Monday 6 October 2014

கலக்கல் காக்டெயில்-158

பொய் வழக்கும், புளித்துப்போன அரசியலும்.

நீதிபதி குன்ஹா தீர்ப்பை எதிர்த்து ஆளும் கட்சியினர் செய்யும் ஆர்ப்பாட்டங்கள் எல்லாவற்றையும் இந்த உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. கட்சித்தலைமையின் கவனத்தை கவர அழுவாச்சி பதவியேற்பு விழா, உண்ணா விரதங்கள், காமெடி பீசுகளின் போஸ்டர்கள் என்று தமிழகம் சிரித்துக்கொண்டிருக்கிறது. அதில் ஒன்று குழந்தை அழுவதுபோல் போட்டு "காவிரியை வைத்துக்கொள் அம்மாவைத்தா" என்று உச்சகட்ட காமெடி. காவிரியை வைத்துக்கொண்டால் பூவாவிற்கு என்ன செய்வதாம். மேலும் காவிரி என்ன ஏதாவது அல்லக்கையின் சின்னவீடா?

.....க்காளி நேரம்டா...........ஆட்சி உங்களது இல்ல.........நடக்கட்டும்.................

நீதிபதியின் முழு அறிக்கை இப்பொழுது இணைய தளங்களில் வெளியாகிவிட்டது. அதன் நகலை இப்பொழுது தரவிறக்கம் செய்துகொள்ளலாம். 

அதில் நீதிபதி குறிப்பிட்டிற்கும் ஒன்று "இதை பொய் வழக்கு என்று கருதமுடியாது இதை ஏற்கனவே உச்சநீதிமன்றம் எதிர்கட்சி எனபது ஆளும் கட்சியை இதுபோன்ற பெரிய ஊழல்களை மக்கள் குரலாக இருந்து தடுக்க வேண்டும் அல்லது வெளிக்கொன்டு வரவேண்டும்" என்று குறிப்பிட்டு அந்த குற்றசாற்றை இந்த வழக்கில் நிராகரித்து உள்ளது.

மேலும் பிரதிவாதிகளின் வழக்குரைஞர்கள் வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்க்கவில்லை என்பதற்கான ஆதாரங்களை காட்டவில்லை. 66 கோடிக்கு வெறும் பதினொரு கோடிக்கு மட்டுமே ஆதாரங்களைக் காட்டியிருக்கிறார்கள்.. 

மேலும் வேண்டுமென்றே தசரா விடுமுறைக்கு முன்பு சிறை வைத்தார்கள் என்ற குற்றசாட்டுக்கும் பிரதிவாதிகளின் வழக்குரைஞர்களே பொறுப்பு. முதலில் தீர்ப்பு செப்டம்பர் 20ம் தேதி தான்  வருவதாக இருந்தது, ஆனால் தீர்ப்பை முன்னாள் முதலமைச்சரின் பாதுகாப்பு கருதி வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரியதால் தீர்ப்பு தேதி தள்ளிப்போனது. அப்பொழுதும் நீதிபதி இந்த தேதியை அறிவித்த பொழுது கூட்டுத்தொகை ஒன்பது வருவதால் அம்மாவுக்கு ராசி எண், நல்லது என்று ஒத்துக்கொண்டதாக தெரிகிறது.

ஆதலால் இந்த தீர்ப்பை இவர்களேதான் தேடிக்கொண்டார்கள். இதற்கு இப்பொழுது ஆர்ப்பாட்டங்களும், உண்ணாவிரதங்களும் தேவையா?

இந்தியாவை சுத்தம் செய்வோம்

பிரதமர் மோடி அமெரிக்கா சென்று திரும்பி வந்த கையுடன் "வாருகோலை" எடுத்துக்கொண்டு இந்தியாவை சுத்தம் செய்யக்கிளம்பிவிட்டார். இந்த தூய்மை இந்தியா திட்டத்தில் சேர  சச்சின் டெண்டுல்கர், சல்மான் கான், கமல் எல்லோரையும் அழைத்திருக்கிறார்.

நல்ல முயற்சி. "நம்மவர்" இதை ஏற்றுக்கொண்டுள்ளார். 

சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடுதான்
சுத்தம் என்பதை மறந்தால் நாடும் குப்பை மேடுதான் 

என்று நினைவுகொண்டு நாமும் முதலில் நமது வீட்டையும் அதன் சுற்றுப்புறத்தையும்  சுத்தமாக வைத்திருப்போம். 

ரசித்த கவிதை

குப்பையை அகற்ற வேண்டாமா 

எங்கு காணிலும் குப்பையடா-நம்
   எழில்மிகு சென்னை காட்சியடா
பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில்
    போடுவார் மேலும் எட்டியடா
தங்கும் மழையின் தண்ணீரும்-செல்ல
   தடைபட அந்தோ! மிகநாறும்
இங்கே எடுக்க ஆளில்லை-அதை
   எடுத்துச் சொல்லியும் பலனில்லை

பாதையில் நடக்கவே வழியில்லை-குப்பை
      பரவிக் கிடப்பது பெருந்தொல்லை
வேதனை  தீரும் வழிகாண்பீர்-எனில்
      வீணே நீரும் பழிபூண்பிர்
சோதனை போல கொசுக்கடியே-எடுத்து
      சொல்ல இயலா நெருக்கடியே
நாதம் இசைத்தே படைபோல-எமை
      நாடி வருமோர் தினம்போல

தொற்று நோயும்  வருமுன்னே-எண்ணி
     தொடங்குவீர் தூய்மைப் பணிதன்னை
மற்றது பின்னர் ஆகட்டும்-குப்பை
     மலையென கிடப்பது போகட்டும்
குற்றம் சொல்வது  நோக்கமல-இது
     குத்தும் கவிதை ஆக்கமல
வெற்றுச் சொல்லும் இதுவல்ல-பட்ட
     வேதனை விளைவாம் இதுசொல்ல

அண்மை காலமாய் இவ்வாறே-ஏனோ
    அடிக்கடி நடப்பது எவ்வாறே
உண்மை எதுவோ வேண்டாமே-உரியோர்
    உணர்ந்தால் போதும் ஈண்டாமே
நன்மை ஒன்றே  உடன்தேவை-மா
     நகர ஆட்சிக்கு இப்பாவை
சொன்னேன் ஐயா! தவறில்லை-ஆவன
    செய்வீர் வேறு வழியில்லை!

       புலவர் சா இராமாநுசம்

ஜொள்ளு





Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

”தளிர் சுரேஷ்” said...

இந்த அல்லக்கைகள் எப்போதுதான் திருந்துவாங்களோ தெரியலை! தூய்மை இந்தியா திட்டம் சிறப்புதான்! பார்ப்போம்!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் said...

அரசியல் வியாதிகள்...
கவிதை அருமை...

சக்தி கல்வி மையம் said...

கவிதை அருமை..

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.