Thursday, 27 January 2011

ஐயா வேண்டாம், அம்மா வேண்டாம், கப்பலே கவிழ்ந்தாலும் கேப்டன் வேண்டாம்....................................

ஐந்து ஆண்டுகள் சக்கர நாற்காலி


ஆட்கள் சூழ அரசாட்சி செய்து

இலவசங்கள் பெயரில் கொசுறு

தமிழுக்கு செந்தமிழ் விழா

தமிழீனம் காத்து, தமிழீழம் பெற்று

திகட்ட திகட்ட பாராட்டு

ஒளி கற்றை விற்று

குடும்ப நலம் பேணி உழைத்து

வெங்காயத்தை தங்கமாக்கிய

தங்க ஐயா நீவிர் வேண்டாம்.மாற்று வேண்டும் என நினைத்தாலும்

ஏமாற்றம் எஞ்சி நிற்பதாலே

ஊழல் பட்டாளம் பின் தொடர

ஆணவம் தலைக்கேறி

எடுத்தேன் கவிழ்த்தேன்

நானே அரசி நானே தலைவி

மக்கள் நலன் எல்லாம் பம்மாத்து

நிமிர்ந்தால் கோட்டை

குனிந்தால் கொடநாடு

அடுத்தவர் குடும்ப நலம்

பேணும் அறிக்கை ராணி

நீங்களும் வேண்டாம்

ஏற்றம் வேண்டி குடும்பம் தவிர்த்த

போற்றும் மக்கள் தலைவன் வேண்டும்

என்று கேப்டன் பக்கம் திரும்பினால்

மனைவி மச்சான் மப்பு ஏற

மாநாடு நடத்தும் மக்கள் தலைவன்

பதவிக்கு முன்பே ஆட்டம் போடும்

பதவி போதை முதலுக்கு மோசம்

கப்பல் கவிழுமென்றாலும்

டாக்டர் கேப்டன் வேண்டாம்.வாய்க்கு வந்ததை பேசி

வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும்

மகனின் வளர்ச்சி நாடும்

மருத்துவரும் வேண்டாம்.போர்வாள் போல புறப்பட்டு

போயஸ் தோட்டத்தில் பதுங்கும்

பிரட்சிப் புலியும் வேண்டாம்.தேசியக் கட்சிகள் தேசியம் பேசி

கோடிகளில் பெருத்த டில்லி

கேடிகளும் வேண்டாம்.நடிப்பில் நலிந்து

பிடித்த காசை

பேணிக் காக்க

அரசியல் நாடும்

அல்லக்கை

நடிகர்களும் வேண்டாம்.மக்கள் நலன் கருதி

வளர்ச்சியை கருத்தில் கொண்டு

புதிய சரித்திரம் படைக்க

படித்த நல்லவர்கள் இருந்தால்

ஆதரவு கொடுக்க

அன்பு உள்ளங்கள்

இருந்தும் அரசியல்

அவர்களுக்கு வேண்டாம்.

Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

மாத்தி யோசி said...

மக்கள் நலன் கருதி

வளர்ச்சியை கருத்தில் கொண்டு

புதிய சரித்திரம் படைக்க

படித்த நல்லவர்கள் இருந்தால்

ஆதரவு கொடுக்க

அன்பு உள்ளங்கள்

இருந்தும் அரசியல்

அவர்களுக்கு வேண்டாம்.


கடைசி பஞ்ச் சூப்பர்! ஆமா படித்த நல்லவர்களால் எப்படி அரசியல் நடத்த முடியும்? அதுக்கு பஞ்சமா பாதகங்களும் செய்ய தெரிய வேண்டுமல்லவா?

கும்மாச்சி said...

அதற்குதான் வேண்டாம் என்று இருக்கிறார்கள்.

Philosophy Prabhakaran said...

கொஞ்சம் நம்பிக்கை தர்ற கேப்டனையும் வேணாம்னு சொன்னா எங்கேதான் போறது...?

கத்தார் சீனு said...

சூப்பரு சேகர்ஜி !!!

தமிழ்க் காதலன். said...

நல்ல சிந்தனை... ஆனால் நல்லவர்கள் படித்தவர்கள் மட்டும் வேண்டாம் என்கிறீர்கள்... இந்த தகுதியோடு கொஞ்சம் தேசியம் யோசிக்கும் தொலைநோக்குப் பார்வை உள்ளவர்கள் அவசியம் அரசியலுக்கு வர வேண்டும்...அப்படி வந்தால் நம் நாடு மிகப் பெறும் மாற்றங்களை சந்திக்கும். நாம் அதற்கு வழி வகுப்போம்., துணை நிற்போம்.

செந்தழல் ரவி said...

கும்மாச்சி,

தமிழக மீனவர் பிரச்சனை பற்றி ஒரு பதிவு எழுதவேண்டும்.

www.savetnfisherman.org என்ற தளத்துக்கு இணைப்பு கொடுக்கவேண்டும்.

முடியுமா ?

"உழவன்" "Uzhavan" said...

உண்மைதான்.. யாருக்கு ஓட்டு போடக்கூடாது என எல்லாருமே முடிவுசெய்துவிட்டார்கள். ஆனால் யாருக்குப் போடுவது என்பதைத்தான் முடிவு செய்வதில் சிரமம் இருக்கிறது.

sarathy said...

யாவரையும் வேண்டாமென்று விட்டீர்கள்,
(அவர்களுக்கு) வேண்டியதை கொடுக்காவிட்டால்
ஒரு 'இராஜா'வோ, ஒரு 'கல்மாதி'யோ,
உருவாவது எப்படி? இதுவே இந்திய (தமிழனின்) கவலை!

Anonymous said...

superrrrrrrrrr

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.