Sunday 28 July 2013

26ம் தேதி திமுக எம்.பி. கனிமொழி பதவியேற்காததன் காரணம் என்ன?

டெல்லி: தமிழகத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ராஜ்யசபா எம்.பி.க்கள் கடந்த 26ம் தேதி டெல்லியில் பதவியேற்றுக் கொண்ட நிலையில் திமுக எம்.பி. கனிமொழி மட்டும் பதவி ஏற்றுக் கொள்ளாததன் காரணம் தெரிய வந்துள்ளது. 
 
தமிழகத்தைச் சேர்ந்த அதிமுகவின் இளவரசன், மைத்ரேயன், திமுகவை சேர்ந்த கனிமொழி, திருச்சி என். சிவா, காங்கிரசை சேர்ந்த ஞானதேசிகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜா ஆகியோரின் பதவிக்காலம் கடந்த 24ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனால், இந்த ஆறு இடங்களுக்கான தேர்தல் கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஏழு பேர் போட்டியிட்டதால் வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் அதிமுகவை சேர்ந்த அர்ஜுனன், லட்சுமணன், மைத்ரேயன், ரத்தினவேல் ஆகியோரும், திமுகவை சேர்ந்த கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி. ராஜா ஆகியோர் வெற்றி பெற்றனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஆறு எம்.பி.க்களும் ஜூலை 26 ம் தேதி பதவியேற்றுக் கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. 
 
அதன்படி டாக்டர் வா.மைத்ரேயன், கே.ஆர். அர்ஜுனன், லட்சுமணன், டி.ரத்தினவேல் மற்றும் டி.ராஜா ஆகிய 5 பேர் கடந்த 26ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு டெல்லி மேல்-சபை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஹமீது அன்சாரி பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ஆனால் அன்று கனிமொழி மட்டும் பதவியேற்றுக் கொள்ளவில்லை.
 
 இது குறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான தகவல் ஒன்று பரவி வருகின்றது. அது என்னவென்றால் அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி சென்டிமென்ட் மிகவும் முக்கியம். நல்ல நேரம், ராகு காலம், எம கண்டம் என சென்டிமென்ட் டச் அதிகம் இருக்கும். 
 
தற்போது ஆடி போர்க்கலம் நடைபெறுகின்றது. அதாவது ஆடி மாதம் என்றாலே தமிழகத்தில் பலரும் நல்ல விஷயங்களை ஒத்திவைக்கின்றனர். மேலும், ஆடி முதல் தேதியில் இருந்து 18ம் தேதி வரை போர்க்கலம் என கூறப்படுகின்றது. இந்த 18 நாட்களில் எந்த ஒரு நல்ல விஷயத்தை செய்வதை பெரும்பாலான நபர்கள் தவிர்த்துவிடுவார்கள். அந்த நடைமுறையில் தான் கனிமொழி தனது பதவியேற்பு விழாவை தள்ளிவைத்து விட்டார். 
 
கடந்த காலங்களில் நல்ல நேரம், காலம் பார்க்காமல் செயல்பட்டாதல் தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் மறறும் சர்ச்சைக்குரிய விஷயங்களில் சிக்கிக் கொண்டதாக ஜோதிடர்கள் சிலர் கருத்து கூறியதாக கூறப்படுகின்றது. இதனால் தான் கனிமொழி தனது பதவியேற்பு நிகழ்ச்சியை தள்ளிவைத்து விட்டதாக கூறப்படுகின்றது. திமுகவில் அக்கட்சி தலைவர் கருணாநிதி தவிர அவரது குடும்பத்தில் உள்ள மற்ற அனைவரும் கோவில்களுக்கு சென்று சாமி கும்பிடும் வழக்கம் உள்ளவர்கள். மேலும், ஜாதகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் என்றும் கூறப்படுகின்றது. கனிமொழி வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி பதவியேற்றுக்கொள்வார் என்று திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

பகுத்தறிவு, பகுத்தறிவு..........................

Follow kummachi on Twitter

Post Comment

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது... கீச்சு முடிந்தது... நன்றி....

”தளிர் சுரேஷ்” said...

பகுத்தறிவு வாதிகளின் பகுத்து அறிந்த திறன் அருமை! பகிர்வுக்கு நன்றி!

Manimaran said...


//கனிமொழி தனது பதவியேற்பு நிகழ்ச்சியை தள்ளிவைத்து விட்டதாக கூறப்படுகின்றது. திமுகவில் அக்கட்சி தலைவர் கருணாநிதி தவிர அவரது குடும்பத்தில் உள்ள மற்ற அனைவரும் கோவில்களுக்கு சென்று சாமி கும்பிடும் வழக்கம் உள்ளவர்கள்.//

இது நூறு சதவிகிதம் உண்மைதான். அதுவும் வெளிப்படையாக கும்பிடுவார்கள். ஆனால் இதில் இன்னொரு விசயத்தையும் யோசிக்க வேண்டும். கடவுள் மறுப்பு என்பது திமுகவின் கொள்கையே கிடையாது. அது கலைஞரின் தனிப்பட்ட நிலைப்பாடு என எடுத்துக் கொள்ளலாம். அதீத பக்தி கொண்ட தன கட்சியினரை அவர் நக்கலடிப்பாரே தவிர யாரையும் சாமி கும்பிடக் கூடாது என வற்புறுத்தியது கிடையாது.

Jayadev Das said...

பகுத்தறிவு பாசறையில் வந்தவர்கள் என்பதற்க்கான நிரூபணம் இது!!

\\திமுகவில் அக்கட்சி தலைவர் கருணாநிதி தவிர அவரது குடும்பத்தில் உள்ள மற்ற அனைவரும் கோவில்களுக்கு சென்று சாமி கும்பிடும் வழக்கம் உள்ளவர்கள்.\\அதுசரி, மஞ்சள் துண்டு போடுவது மட்டும் என்ன பகுத்தறிவா?

Manimaran said...

//அதுசரி, மஞ்சள் துண்டு போடுவது மட்டும் என்ன பகுத்தறிவா? //

இடையில் டெல்லி சென்றபோது வெள்ளைத் துண்டு போட்டார்... சனிப்பெயர்ச்சி அதனால் இனி வெள்ளைத்துண்டுதான் போடுவார் என தினமலர் எழுதிக் கிழித்தது. மீண்டும் மஞ்சளுக்கு மாறியபோது பேச்சைக் காணோம். கருப்புச்சட்டை போட்டார். அதற்கும் ஒரு காரணம் கண்டுபிடித்து எள்ளி நகையாடினர். பிறகு வெள்ளைக்கு மாறியபோது அதையும் இந்த உலகம் நக்கலடித்தது.இந்த உலகத்தில் பகுத்தறிவாதியாக இருப்பதை வரை காட்டிக் கொள்வது மிக சிரமம் போல.

கும்மாச்சி said...

வருகை தந்து பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி.

அருணா செல்வம் said...

உண்மையைச் சொன்னால்... பகுத்தறிவாதிகள் தான்
அதிகம் சகுனம் பார்க்கிறார்கள்!!

தகவலுக்கு நன்றி கும்மாச்சி அண்ணா.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.