Sunday 16 January 2011

உறக்கம்


கடைசி வண்டியின்



கடந்து போன சத்தம்


முரட்டு செருப்பின்


வறண்ட தேய்ப்பு


ஒற்றை நாயின்


வெற்று ஊளை


கடுவன் பூனையின்


சல்லாப அழைப்பு


தோட்டத்தில் சலசலக்கும்


வறண்ட இலைகள்


அடுத்த வீட்டு


கிழவியின் மூச்சிறைப்பு


எதுவும் வேண்டாம்


ஏன் இழுத்து மூடியும்


மனதினை விட்டு


அகல மறுக்கும்


வெய்யிலில் முதுமை


கேட்கும் பிச்சை


நாடும் பொழுது


நழுவுகிறது.

Follow kummachi on Twitter

Post Comment

8 comments:

தங்கராசு நாகேந்திரன் said...

மனதில் வலியை உண்டு பண்ணும் கவிதை பாராட்டுக்கள்

கும்மாச்சி said...

நன்றி நாகேந்திரன்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

அருமை.. பாராட்டுக்களுன் வாழ்த்துக்கள்..

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி பிரஷா.

Chitra said...

மனதை கனக்க வைக்கும் கவிதைங்க....

கும்மாச்சி said...

நன்றி சித்ரா

மன்மதக்குஞ்சு said...

superrr

ஆர்வா said...
This comment has been removed by a blog administrator.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.