Tuesday 14 October 2014

டீ வித் முனியம்மா-பார்ட் 23

இன்னாடா செல்வம் அல்லாருமா காலிலேயே வந்து டீக்கடையாண்ட குந்திகினு கீறிங்க. இன்னா பாய், நாடாரு, லிங்கம் சாரு, லோகு அல்லாம் வந்துகினிங்க இன்னா மேட்டரு.

ஐயே நீ லேட்டா வந்துகினு கேக்குது பாரு.......

டேய் பழம் இன்னாடா புரட்டாசி மாசம கோவிலாண்ட ஜனம் அள்ளுது, வியாவாரமும் வெரசா போய்கினு கீது.........பொயப்ப பாக்க வேணாம். இப்போ சம்பாரிச்சா தான்.........அப்பால கெடிக்காது.

சரி முனிம்மா நாஸ்தா துன்னுகினியா?

இன்னா லோகு நாஸ்தா துன்னல, நீ வாங்கித்தாரியா?

இன்னா வேணம் சொல்லு? இட்லி வடகறி துன்றியா? இல்ல இடியாப்பம் பாயா சொல்லட்டா?

இன்னடா லோகு துட்டு விளையாடுதா? அஹான் டப்பாசு கட வேற போட்டுகிற? சொல்லுடா அல்லாருக்கும் இட்லி வடகறி.

சரி முனியம்மா "புர்ச்சி தலவி" நூசு இன்னா?

பாய் கடையாண்ட தெனிக்கும் வருவாரு ஒருத்தரு? அவரு தீர்ப்பு நகலு வச்சிக்கினு பட்சாராம்? மைக்கலு நல்லா கொடுத்துகிராறாம் அப்படின்னு சொல்லிகினு கீறாரு.

மெயாலுமா?

அஹான் பாய். லோகு கடில பின்னு குத்தி விப்பானே பொஸ்தவம், அது போல ரொம்ப டாப்பா கீதாம்.

இன்னா சொல்லிகிறாராம்?

லிங்கம் சாரு, அந்தம்மாவும் கூட இருந்த கூட்டமும் நல்லாவே வெள்ளாடிகீறாங்க. மூவாயிரம் ஏக்கருக்கு நெலம் வாங்கிகீறாங்க. சார் பதிவாளர வூட்டுக்கே இட்டாந்து அல்லாம் எயுதி வாங்கிகீறாங்க.

இதுக்கு எல்லாம் துட்டு எங்கே?

அதே தாண்டா லோகு மைக்கேலு கேட்டுகிராறு?

முனியம்மா அது யாரு மைக்கேலு?

தோடா இம்மா நேரமாம் கதியா சொல்லிக்கினு கீறேன்? மைக்கேலு குன்னா ஜட்ஜுடா?

துட்டுக்கு நாங்க வாங்கின கம்பெனி துட்டுன்னு சொல்லிகிறாங்க.

அதுக்கு அவரு இன்னா சொல்றாரு?

ஜட்சு இந்த கம்பனிங்க துட்டு வந்து கணுக்கு காட்டுங்கன்னு கேட்டுகிராராம்?

அந்த கம்பெனி கணக்கு வயக்கு ஒன்நியம் இல்லையான்காட்டியும்?

ஆமாம் நாடார். அப்பால செட்டியாருங்க கம்பெனி பங்கு வாங்க சொல்ல தில்லு முல்லு பண்ணி ஆட்டைய போட்டுகிறாங்க.

முனியம்மா போயஸ் தோட்டத்துல எடுபிடி ஒருத்தரு இன்னாவோ சொல்லிகினாருன்னு பேசிகிரானுன்களே இன்னா மேட்டரு.

அஹான் லிங்கம் சாரு. ஜெயராமன்னு ஓராளு அங்க எடு பிடி வேல செஞ்சிகிராறு. அந்தாலாண்ட பணத்த மூட்ட கட்டி பேங்குல போட அடிகடிக்கு சொல்லுவாங்களாம். நம்ம மெட்ராசுல  மட்டும் பத்து பாஞ்சு கணுக்கு வச்சிகிரான்கலாம். அந்தாளும் அல்லாத்தையும் கொணாந்து பேங்குல போடுவாராம். அது எல்லாத்தையும் நேக்கா பாங்கு செல்லானில்ல, செலானு அத வச்சி கண்டு பிடிச்சிகிராங்கலாம்.

