Tuesday 11 March 2014

கலக்கல் காக்டெயில்-138

நேரடி மோதல் 

கூட்டணி கூத்துகள் தொடங்கி நாடாளுமன்ற தேர்தலுக்கு  வியூகம் அமைக்க எல்லா கட்சிகளும் கடையை திறந்து வைத்து கூவிக்கொண்டிருக்கின்றன. அம்மா முதலிலேயே கதவை அடைத்து எல்லோருக்கும் "பேபே" காட்டிவிட்டார்கள். உலோகம் கண்டுபிடிக்கும் முன்பே உண்டியல் குலுக்கியவர்கள் என்று நக்கலடித்த பின்னும் காம்ரேடுகள் காட்டிய விசுவாசத்திற்கு நல்ல அல்வா கொடுத்தார்கள்.

ஐயாவோ கடையை திறந்து வைத்தும் கொள்வார் இல்லாததால் எல்லா இடத்திற்கும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டார்.

கேப்டன் எல்லா இடத்திலும் சென்று லொகேஷன் பார்த்து கடைசியில் தேசிய கட்சியில் ஐக்கியமாகி அதிக இடங்களை பெற பேரம் பேசுகிறார். மருத்துவர் ஐயா போன்றோர் முதலிலேயே சென்று துண்டு போட்டு வைத்திருந்தாலும் எம்.ஜி.ஆர் பட தரைவரிசை ஆட்கள் டிக்கட் கவுண்டரில் முண்டியடித்து கடைசி நிமிடத்தில் டிக்கட் வாங்குவது போல் வந்த கேப்டனின் திறமையைக் கண்டு கொந்தளித்துக் கொண்டிருக்கிறார். வை. கோ எப்பவும்போல் கொடுத்ததை வாங்க காத்திருக்கிறார்.

அனேக இடங்களில் அம்மா கட்சியும் ஐயா கட்சியும் நேரடியாக மோதுகின்றன.எத்தனை அடிதடிகளும் வெட்டு குத்துகளும் அரங்கேறப்போகுதோ?

எது எப்படியோ? மக்கள் எண்ணம் தெரியவரும் பொழுது காட்சிகள் மாறும், பெட்டிகள் கைமாறும், குதிரை பேரங்கள் அம்பலமேறும்.

என்னா ஒரு வில்லித்தனம்

பெங்களுரு சொத்துக்குவிப்பு வழக்கின் இறுதிகட்ட விசாரணை மறுபடியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசு வழக்கறிஞர் இரண்டாவது முறையும் ஆஜராகவில்லை. ஏற்கனவே இந்த வழக்கு கிட்டத்தட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட வாய்தாக்கள் வாங்கி இழுத்தடிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது மேலும் ஜவ்வு வேலை.

இந்த அழகில் எம்.பி க்கள், எம்.எல் ஏக்கள் மீதுள்ள வழக்குகள் ஒரு வருடத்திற்குள் முடித்துவிட வேண்டுமென்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

அபரிதமான வளர்ச்சி

எல்லோராலும்  ஒருமனதாக ஒப்புக்கொள்ளப்பட்ட குஜராத்தின் அபரிதமான வளர்ச்சி நமீதாதானாம்----------ட்விட்டரில் படித்தது.

என்னமா யோசிக்கறாங்கப்பா?

ரசித்த கவிதை 

விட்டுவிடுங்கள் எம்மை 

உங்கள் அரசியல் ஆதாயங்களுக்கு
மகுடம் சூட்டும் விருதுகளுக்கு
எத்தனை நாள் பலியாக்குவீர்
பூடகமாய், சூசகமாய் எம்மை .......!

உங்கள் சொகுசு வாழ்க்கைக்கு
எங்கள் கண்ணீர் தானா
பசியாற கிடைத்தது உங்களுக்கு..!

கேட்காமலே கட்டுரை அனுப்புகின்றீர்
தனிப்பட்ட விடுகைகளில்- பின்
வசை பாடுபவனுடன் கூட்டுச் சேர்ந்து
முதுகில் குத்துகின்றீர் பலமாய் .......!

ஏனிந்த இரட்டை வேடம் உமக்கு.....
அளவற்ற உம் பேராசையினால்
கூட்டம் சேர்த்து, ஒத்தூதி எதற்காக
வேடம் போட்டு குதறுகின்றீர் .............!

போதும் உங்கள் உறவும், நட்பும்
இனி வேண்டாம் எதுவும்............
என் பாதையில் பயணிக்கின்றேன்
`பார்வைகளை` மட்டும் சுமந்து ....!

நாட்டின் சட்டம் சொல்கிறது
குற்றங்களுக்கு உடந்தை போபவர்களும்
அதன் பார்வையில் குற்றவாளிகளாம்.....
எழுதாத சட்டத்தில் இங்கு
எரியும் தீயில் எண்ணெய் விடுபவரே ஏராளம்..!

விட்டு விடுங்கள் எம்மை
உங்கள் அரசியல் நாற்காலிகளுக்கு
`பஞ்சாக்கி` இதம் காணும்
ஈழத்தையும், ஈழத்தவள் என்னையும் ....!!!!------------------தோழி துர்கா


ஜொள்ளு






Follow kummachi on Twitter

Post Comment

13 comments:

ராஜி said...

ஜொள்ளு ரொம்ப அடக்கி வாசிச்சிருக்கீங்கப் போல!?

கும்மாச்சி said...

ஐயோ ரொம்பவே அடக்கி வாசிச்சிருக்கேன் மேடம்.

வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

அபரிமிதமான வளர்ச்சி! ரொம்பவே யோசிக்கிறாங்க போல! கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

அருணா செல்வம் said...

தாவணியில் அந்தப்பெண் அழகோ அழகு!

கும்மாச்சி said...

அருணா வருகைக்கு நன்றி.

Unknown said...

#அபரிதமான வளர்ச்சி #
லொள்ளு படம் .ஜொள்ளு படத்தை விட அருமை !
த ம 5

கும்மாச்சி said...

நன்றி பகவான்ஜி.

Unknown said...

ரொம்ப நல்ல கவிதைபா...

அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

கும்மாச்சி said...

முட்டாநைனா வருகைக்கு நன்றி.

Unknown said...

தரமான அரசியல் அலசல்! சுவை நன்று!

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ஐயா.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.