வடகறி குடு....

இன்னாடா செல்வம் ரண்டு இட்லி ஏன் மூணுதான் சொல்றது.


அடப்போ முனிம்மா காலிலேயே பேஜார் செய்யாத, மூணாவது இட்லி அடுத்த ஆளுது, வந்து அதுல ஆட்டையப் போட்டா கம்மூனிஸ்ட்டுங்க காண்டாய்டுவானுங்க, சொல்லிகிறாங்க.

அடப்போடா, கோடி கோடியா சம்பாரிக்கிறவனுங்க சினிமாவுல வசனம் பேசுவானுங்க அதுக்கு பிகில் உட்டு இங்க வந்து பேசுற, டேய் உன்னிய மாதிரி ஆளுங்கலாலத்தான் எளிக்சணுல துட்டு கொடுத்து அப்பால நம்ம துட்டுல ஆட்டையப் போடுறானுங்க.......இன்னா சொல்லுற பாய்.
டேய் செல்வம் அஞ்சலைய கண்ணாலம் கட்டிகினு வாராவதியாண்ட ஒரு  பிகர ஓரம் கட்டுறியே அங்க எங்கடா போச்சு உன் கம்மூணிசம்.

அஹான் முனிம்மா அந்த சினிமாவ கண்டுக்கினுதான் ஒருத்தன் மப்பாய் பாடிக்கினே போறான்
கொக்க கோலா பிரவுனு கலருடா
என் அக்கா பொன்னும் அதே கலருடா
கொயாவுல தண்ணி வரலடா-என் வாயில
வண்ட வண்டயா வருதுடா..........

டேய் மீச டீ போடுறா......இன்னாடா டீ வெலை ஏறிடுச்சா.

அதே முனிமா பாலு எறிப்போயில்லே.

வெலை ஏறாத சொல்லவே நீ பாலுல தண்ணி ஊத்துவ, இப்ப இன்னா மீச தண்ணில பால ஊத்துறையா? இன்னிக்கி செத்தா நாளிக்கி பாலுன்னுவானுங்க, இப்போ அதுக்கே வழியில்ல....நாமெல்லாம் அப்பீட் ஆயிட்டா பாலு கெடியாது..........தண்ணிதான் ஊத்துவானுங்க போல.

இன்னா முனிம்மா இன்னா................ மய பெயுது...

அதானே பாய், இந்தாளு பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஆனாரு, மய பொத்துகிட்டு ஊத்துது, மக்கள் முதல்வர் இருக்கசொல்ல மய இல்ல, ஆனா பாரு லிங்கம் சார், தெருவெல்லாம் ஒரு தொண்டி உயுந்து போயி, அங்க அங்க பொத்தலாகீது.....இந்த கார்பரேசன் காரனுங்க இன்னா செயுரானுங்களோ.

மேயரு, அமைச்சர் அல்லாரும் மக்கள் முதல்வர் வயக்குலேர்ந்து வெளிய வர மண் சோறு துன்றாணுக, அவிங்களுக்கு எங்க இதுக்கு நேரம்?

இன்னா முனிம்மா அடுத்த கேசு வருதுபோல.......

அதான் லோகு சாரு, இப்போ 2G கையில எடுத்துகிறானுங்க.

எவன் எவனுக்கு ஆப்பு உயப்போவுதோ.

ஆமா நாடார், போன தபா அந்த ஆயா ஜெயிலுக்கு போவ சொல்ல நான் பேசறத பார்த்து ஒரு பாடு சொல்லுறான், நீ இன்னா களிஞருக்கு ஜால்ரான்னு.

அதுக்கு நீ இன்னா சொன்ன முனிம்மா.

டேய் லோகு எவன் கொள்ளையடிச்சாலும் தப்புடா........இதுல ஆயா என்ன தாத்தா என்ன?

இவனுக அதிகாரம் இருக்க சொல்ல, தேடி தேடி ஆட்டையப் போடுவானுங்க, அப்பால் அந்த துட்டு வச்சிகினு இனாம் குடுத்து ஆச்சியப் பிடிப்பானுங்க, அப்பால கேசு வந்திச்சினா அந்த துட்டு வச்சே வெளில வருவாய்ங்க. இன்னா ஜனநாயகமோ.

அது சரி முனிமா விலைவாசி ஏறிப்போச்சுன்னு நீ இன்னா மீன்கறி துன்னாமையா கீற.

அடேய் செல்வம் கவர்மெண்டுல வேலை செயுறவன், பெரிய பெரிய கம்பெனில வேல செயுறவன் அல்லாருக்கும் விலைவாசி எர்ச்சுன்னா பஞ்சப்படி அந்தப்படி இந்தப்படின்னு கொடுத்து சம்பளம் ஏத்திடுவானுங்க, பயம் விக்கிற உனுக்கு, பூ விக்கிற நமக்கு எவண்டா ஏத்துவான், நாம எட்டணா ஏத்தினா வந்துருவானுங்க இன்னா வேலைய ஏத்திட்டேனு.

அதான் முனிம்மா நீ சொல்றதும் சரிதான், நாம  வெலை ஏத்தி இன்னா ஸ்விஸ் பாங்குலேயா துட்ட வச்சிகீறோம்.

அதானே லோகு, இப்போ ஸ்விஸ் பாங்குல துட்டு வச்சிக்கிற நாலு பேர சொல்லிகிறாங்க.

இன்னும் யாரு யாரு வச்சிகிறாங்க?.

அது கச்சிகாரனா இருந்தா சொல்லமாட்டாங்க, அது அவனுக்குள அடுஜஸ்டுமெண்டு.

கரீட்டு முனிம்மா, வியாபாரிங்க பேர்தான் சொல்லிகிரானுங்க.

முனிம்மா இன்னா தீவாளிக்கு இன்னா செஞ்ச, படம் கிடம் பார்த்தியா?

அடப்போடா, தீவாளி அன்னிக்கும் வியாவாரம்தான்..........அப்பால நடுவீட்டுல படையலு வச்சி சாமி கும்புட்டேன்.........இன்னா படம்னாலும் டீவில போடுவானுங்க அப்பால பார்க்கவேண்டியதுதான்.

நல்லா வெவரமாத்தான் கீற முனிம்மா........

சரி முனிம்மா நூஸ் பேப்பர கொடு இன்னா படம் போட்டுக்கிறான்.......

டேய் செல்வம் நீ உருப்பட மாட்ட போ........படமெல்லாம் மேல போட்டுக்கிறான் பாரு......

Follow kummachi on Twitter

Post Comment

2 comments:

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

கும்மாச்சி said...

காசிராஜலிங்கம் வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.