Wednesday 22 August 2018

ரிலாக்ஸ் ப்ளீஸ் வருண் அவர்களுக்கு

ரிலாக்ஸ் ப்ளீஸ் வருண் அவர்களுக்கு

மனநிலை பாதிக்கப்பட்ட கும்மாச்சியும் கருணாநிதியும்.........என்ற தங்களது பதிவைப்  படித்தேன், மேலும் எனது பதிவின் பின்னூட்டத்தில் இட்ட கருத்தையும் வெளியிட்டு இருக்கிறேன்.

http://timeforsomelove.blogspot.com/2018/08/blog-post_21.html

நீங்கள் எனது மனநலம் குறித்து கொடுத்த அறிவுரைகளை மனதில் ஏற்றுக்கொள்கிறேன். எனது இறப்பை பற்றியும் பதிவிட்டிருக்கிறீர்கள் நன்றி. இறப்பு எனது கையிலோ அல்லது உங்கள் கையில்!!! இல்லை என்று நம்புகிறேன்!!!.

கலைஞருக்கும் எனக்கும் எந்த வாய்க்கா வரப்பு பிரச்சினைகள் இல்லை என்பதையும் இந்த நேரத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

மேலும் நீங்கள் , கடந்த பத்துவருடங்களாக பதிவிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதில் பல தனிமனித தாக்குதல்களும்,  பதிவர்களின் மீது இன  வெறித்தாக்குதல்களையும் வெளியிட்டிருக்கிறீர்கள். உங்களது பதிவுகளுக்கு எதிர் கருத்து தெரிவிப்பார் மீது பிரசுரிக்க தகாத வார்த்தைகளையும் உபயோகப்படுத்த தயங்கவில்லை. என்ன கெட்ட வார்த்தைகள் உங்களது கணிப்பில் ஆங்கிலத்தில் பதிவிட்டால் நாகரீகம் என்று சடுதியில் ஆங்கிலத்தில் "get the F*** out of here" என்று வெளிவிடுகிறீர்கள்.

உங்களது ஜாதி மற்றும் இன வெறி பதிவுகள் அமிர்தம் கக்குகிறது என்று நம்புகிறீர்கள்.

உங்களது வலைப்பூவில் உங்களது கருத்தை வெளியிடுகிறீர்கள் அது உங்களது உரிமை. அதற்காக உங்களை மனநலம் குன்றியவர் என்றோ இல்லை அந்த சமுதாயம் உங்களை வெகுவாக பாதித்தது என்றோ நான் அனுமானிக்கவில்லை.

 உங்களது பதிவுகளில் நிறைய எழுத்தாளர்கள் பற்றி எழுதி இருக்கிறீர்கள், குறிப்பாக தி. ஜானகிராமனை பற்றிய பதிவுகள் என்னை மிகவும் கவர்ந்தது. நான் அவருடைய அத்தனை புத்தகங்களையும் சேர்த்து வைத்திருக்கிறேன். இருபது வருடகங்களுக்கு முன்பு "ஐந்திணை பதிப்பகம்" அவருடைய ஒரு சிறுகதை தொகுப்பை மறுபதிப்பு செய்ய என்ன அணுகியபொழுது என்னிடமிருந்த நகலை கொடுத்திருக்கிறேன்.

இந்த விஷயத்தில் நமக்குள் ஒற்றுமையை நான் உணர்கிறேன், அதே சமயத்தில் உங்களது பதிவுகள் அனைத்தும்  என்னுடைய கருத்துடன் ஒத்துபோகவில்லை என்பதையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

நீங்கள் உங்களுக்கு தோன்றிய கருத்தை பதிவிடுகிறீர்கள். எதிர் கருத்துக்கு மாறாக நான் பின்னூட்டங்கள் இடுவதில்லை.

வாழ்க வளமுடன்.





Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

நன்மனம் said...

வாழ்க வளமுடன்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
வருண் said...