அப்பால வளர்ப்பு மவன் கண்ணாலத்துக்கு நாங்க துட்டு கொடுக்கல, சிவாஜி வூட்டுக்காரன்கதான் கொடுத்தாருன்னு சொன்னாங்களே அது இன்னாவாம்?

அஹான் பாய் சொன்னாங்க, ஆனா பந்த செலவுக்கு இந்தம்மாவே செக்குல கைஎயுத்து போட்டு கொடுத்து கீது? அதுல வேற வசமா மாட்டிக்கிச்சாம். அந்த செக்கு வேற கோர்ட்டுல காட்டிக்கிறாங்க.

அதான் சரியாதான் போட்டுகிறாங்க உள்ளார.

ஆமா லிங்கம் சார், அத தவிர இருவத்தியேழு கிலோ தங்கம் வச்சிகிறாங்க, அது ஒன்டியே எட்டு கோடியாம்.

அது மைசூரு மவராசா கொடுத்ததுன்னு சொன்னாங்களாமே?

அப்பால ஏதோ அருவத்தியாருல பாஞ்சு கோடிக்கு கணக்கு காட்நான்கலாம்? நமது எம்.ஜி.ஆறு பத்திரிகைக்கு சந்தா ன்னு சொல்லி.

அதுலேயும் தில்லுமுல்லு செஞ்சிகிறாங்க. மொதல்ல அந்த பில்லு எல்லாம் தாராந்து போச்சின்னு சொல்லிகிறாங்க. ஒரு காருல வச்சிருந்தோம் பில்லுங்கள கார எவனோ லவட்டிட்டிட்டான்  அப்படின்னு பீலா வுட்டுகிறாங்க. அப்பால வருமான வரிகாரன்  பில்லு காட்டிகிறான். ஆனா அல்லாம் 2008ல போட்ட பில்லாம். அதுக்கே சாட்சியா முன்னூறு ஆள கூண்டுல வச்சி கொடாஞ்சிகிராறு.

சரி முனியம்மா இப்போ ஜாமீனு கேக்குறாங்களே இன்னதான் ஆவும்?

ரொம்ப கஸ்டம் பாய், இப்போதிக்கி கடிக்காது. தீவாளிக்கி அங்கேயே களி துன்ன வேண்டியதுதான்.

இத கேலு நாடாறு, அன்னிக்கு கடியாண்ட வளர்ப்பு மவன் கண்ணாலத்துக்கு இந்தம்மா துட்டு கொடுத்துகீதுன்னு சொல்லிகினுகீரன் ஒருத்தன் சொல்றான், அந்தம்மா கொடுத்திருக்கும் அப்பால நாராயணசாமி அப்பால கொடுக்குறேன்னு சொல்லியிருப்பாரு அப்படீங்கறான்.

சர்தான்.

யோவ் போயி பொயப்ப பாரு. அதெல்லாம் சொன்னா கோர்ட்டுல ஒத்துக்க மாட்டாங்க, ஆதாராம் வேணும் கியாபகம் வச்சிக்கன்னேன். இந்த கேள்விய கேட்டபேமானிதான் ஒருநாளு பூ வெலை ஏறிடுச்சு ஒரு ரூவா ஜாஸ்தி கொடுன்னா, இன்ன முனிம்மா பகல் கொள்ளையா கீதேங்குறான்.

ஜெயா டீ வி பாக்குற முனியமா ஒரே தமாசா கீது.

அஹான் பயம், இதய தெய்வம் உள்ளே கீது, அதால கட எல்லாம் தானா மூடிகீது, பஸ் எல்லாம் தானா எரியுது, கல்லெல்லாம் தானா பறக்குது அப்படின்னு சொல்லிகினு கீறான். அதெல்லாம் வுட படா தமாசு, புள்ளிங்க எல்லாம்  அம்மா கைத கண்டிச்சு ஸ்கொலு போவுதான்.

நல்ல தமாசுதான் போ.

சரி முனியமா இத்தையே  பேசிகினு பொயுத ஓட்டிட்டோம்.

சினிமா நூசு சொல்லு.

போடா செல்வம் தீவாளிக்கி நெரிய படம் வருது, போயி சேட்டு பொண்ணுங்கள  பாரு.
Follow kummachi on Twitter

Post Comment

No comments:

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.