Friday 7 January 2011

கமல் எனும் அறிவுஜீவி, புடலங்காய்ஜீவி

“தமிழ் சாகுமாம்…



தமிழ் தெருப் பொறுக்குமாம்.’


வீடிழந்து, நாடிழந்து,


அக்காள் தங்கைகளின்


வாழ்விழந்து…


ஏதிலிகளாய் இடப்பெயர்வுற்று…


கொத்துக் கொத்தாய்


தம்


சொந்தங்களை


மொத்தமாய்ப் பலியெடுத்த


கொடுமைகளுக்கு


இன்னும் அழுதே முடிக்காத


அவர்கள் வாழும் (அ) பிழைக்கும்


இடத்திற்கே போய்..


பனையேறி விழுந்தவரை


மாடு


மிதித்ததைப் @பால…


வாடகை வண்டி ஓட்டுகிறவராக


ஓர் ஈழத் தமிழரை.. தங்களிடம்..


பாத்திரம்.. பிச்சைக் கேட்பவராக..


கதா பாத்திரமாக்கி..


ஒரு செருப்பாக அன்று..


இரு செருப்பாகவும்


என்று


கெஞ்ச வைத்து..


இறுதியில்


அந்த எங்கள்


ஈழத் தமிழரை


செருப்பால் அடிக்கவும்


ஆசைப்பட்டு ஏதோவோர்


ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள


முயன்றிருக்கிறீர்களே


கமல்!


அது என்ன ஆத்திரம்!




இது அறிவுமதி கமலைப் பற்றி சமீபத்தில் கொட்டியிருக்கும் ஆதங்கம். வேறு ஒன்றும் இல்லை மன்மதஅம்பின் எதிர்வினை.

நகைச்சுவை என்ற பெயரில் வலியுடன் இருக்கும் ஒரு சமுதாயத்தை கிண்டல் செய்திருக்கிறார். ஏன் அவர்கள் தட்டிக் கேட்க வலிமையில்லாத இல்லை முடியாத நிலையிலிருப்பவர்கள் என்ற நம்பிக்கைதான்.

ஏற்கனவே “கெக்கேபிக்கே” என்று ரங்கநாதரையும், தொந்தி கனபதியையும் வம்புக்கிழுத்து பாட்டு எழுதி ஆத்திகவாதிகளின் கோபத்திற்கு ஆளானார். இப்பொழுது இவர்களின் வாயிலும் விழுந்து எழுந்திருக்கிறார். கமல் போன்றவர்கள் ஒரு மைக்கும் காமிராவும் கிடைத்துவிட்டால் ஏதாவது வாயிற்கு வந்ததை பேசி, இல்லை பாடி வாங்கிக் கட்டிக்கொள்வது. இவர்கள் சில அறிவு ஜீவிகளிடம் பழகி ரெண்டு பெக் உள்ளே விட்டவுடன் தானும் அறிவுஜீவி என்று நினைத்துக் கொண்டு “ஐயா நானும் அறிவு ஜீவிதான் நம்புங்க” என்று உளறிக் கொண்டிருக்கிறார்கள்.

முதலில் ஒரு கருத்தை சொல்லும் பொழுது மற்றவர்கள் மத உணர்வுகளையோ, நம்பிக்கைகளையோ அவமதித்து பேசுவதை தவிர்க்க கற்றுக்கொள்ள வேண்டும். ஒருவன் ஆத்திகத்தையோ அல்லது நாத்திகத்தையோ தேர்வு செய்துக் கொள்வது தனி மனித உரிமை. அதில் மற்றவர்கள் கேவலப் படுத்தி பேசி ஆளுமை செய்வது அடிமடியில் கை வைக்கும் கயமைத்தனம்.

ஆனால் இங்கு பாமரர்கள் கூட இந்திய இறையாண்மையை நன்றாக புரிந்துகொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆதலால் தான் இந்த நாட்டில் எத்துனையோ கோயில்களில் மற்ற மதக்காரர்கள் திருப் பணியில் கலந்துக் கொள்வதும், வேளாங்கன்னிக்கும், நாகூர் தர்காவிற்கு எல்லா மதத்தினரும் சென்று வந்து கொண்டும் இருக்கின்றனர். ஆனால் ஒன்று உண்மை. இவர்களின் ஒற்றுமையை பிரித்து ஆள நினைக்கும் அரசியல்வாதிகளையும், வியாபார நோக்கில் உளருபவர்களையும் மக்கள் நன்றாக அறிந்துக் கொண்டிருக்கின்றனர்.

நாட்டை திருத்த நினைப்பவர்கள் முதலில் வீட்டிலிருந்து தொடங்குங்கள். மொத்தத்தில் கமல் தன்னுடைய சமுதாய சம்பிரதாயங்களில் அழுத்தமான நம்பிக்கைக் கொண்டு, வெளிப்புறத்தில் நாத்திகம் பேசும் பக்கா “hypocrite” என்று அடிக்கடி நினைவூட்டுகிறார்.

Follow kummachi on Twitter

Post Comment

17 comments:

Unknown said...