****மேலும் நீங்கள் , கடந்த பத்துவருடங்களாக பதிவிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அதில் பல தனிமனித தாக்குதல்களும், பதிவர்களின் மீது இன வெறித்தாக்குதல்களையும் வெளியிட்டிருக்கிறீர்கள். உங்களது பதிவுகளுக்கு எதிர் கருத்து தெரிவிப்பார் மீது பிரசுரிக்க தகாத வார்த்தைகளையும் உபயோகப்படுத்த தயங்கவில்லை. என்ன கெட்ட வார்த்தைகள் உங்களது கணிப்பில் ஆங்கிலத்தில் பதிவிட்டால் நாகரீகம் என்று சடுதியில் ஆங்கிலத்தில் "get the F*** out of here" என்று வெளிவிடுகிறீர்கள்.

உங்களது ஜாதி மற்றும் இன வெறி பதிவுகள் அமிர்தம் கக்குகிறது என்று நம்புகிறீர்கள்.***

ஜாதி, மதம், கடவுள் எல்லாம் மனிதன் உருவாக்கியது என்பது என் நம்பிக்கை.

அதெல்லாம் உங்களூக்கு முக்கியமானதாகத் தோனலாம். அதைக் கட்டி அழுபவர்கள் பெரியமனிதர்களாகத் தோனலாம். உங்க திருப்திக்காக நான் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த சாதியில் பொறந்ததால், நான் உயர்ந்த சாதி, கருணாநிதி கீழ்சாதினு விமர்சனம் செய்ற பெரியவாவா எல்லாம் நீங்க கையெடுத்து வணங்கலாம். ஆனா நான் அவர்கள எப்படி விமர்சிக்கனும்னு நீங்க எதிர்பார்ப்பதுபோல் நான் நடக்க முடியாதுங்க. என்னால் விமர்சிக்கப் படுபவர்கள் எல்லாம் அப்பாவிகளூம் இல்லை. உயர்தர மக்களூம் இல்லை. என்ன ரொம்ப நாகரிகமா (பொய் வேடத்துடன் உலவுறவங்க) நடந்து கொள்றவங்க. அவ்ளோதான். இதையெல்லாம் சொல்லி கருணாநிதி யோக்கியர்னு நான் சொல்ல வரவில்லை!

என்னைப்பற்றீ நீங்க எதுவும் அதிகமாச் சொல்லலைங்க. அதனால் "நான் அப்படியெல்லாம் இல்லை! பக்கா யோக்கியனாக்கும், நீங்கதான் தவறாப் புரிந்து கொண்டு இருக்கீங்க"ணு நம்ம கமல் மாதிரி சொல்லப் போவதில்லை.

உங்க கணீப்பு சரிதான். வாழ்த்துக்கள்!

This is what I am. What to do? If everyone is "good" and "decent" like you, the world will not appreciate you. Only bad people like me and MK, make good people like you, em cee yaar, jaya, periyavaa sankaraacharyaa, hindutava cho ramasamy to look good. You guys need to be thankful to us!

--------------------

கருணாநிதி..அந்தாளூ செத்துட்டாரு, சரியா?

நான் எழுதிய பதிவை நீங்க வாசிச்சீங்க. நீங்க எழுதிய பதிவை நான் வாசிச்சேன். ஆனால் நீங்க எழுதிய அந்த 5 பதிவையும் கருணாநிதி வாசிக்கப் போவதில்லை. தன் செயல்கள நியாயப் படுத்தப் போவதில்லை. செத்துட்டாரு அந்தாளூ..

உங்கள யாரும் சூரியனாகவோ, அல்லது பெரிய மனுஷனாகவோ, அல்லது உங்க பொது அறீவுப்படி, ---------------------ஆகவோ சொல்லணூம்னு கட்டாயப் படுத்தவில்லை. உங்க வசதிப்படி எப்படி சொல்லனுமோ சொல்லிக்கோங்க.

உங்களூக்கு அவர் செத்தது சந்தோஷமா இருக்கா? வீட்டில் கேக் வெட்டி, பிரியாணீ சாப்பிட்டுக் கொண்டாடுங்க..தப்பே இல்லை!

