Friday 14 March 2014

செய்திகளும் லொள்ளுகளும்

செய்தி: கருணாநிதியும் தீவிர பிரச்சாரத்தில் குதிக்கிறார்.
லொள்ளு: ஒருத்தருக்கு எழுந்து நிக்கவே வக்கில்லையாம், இதுல எங்க குதிக்கிறது.

செய்தி: 2ஜி ஊழல் வழக்கில் சிக்கியவர்களுக்கு கருணாநிதி தேர்தலில் சீட் கொடுத்தது ஏன்? கருணாநிதிக்கு ஜெயலலிதா கேள்வி.
லொள்ளு: அம்மா சொத்துக்குவிப்பு வழக்குல விசாரிக்க பெங்களுரு உங்களை அழைக்கிறது.

செய்தி: தேர்தலில் போட்டியிட வில்லை கே.வி.தங்கபாலுஅறிவிப்பு.
லொள்ளு:தொங்காண்ணா வீட்டம்மாவை நிக்க வைக்கப் போறீங்கதானே.

செய்தி: துரைமுருகன், பழனிமாணிக்கம், சுப தங்கவேலனுக்கு சீட் கொடுக்கமுடியவில்லையே# கருணாநிதி வேதனை.
லொள்ளு: இதயத்தில் கொடுத்திருங்க தலைவரே.

செய்தி: விஜயகாந்த் பிரச்சாரம் செய்யும் மேடையில் ஏறமாட்டேன்: ராமதாஸ் அறிவிப்பு.
லொள்ளு: தரையில குந்திக்கினு பிரச்சாரம் செய்யுங்க.

செய்தி: தேர்தலில் எங்களின் பங்கு இருக்கும், பிரதமரை சந்தித்த பின் மு.க. அழகிரி.
லொள்ளு: உள்குத்ததானே சொல்றாரு  ...............

செய்தி: நடிகை நக்மா மீரட் தொகுதியில் போட்டி.
லொள்ளு: சரத்குமார்  பிரச்சாரத்துக்கு போவாரா?

செய்தி: மூன்று கட்சியில் என்னை  கூப்பிடுகிறார்கள்# நடிகை நமீதா 
லொள்ளு: மூன்று கட்சியிலும் சேர்ந்திடுங்க கட்சிகள் அபரிமிதமா வளர்ந்துடும்.

செய்தி: அழகிரியை காங்கிரசில் சேர்க்கத்தயார்# ஈ.வி.கே. எஸ் இளங்கோவன்.
லொள்ளு: எந்த கோஷ்டியில அத முதலில் சொல்லுங்க.

செய்தி: தே.மு.தி.க வுடனான பேச்சு வார்த்தையில் முன்னேற்றம்# பொன் ராதாகிருஷ்ணன் 
லொள்ளு: எத்தனை ரவுண்டு முடிந்தது, கெட்டவார்த்தை எல்லாம் கத்துக்கிட்டீங்களா?


அண்ணாச்சி பேசுறதுதான் ஒண்ணும் புரிய மாட்டேங்கி... நடந்துக்கிறதும் ம் ஹூம்... ஒண்ணும் தெரியமாட்டேங்கி... எத்தினி வாட்டி நிதானமா நிதானமா நிதானமா உக்காந்து யோசிச்சாலும் ஒண்ணும் புரியபடமாட்டேங்கி... சரி .. அண்ணாச்சி கைய வெச்சி ரேகை பாத்தாவது எந்தப் பயலாவது சோசியம் சொல்லுதானான்னு பாத்து... அதிலாவது எதுனா தெரியுதான்னு பாப்போம்....----------------நன்றி : தினமணி

Follow kummachi on Twitter

Post Comment

13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

லொள்ளு'கள்' செம...!

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

ராஜி said...

கேப்டன் அண்ணாச்சி ஏன் சூரியனுக்கு ஓட்டு கேக்குறார்.

கும்மாச்சி said...

ராஜி வருகைக்கு நன்றி.

MUTHU said...

நமீதா ரசிகரா நீங்கள்,
நக்மா படத்தையும் போட்டிருக்கலாம்
டபுள் ஜொள்ளா இருந்திருக்கும்
பரவாயில்லை. என் கருத்தை ஜொள்ளிட்டேன்.

கும்மாச்சி said...

ஜொள்ளுங்க, ஜொள்ளுங்க
உடல் மண்ணுக்கு உயிர் நமீதவுக்குதான்..............கூட்டம்

வருகைக்கு நன்றி.

அருணா செல்வம் said...

தண்ணி போட்டுட்டு ஏதாவது தப்பா பேசினா
நம்ம மக்கள் தப்பா எடுத்துக்க மாட்டார்கள் என்பது நம்ம தே.மு.தி க தலைவருக்குத் தெரியும் கும்மாச்சி அண்ணா.

அம்பாளடியாள் said...

இன்றைய ஜொள்ளில் கருணாநிதியும் நமிதாவும் கலக்கீட்டாங்க :))
பாவம் விஜயகாந்த் எத்தின மேடையில தான் குட்டு வாங்குறது ?.:)))
வாழ்த்துக்கள் சகோதரா சிரிக்க வைக்கும் ஜொள்ளுக்கள் தொடர்ந்தும்
அணிவகுப்புச் செய்யட்டும் :)

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி அருணா.

கும்மாச்சி said...

அம்பாளடியாள் வருகைக்கு நன்றி.

Unknown said...

மீரட் தொகுதி எந்த பக்கம் ?கள்ள வோட்டு போடப் போகணும் !
த ம 5

கும்மாச்சி said...

பகவான்ஜி இன்னும் ஒரு கள்ள ஓட்டையும் சேர்த்துக்கோங்க.

Anonymous said...

Humorous.....

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.