கமலைப்பற்றி அதிகம் பேசினாலே நமக்குதான் அசிங்கம்.ஒரு நடிகன் என்ற தகுதியைத்தவிர(ஒரு நல்ல அப்பா என்றோ அல்லது ஒரு நல்ல கணவர் என்றோ ஒரு நல்ல நடிகன் என்று கூட சொல்லமுடியாது) வேறெதுவும் கிடையாது.

goget99 said...

குத்துங்க எஜமான் குத்துங்க..
சிகப்பு ரோஜாக்கள் சின்ன கமல் சொல்லும் டயலாக்!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

உண்மைதான் பாஸ்..

உதவ முடியாவிட்டாலும்.. மூடிக்கிட்டாவது இருக்கலாம்..

புண்ணை சொறிஞ்சுவிட்டே பழகிட்டாங்க..

கும்மாச்சி said...

மிக சரியாக சொன்னீர்கள் இனியவன்.

settaikkaran said...

அந்தாளை இன்னும் புத்திஜீவின்னு கொண்டாடுறாங்களே, அவங்களைச் சொல்லணும்! ஆதங்கமும் ஆத்திரமும் புரியுதுண்ணே!

goma said...

ஒருமுறை கலைஞர் டீவி நிகழ்ச்சியில் ...இவர் உதிர்த்த முத்து

மஹாத்மா காந்தியைப் பற்றி சொல்லும் பொழுது ,அவரது தொண்டர்களைப் பற்றி இப்படிக் குறிப்பிட்டார்,”..காந்தி GANG..என்று....

அது சரியான வார்த்தை பிரயோகம்தானா

கும்மாச்சி said...

காந்தியை ஒரு “gang leader” ரேஞ்சுக்கு பேச கமல் போன்ற உளறு வாயர்களால் தான் முடியும்.

தங்கராசு நாகேந்திரன் said...

அது மட்டுமா சரிகாவை விவாகரத்து செய்துவிட்டு கமல் உதிர்த்த முத்து சரிகாவை ஏன் திருமணம் செய்து கொண்டீர்கள் என்ற கேள்விக்கு அடிக்கடி சரிகாவுடன் லாட்ஜில் ரூம் போட முடியவில்லை என்று பதிலளித்த அறிவு ஜீவிதான் கமல்

Unknown said...

உண்மைதான்

sarathy said...

இயலாதவனின் கூற்றே இதெல்லாம்.
வரம்புகளை தாண்டியவர்கள் அனுபவிப்பார்கள் தோழரே ... நாம் கண்கூடாக பார்ப்போம் .
ஒரு ஷொட்டு .... ம்ம்ம்ம்ம்ம் ..... போதாது உமக்கு.

Chitra said...

ஆனால் இங்கு பாமரர்கள் கூட இந்திய இறையாண்மையை நன்றாக புரிந்துகொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆதலால் தான் இந்த நாட்டில் எத்துனையோ கோயில்களில் மற்ற மதக்காரர்கள் திருப் பணியில் கலந்துக் கொள்வதும், வேளாங்கன்னிக்கும், நாகூர் தர்காவிற்கு எல்லா மதத்தினரும் சென்று வந்து கொண்டும் இருக்கின்றனர். ஆனால் ஒன்று உண்மை. இவர்களின் ஒற்றுமையை பிரித்து ஆள நினைக்கும் அரசியல்வாதிகளையும், வியாபார நோக்கில் உளருபவர்களையும் மக்கள் நன்றாக அறிந்துக் கொண்டிருக்கின்றனர்.


...rightly said.

Philosophy Prabhakaran said...

ஏனோ இந்த இடுகைக்கு கருத்து கூற விரும்பவில்லை...

கும்மாச்சி said...

பிழையை சுட்டிக்காட்டியதற்கு நன்றி சித்ரா. தவறு திருத்தப்பட்டுவிட்டது.
Oh!............ what a nice way to bring it to my notice. Thank you.

கும்மாச்சி said...

தங்கராசு ஸார், அது இன்னும் ஒரு மெகா அறிவுஜீவித்தனம்??????????. அவர் பேசுவது பாதி அவருக்கே புரியாது, மீதி இப்படித்தான்.

டக்கால்டி said...

முதலில் ஒரு கருத்தை சொல்லும் பொழுது மற்றவர்கள் மத உணர்வுகளையோ, நம்பிக்கைகளையோ அவமதித்து பேசுவதை தவிர்க்க கற்றுக்கொள்ள வேண்டும். ஒருவன் ஆத்திகத்தையோ அல்லது நாத்திகத்தையோ தேர்வு செய்துக் கொள்வது தனி மனித உரிமை. அதில் மற்றவர்கள் கேவலப் படுத்தி பேசி ஆளுமை செய்வது அடிமடியில் கை வைக்கும் கயமைத்தனம். //

மிகவும் அருமையான வரிகள்... ரசித்தேன்...

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

இந்துக்களையும், இந்து கடவுள்களையும் கிண்டல் செய்வது தமிழகத்தில் எப்படி புதிதில்லையோ, அதுபோலவே தமிழர்களை இழிவு செய்வதும் புதிதில்லை.

பெரியார், கலைஞர் என அது தொடர்கதையாகத்தான் இருக்கிறது. கமல் மீது குற்றமில்லை. நம் மீதுதான் குற்றம்.

RayJaguar said...

pinniteenga boss. kamal pola vaeru oru pulluruvi pirappathu rhomba kashtam

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.