Sunday 3 June 2018

கலக்கல் காக்டெயில்-186

யார் சமூக விரோதிகள்??

தூத்துகுடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் நூறாவது நாள்  நடந்த கலவரமும் அதை தொடர்ந்து நடந்த துப்பாக்கி சூடும் தவிர்க்கப் படவேண்டியது. நூறாவது நடந்த போராட்டத்தில் நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் துப்பாக்கி சூடு நடந்ததாக அரசு தரப்பில் சொல்லுகிறார்கள். சமூக விரோதிகள்தான் காரணம் என்று அந்த நடிகர் சொல்லப்போக அவரை "தொம்பிகள்" வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவரை போராளிகளை கொச்சை படுத்துகிறார் என்கிறார்கள். சமூக விரோதிகள் பொது சொத்த நாசமாகியதும், குடியிருப்பில் தீ வைத்தது உண்மைதானே, அப்போது அதை செய்தது சமூக விரோதிகள் இல்லை என்று உங்கள் கூற்றில்தான் நீங்கள் போராளிகளை கொச்சை படுத்துகிறீர்கள்.

அவரை நீங்க யாரு? என்று கேட்ட மானமுள்ள தமிழன்!!! வீரத்தமிழன்!!! அடுத்த நாள் தலையில் இருந்த கட்டுகளை அவிழ்த்து அந்தர் பல்டி அடித்து  தன்மானத் தமிழன் ஆகிவிட்டான்.

இதுதான் சாக்கு என்று இணையப்போராளிகள் இரண்டு நாட்களுக்கு நடிகரை ட்ரோல் செய்ய, தன்மானத்தமிழன் குறுக்கு சால் ஓட்டியதில் பொந்துக்குள் சென்று விட்டனர்.

ஆனாலும் விடாமல் தொம்பிகள் தமிழருக்கு எதிரான நடிகரின் படம் ஆஸ்திரியாவில் இல்லை, நார்வேயில் இல்லை, அண்டார்டிக்காவில் இல்லை என்று ட்ரோல் செய்து ஆர்கசம் அடைந்து கொண்டிருக்கின்றனர்.

கலைஞர் 95

லைஞர் தனது தொண்ணூற்று ஐந்தாவது பிறந்த நாளை கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்!! மன்னிக்கவும் அவரது உடன் பிறப்புகள் கொண்டாடிக்கொண்டு இருக்கின்றனர். இந்த நாளில் கூட இணையங்களில் அவரை ஹாஷ் டேக் போட்டு கலாய்த்துக்கொண்டிருக்கின்றனர்.

அவரை என்னதான் கிண்டலடித்தாலும் அவர் ஒரு சிறந்த நிர்வாகி என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது என்றே நினைக்கிறேன். எந்த ஒரு அரசியல்வாதியும் புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் ஆளாகிறார்கள் கலைஞர் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் அவை இரண்டையும் அவர் எதிர் கொண்ட விதம் எல்லோராலும் கவனிக்கப் பட வேண்டிய ஒன்று.


தற்பொழுது அவர் அரசியல் அரங்கில் இல்லாதது தமிழ் நாட்டிற்கு பேரிழப்பு தான்.

கவிதை

கையசைப்பு

ப்போதும்
வயல்கள் ஊடாக
தடதடக்கும் சத்தத்தோடு
போய்க்கொண்டுதான் இருக்கின்றன
தொடர் வண்டிகள்....................
விடுமுறை நாளில்
பெற்றோருக்கு உதவ வந்து
வயல் நடுவே நின்று கொண்டு
வரிசையாய்ப் பெட்டிகளை எண்ணியபடி கையசைக்கும்
கிராமத்துச் சிறுவர்கள் இன்றி.

சினிமாசமீபத்தில் வந்த "சாவித்திரி" வாழ்க்கை திரைப்படமும் அதை தொடர்ந்து வந்த அவர்களது குடும்ப சர்ச்சைகளும் படத்தின் பிரமோஷனுக்காக செய்ததா என்பதற்கு ஆதாரம் இல்லை, ஆனால் படத்தை நன்றாக எடுத்திருக்கிறார்கள் என்று கேள்வி, இன்னும் பார்க்கவில்லை, பார்க்கவேண்டும்.

கைகொடுத்த தெய்வம், மிஸ்ஸியம்மா போன்ற சாவித்ரியின் படங்களை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது, What an artist?Follow kummachi on Twitter

Post Comment

3 comments:

வருண் said...

****அடுத்த நாள் தலையில் இருந்த கட்டுகளை அவிழ்த்து அந்தர் பல்டி அடித்து தன்மானத் தமிழன் ஆகிவிட்டான்.****

இதெல்லாம் இங்கே எவனுக்கும் புரியாது. வீடியோ போட்டுக் காட்டினால், அதெல்லாம் போலிசை கல் எறீந்து தாக்கத்தான் செய்வோம், அவங்க அடி வாங்கிக்கனூம்னு சொல்லுவார்கள். சட்டம் ஒழுங்குனா என்னனே தெரியாதுனா என்ன செய்றது.பாவம் இந்தப் போலிப் போராளீ "நடிகனை"ப் பார்த்து வீரன்னு சொல்றாங்க.! Seems like he is a "set up" by these guys!

காங்கிரஸ் ஆட்சியின் போது தமிழனுக்கு முழு எதிரி காங்கிரஸ். காங்கிரஸோட கூட்டு சேர்ந்த கருணாநிதி இன துரோகினு இந்த நாய்கள்தான் குரச்சது. இப்போ பி ஜெ பி யும் முக்குலதோர் வகை வந்த பன்னீர் செல்வமும், கவுன்டர் எடப்பாடியும் தமிழின துரோகி, தமிழரை கொலை செய்கிறார்கல்ணு குரைக்கிறார்கள்.

குடிகாரப்பயலுக மாதிரி நேத்து என்ன சொன்னோம்னு இன்னைக்கு ஞாபகம் இல்லை!!!

கும்மாச்சி said...

ஆக மொத்தத்தில் குரைத்துக்கொண்டுதான் இருப்பார்கள்.

sarathy said...

நவரச பதிவு. அருமை

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.