Tuesday 17 June 2014

அம்மா க்வாட்டர் வருது...........

அம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா தண்ணீரும் பின்னர் அம்மா உப்பும் வந்தபடியால் இனி அடுத்து என்ன அம்மா பெயரில் வெளியிடலாம் என்று அம்மாவின் அல்லக்கை அமைச்சர்கள் நாளொரு மேனியும் பொழுதொரு திட்டமுமாக சிந்தித்து அதிகாரிகளை பெண்டு எடுத்துக் கொண்டிருக்கிறார்களாம் அந்தவகையில் சில...........வந்தாலும் வரலாம்........

அம்மா புளி: ஏழை எளிய மக்களின்  நலத்தை கொண்டு தமிழக மக்களை தன் மக்கள் போல் காக்கும் தாயுள்ளம் கொண்ட புரட்சி தலைவி அம்மா அவர்களின் பொன்னான ஆட்சியிலே மலிவு விலை புளி "அம்மா புளி" என்ற பெயரில் அரசு நியாவிலை கடைகளில் கிடைக்கும். இதனால் எண்ணற்ற ஏழைகள் சாம்பார் வைத்து உண்ண முடியும்.

அம்மா பருப்பு: தமிழகம் எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடியாக திகழும் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆணைப்படி சாம்பார் வைக்க பருப்பு "அம்மா பருப்பு" என்ற பெயரில் எல்லா அரசு நியாய விலைக்கடைகளிலும்   மலிவு விலையில் விற்பனை செய்யப்படும்.

அம்மா பெருங்காயம்: சாம்பார் மணக்க பெருங்காயம் "அம்மா பெருங்காயம்" என்ற பெயரில் அரசாங்க நியாய விலைக்கடைகள் மலிவு விலையில் விற்பனை செய்யப்படும்.

அம்மா கோழி: ஏழைகளின் நிலைமையை நினைத்து வருந்தும் அம்மா அவர்களின் நல்லாட்சியிலே குழம்பு ருசிக்க இனி கோழி இறைச்சியும் "அம்மா கோழி" என பெயரிடப்பட்டு நியாய விலைக்கடைகளில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

அம்மா மசாலா: கோழி கொடுத்தால் ஏழைகள் மசாலா  இல்லாமல் நொந்து போவார்களே என்று கருணை உள்ளம் கொண்டு அம்மாவின் இதயத்திலிருந்து பிறந்த இந்த  திட்டம் "அம்மா மசாலா" என்ற பெயரில் மசாலா பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படும்.

அம்மா டீ: ஏழை எளியவர்கள் மகிழ்ச்சியுற அம்மா டீ இனி மலிவு விலையில் வழங்கப்படும்.

அம்மா க்வாட்டர்: ஆர்வ மிகுதியால் ஒரு அமைச்சர் "அம்மா க்வாட்டர்" மலிவு விலையில் குடிமகன்களுக்கு வழங்கலாம் என்று அம்மாவிடம் சொல்லப்போக இந்த அமாவாசையில் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட உள்ளது.






Follow kummachi on Twitter

Post Comment

11 comments:

ராஜி said...

அம்மா அவர்களின் ஆணைப்படி சாம்பார் வைக்க பருப்பு "அம்மா பருப்பு" என்ற பெயரில்
>>
சாம்பார் மட்டும் போதுமா!? இட்லிக்கு உளுத்தம் பருப்பு, வடைக்கு கடலைப் பருப்பு, போஷாக்குக்கு முந்திரி, பிஸ்தா, பாதாம் பருப்புலாம் கூட குடுக்கனும்.

ராஜி said...

அம்மா குவார்ட்டரோடு அம்மா ஊறுகாயும் கொடுக்கச் சொல்றாங்க எங்க ஊர் குடிமக்கள்.

நெல்லைத் தமிழன் said...

x

நெல்லைத் தமிழன் said...

நகைச்சுவைக்காக எழுதப்பட்டிருந்தாலும், ஏழைகளை மனதில் நினைத்துப் பார்க்கவேண்டும். சென்டிமென்டாக உப்பைக் கையில் எடுத்திருந்தாலும், ஏழைமக்களுக்குப் பயன்படும் பொருள்களை மலிவு விலையில் கொடுப்பது வரவேற்கத்தக்கது.

எதிலெல்லாம் பதுக்கல், கொள்ளையடித்தல் இருக்கிறதோ அதிலெல்லாம் மலிவுவிலை வியாபாரத்தில் இறங்குதல் சரி என்று தோன்றுகிறது.

ஆனா, இப்போ அம்மா உணவகத்தில் ஐ.டி பணியாளர்கள் சாப்பிடுவதுதான் சகிக்கலை.

கும்மாச்சி said...

ராஜி உங்களது கோரிக்கை அம்மாவிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது, ஊறுகாய் வருகிறதா? என்று பாப்போம்.

கும்மாச்சி said...

நெல்லைதமிழன் இந்த மலிவு விலைகளின் உள்நோக்கம் ஏழை மக்குளுக்காக என்றால் வரவேற்போம், ஆனால் இதில் இருக்கும் உள்குத்து விஷயங்கள் உறுத்துகின்றன.

Unknown said...

நெல்லைத் தமிழனுக்கு,

ஏழை மக்களுக்குக் கொடுப்பது அம்மையாரின் எண்ணமானால் எல்லாப் பொருட்களிலும் அவர் படத்தையும் பெயரையும் பெரிதாக ஏன் போட வேண்டும், அதுவும் மக்களின் வரிப்பணத்திலிருந்து வரும் பொருட்களில். (அம்மா நீர் பாட்டிலில் அவர் படம் தவிற அம்மா என்று எழுத்து கூட இருக்கிறது) இதில் தரமற்ற, சுயநல அரசியல்தான் தெரிகிறது.

நீதிபதிகள் நாக்கைப் பிடுங்கிக் கொள்கிறார்போல் அம்மா என்பதன் அர்த்தம் என்ன என்று கேட்டது தெரியுமா.

கோபாலன்

அருணா செல்வம் said...

அம்மா “புளி(லி)
அம்மா “பருப்பு“
அம்மா “பெருங்காயம்“
அம்மா “கோழி“
அம்மா “டீ“

கும்மாச்சி அண்ணா.... அம்மாவை இப்படியெல்லாம் சொல்வது தப்பில்லையா...?

கும்மாச்சி said...

கோபாலன் நீதிபதி என்ன கேட்டாலும் அவங்க அசரமாட்டாங்க.

கும்மாச்சி said...

அருணா தப்புதான், ஆனால் சொல்ல வைக்கிறார்களே.

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

நான் இன்னும் எதிர்பார்கிறேன் கும்மாச்சி பாஸ்

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.