ஏன் இப்படி பதிவுமேல் பதிவுபோட்டு கரிச்சுக் கொடுறீங்கனு தோனுச்சு. அதை சொன்னால்த்தான உங்களூக்கு விளங்கும்?

'கல்யாண சாவு" அப்படினு அவங்க பிள்ள குட்டிக சொல்லணூம். நாம சொல்லக்கூடாது! என் சாவோ, அல்லது உங்கள் சாவோ நம்மைச் சார்ந்து உள்ளவர்களத்தான் பாதிக்கும். மூன்றாமவர் அதன் விளவை சொல்லக்கூடாது 'கல்யாண சாவென்றூ"..ஒருவர் ஆயிரம் வயதில் செத்தால்கூட!

உங்க பதிவிலிருந்து கருணாநிதிமேல் உங்களூக்கு உள்ள வெறூப்பு தெரிகிறது. அதுக்கு ஒரு பதிவே போதுமே? ஏன் தொடர்ந்து அதையே பதிவுமேல் பதிவெழுதிக் காட்டணூம்னு சொல்லத் தோணுச்சு. சொன்னேன். நீங்க தொடர்ந்து இன்னும் 10 பதிவெழுதலாம், அது உங்க உரிமை. உங்க தொடர்பதிவின் மூலம் உங்க வெறூப்பை விமர்சிக்க வச்சது நீங்களூம், உங்க பதிவும்தான், அதுக்கு என்னை எதுவும் சொல்லாதீங்க.

ஒரு அறீவுரை.. என்னை மாதிரி ஆட்கள தட்டிவிட்டுட்டுப் போங்கங்க. எத்தனையோ, உயர் சாதி, உயர் மதத்தை சேர்ந்தவா உயர் தரத்தில் இருக்கா..அவங்களோட சேர்ந்து நீங்களூம் மணக்கலாம் இல்லையா?


கும்மாச்சி said...

நான் என்ன நல்லவனாக காட்டுவதற்கு உங்களையும் மு.க வையும் தாழ்த்த வேண்டியதில்லை அதற்கு அவசியமும் இல்லை.


மேலும் நான் எந்த மதத்தையும் ஜாதியையும் உயர்ந்தது அல்லது தாழ்ந்தது என்று எனது பதிவுகளில் பதிவு செய்யவும் இல்லை.


உங்களை மாதிரி ஆட்களை தட்டிவிட்டு போங்க என்று கூறும் உங்களுக்கு ஏன் என்னைப் போன்றவர்கள் பதிவிட்டால் பொங்கி எழுந்து மனநலம் குன்றியவர்கள் என்று வாய் கூசாமல் கூறுகிறீர்கள். எனது செய்கையால் இறக்க நேரிடும் என்று அறிவுரை கூறுகிறீர்கள். இதே கருத்தை மற்றவர்கள் உங்கள் மேல் வைத்தால் உங்களது செய்கை எப்படி இருக்கும்? யோசியுங்கள்.


நீங்கள் மாறவேண்டாம், இப்படியே இருங்கள், அதே சமயத்தில் உங்களுக்கு இருக்கும் கருத்துரிமை மற்றவர்களுக்கும் உண்டு என்பதை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்.

Think about it.

வருண் said...

கடுமையாக விமர்சனம் செய்பவர்கள தட்டி விட்டுவிட்டுப் போங்க..இணயதளத்தில் எல்லாரும்தான் தாக்கப் படுறாங்க..வேணூம்னா இதை வாசிச்சு தெரிஞ்சுக்கோங்க..

http://manasatchy.blogspot.com/2009/05/blog-post_06.html

மற்றபடி நான் எழுதிய பதிவை அகற்றீவிட்டேன்.

கும்மாச்சி said...

அந்தப் பதிவை அகற்றியது உங்கள் பெருந்தன்மையை காட்டுகிறது.ஆனால் அந்தப் பதிவை அகற்ற வைப்பது என் நோக்கமல்ல.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.