Thursday 28 April 2011

கலக்கல் காக்டெயில்-28

சாய்பாபா


மறைந்த பாபாவின் உடல் நேற்று ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அவருக்கு இறுதி மரியாதை செலுத்தியவர்களின் எண்ணிக்கை பல லட்சத்தை தாண்டியது. நாட்டின் பிரபலங்கள் பல பேர் கண்ணீருடன் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள். இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது அவர் கடவுளா?, மனிதரா? என்கிற விவாதங்கள் எல்லாம் அவசியமற்றதாகிறது. எத்தனையோ சாமியார்கள் கோடிகளில் குளித்து கும்மியடிக்க, சென்னைக்கு கிருஷ்ணா நதி நீரை கொண்டு வருகிறேன் என்று பல கோடிகளை செலவழித்தும் பொட்டு நீர் பூண்டியில் கொண்டு வராமல் பல அரசாங்கங்கள் ஜல்லியடித்துக் கொண்டிருக்க, இரு நூறு கோடி செலவழித்து கண்டலேறு வாய்க்காலை மராமத்து செய்து பூண்டி ஏரியின் நீர் வரத்தை அதிகரித்து இன்று சென்னையின் குடி நீர் பிரச்சினையை ஓரளவுக்கு தீர்த்த அவர் ஒரு மனிதநேயமிக்க மகான் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆந்திராவில் அனந்தப்பூர் மாவட்டத்தை முன்னேற்றிக் காட்டினார். இப்பொழுது அவர் அமைத்த ட்ரஸ்ட் கையிருப்பு இரண்டு லட்சம் கோடி ரூபாய் என்று சொல்லுகிறார்கள். அவையெல்லாம் இனி இது போன்ற நல்ல காரியங்களுக்கு பயன்படுமா? பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

தயாளு “அவுட்” கனிமொழி “இன்”

ஸ்பெக்ட்ரம் ஒளிக்கற்றை வழக்கு செல்லும் பாதை கண் துடைப்போ என்று சிந்திக்க தோன்றுகிறது. கலைஞர் தொலைக் காட்சியில் அறுபது விழுக்காடு பங்கு வைத்திருக்கும் தயாளு அம்மாளை குற்றப் பத்திரிகையில் சேர்க்காமல், இருபது விழுக்காடு பங்கு வைத்திருக்கும் கனிமொழியையும், சரத் குமாரையும் சேர்த்திருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று புரியவில்லை. இதற்குப் பிறகு இத்தனை நாட்களுக்குப் பிறகு கல்மாடியின் கைது அரசியல் நாடகங்கள் அரங்கேற்ற முன்னோடியா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இத்துணை நடந்தும் “அம்மா” காங்கிரசை ஒன்றும் சொல்லாது இருப்பது தேர்தல் பின் கூட்டணிக்கு அச்சாரமோ? அட போங்கப்பு ஒண்ணுமே புரியல!!!!!!!!!!!!!



இந்தவார கடி

மின்னஞ்சலில் வந்ததில் இருந்து சுட்டது.

மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன? தெரியலையா?

அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?

தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?

அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.

தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?

மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!

பல்ப் - எடிசன்

ரேடியோ - மார்கோனி

பை-சைக்கிள் - மேக் மில்லன்

போன் - க்ராஹாம் பெல்

க்ராவிடி - நியூட்டன்

கரண்ட் - பாரடே

எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!

Follow kummachi on Twitter

Post Comment

5 comments:

RayJaguar said...

kadi super

Anonymous said...

சாய்பாபா..மக்களுக்கு நல்லது செஞ்ச சாமியார்..

ரிஷபன் said...

எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!
ha ha ha!!!

malar said...

///பல்ப் - எடிசன்

ரேடியோ - மார்கோனி

பை-சைக்கிள் - மேக் மில்லன்

போன் - க்ராஹாம் பெல்

க்ராவிடி - நியூட்டன்

கரண்ட் - பாரடே

எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!///
சூப்பரோ சூப்பர்

malar said...

சாய் பாபா செய்து வந்த உதவிகளை இனிவருபவர்களும் தொடரவேண்டும்....

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.