Sunday 24 June 2018

டீ வித் முனியம்மா சீசன்- 2(4)

எண்டே முனிம்மா எந்து பட்டி......

டேய் மீச பட்டி கிட்டின செவுலு திரும்பிடும்.

ஐய முனிம்மா இன்னா நூசுன்னு கேக்குறான் நீ சூடாயிட்ட.

சரி மீச அல்லாருக்கும் சாயா போடு...

இன்னா பாய் பெருநாள் நல்லா போச்சா

அஹான் முனிம்மா? இன்னா நீ வூட்டாண்ட வரல, நல்ல பிரியாணி செஞ்சு வச்சு உனுக்காக காத்துக்கிட்டு இருந்தோம்.....

எங்க பாய் அன்னிக்கி கடையாண்ட ஒரே கூட்டமா நவுரவே முடில.

சரி முனிம்மா ஊரு நடப்பு, நாட்டு நடப்பு அல்லாம் எப்படி கீது?

அத்தே ஏன் கேட்குற லிங்கம் சாரு? தெனிக்கும் ஒரு போராட்டம் நடத்திகினு கீறாங்க? ஜெனங்க ஒரு போராட்டம் நடத்திகினா? எதிர் கட்சி ஒரு சால் சாப்பு சொல்லிகினு தெனிக்கும் வெளிநடப்பு செஞ்சுகின்னு கீறானுங்க?

மெய்தான் முனிம்மா, சேலத்துக்கு போறத்துக்கு புச்சா ரோடு போடுறேன்னு பத்தாயிரம் கோடி எடுத்துகினு வந்தானுங்க, ஜெனங்க விவசாய நெலம் கொடுக்க மாட்டேன்னு தகராறு பண்ணிகிறாங்க, நியாயம்தானே?

ஆனா நீ பாரு முனிம்மா அல்லாரையும் துட்டு கொடுத்தே செட்டப் பண்ணிடுவானுங்க.........இதெல்லாம் நடக்கிறதுதானே.

அது கரீட்டு நாடார்? அப்பால மதுரையாண்ட ஆசுபத்ரி கொண்டாரப் போறாங்கலாம்?

அதுக்கும் தகறாரு பண்ணுவானுங்க? அல்லாம் துட்டு செய்யுற வேல!!

சரியா சொன்ன பாய், ஆசுபத்ரி கொணாந்தா, இட்லி வேவாது, பப்பு வேவாது, சால்னா துன்ன முடியாதுன்னு சொல்லி கொடி பிடிச்சு கூவிட்டு சரக்கு அடிச்சு மட்டையாய்டுவானுங்க.

முனிம்மா செயலு.....ஸ்ரீரங்கம் போயி யாகம் செஞ்சிகினாராமே?

ஆமா லிங்கம் சார், அதெல்லாம் நல்லா செய்வாங்க, சொம்மனாங்காட்டி பகுத்தறிவு, பெரியாரு.........அண்ணா திராவிடம்னு அப்பப்ப ஓட்டு பிச்சைக்கு அவுத்துவுடுவானுங்க?

அது ஏன்? முனிம்மா?

டேய் லோகு அப்பத்தான் மத்த மதத்துக்காரன் குஜாலா இருப்பான், நமக்கு ஒட்டு உயுமுன்னு இன்னுன் நம்பிகினு கீறானுங்க?

சரி இன்னா புது பட போஸ்டர் உட்டதுக்கு ஏதோ தகராறு செஞ்சுகினுகிறாங்க?

அது ஒன்னியும் இல்லடா செல்வம், போஸ்டருல ஈரோ சுருட்ட வாயில வச்சிகின்னு போஸ் கொடுத்துகிராறு.

ஆமா அதுக்கு இன்னா இப்போ?

அடப்போடா லோகு, அத்த கண்டு நம்ம குட்டி மருத்துவரு வயக்கம் போல இதெல்லாம் நல்ல இல்லன்னு சொல்லிகிறாரு.

ஆமா அவரு வயக்கமா சொல்றதுதானே? நல்லத்துக்கு தானே சொல்றாரு?

அடேய் செல்வம் அது உனுக்கு புரியுது? ஆனா ஈரோக்கு பாலூத்தி பிகில் அடிக்கிறானுங்களே ஒரு கூட்டம் அவனுங்களுக்கு அது புரியுமா?

இன்னா சொல்றாருனுங்க?

அவுக ஈரோ குடிக்கிற சுருட்டு ஒசத்தியான், ரொம்ப துட்டாம்? அது குடிச்சா கேன்சர் வராதாம்?

ஏன் முனிம்மா அதுல இஞ்சி, அதிமதுரம், அசுவகந்தா, குப்பைமேனி, கீழாநெல்லி அல்லாம் வச்சி இஸ்குறாரா?

அது தெரியாது? ஆனா அதுக்காக "லவ்பெல்ல" செமையா கலாய்க்கிரானுங்க. எவனோ ஒரு பையன் டாஸ்மாக் சரக்கடிக்கிரத போட்டு லவ்பெல் பையன் சர்க்கடிக்கிறான், அவுன மொதலா திருத்த சொல்லு அப்பால எங்க தளபதியாண்ட வரலாம்னு ஒரே மெர்சல்.

ஐய முனிம்மா அந்தாளுக்கு மூனும் பொண்ணுதானே, பையனே கெடியாதே?

டேய் லோகு அது ஊருக்கே தெரியும்? இவனுக ஒரு தனி கூட்டமடா?  ஒன்னியும் தெரியாது? அவனுக அவருதான் டாப்பு, மத்தவன எல்லாம் கெட்ட வார்த்தையிலேயே திட்டுவானுங்க? அவனுக திட்டசொல்ல சொறிநாய் கூட குறுக்க ஓடாது?

இந்த பேஸ்புக்கு, ட்விட்டர் பக்கம் பாரு ஒரே கலீஜா ஆக்கி வச்சிருப்பானுங்க.

கரெட்டு லிங்கம் சாரு. அத்த ஏன் கேக்குற? நேத்து  கோயம்பேடு பக்கம் போவ சொல்ல ரோகினி தியேட்டராண்ட ஒரு கலாட்டா? அதேதான் வயக்கம் போல இவன் ரசிகனுக்கும் அவன் ரசிகனுக்கும் அடிச்சிகினானுங்க? அப்பால ட்விட்டர்ல வந்து கெட்ட வார்த்தையிலே அடிச்சிகிரானுங்க!!

இவனுங்க திருத்த மாட்டானுங்க

இந்த வாரம் இன்னா புது படம் வந்துகுது?

டேய் செல்வம் "டிக் டிக் டிக்" டா, இன்னும் நீ பாக்கலையா?









Follow kummachi on Twitter

Post Comment

No comments:

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.