Tuesday 24 June 2014

கலக்கல் காக்டெயில் 148

உலகக்கோப்பை 

வேலைப்பளு காரணமாக பதிவு எழுதுவதில் சற்று சுணக்கம். மேலும் உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடங்கியதிலிருந்து வெகு காலத்திற்குப் பிறகு முதன் முறையாக தொடர்ந்து இரண்டுமணி நேரம் தொலைக்காட்சிப் பெட்டியுடன் ஐக்கியம். முதன் முறையாக உலககோப்பை கால்பந்து போட்டி ஒரு கூட்டத்துடனும் ஆரவாரத்துடனும் பார்த்தது துபாயில் ஒரு நட்சத்திர ஓட்டலில், உலகமே மரடோனா, மரடோனா என்று கூவிக்கொண்டிருந்த நேரம். அதற்கு முன் கால்பந்து பற்றி கேட்டால் "ஐயம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் இந்திரன்" அளவிற்கு நியானம்.

தற்பொழுது கிட்டத்தட்ட மூவாயிரம் ரூபாய் கொடுத்து கால்பந்து போட்டி பார்க்க ஆர்வம் வந்துள்ளது. நேற்றைய தினம் நெதர்லாந்து வீரர் ராபினின் ஆட்டத்தைப் பார்த்ததற்கே மூவாயிரம் ரூபாய் ஜெரித்துவிட்டது.

ஜூலை 13ம் தேதி வரை ரிமோட் கண்ட்ரோல் வீட்டு அம்மணி கண்ணில் படாமல் பார்த்துக்கொள்ளுவதுதான் இனி பெரிய பாடு.

டேஷ் போர்டுக்கு சூனியம் வைத்து விட்டார்கள்

எனது ப்ளாக் டேஷ் போர்டில்  ரீடிங் லிஸ்டில் ஒரு பதிவுதான் காண்பிக்கிறது. இது என்னடா நமக்கு வந்த சோதனை என்று இருக்கிற எல்லா பட்டன்களை  சொடுக்கிப்பார்த்தும் பழையபடி "பப்பரபா" என்று இளிக்கிறது. இந்தப் பிரச்சினை நமக்குதான் போலும் யாரோ சூனியம் வைத்துவிட்டார்கள் என்று நேற்றுவரை நினைத்திருந்தேன்.

இன்றுதான் அவர்கள் உண்மை தளத்தில் "ராமலக்ஷ்மிக்கு வந்தப் பிரச்சினை" உங்களுக்கும் நேரலாம் என்ற பதிவைப் படித்ததில் எல்லோருக்கும் இந்தப் பிரச்சினை இருப்பது தெரிய வந்தது. தானாக சரியாகிவிடுமாம்.

பார்ப்போம்.

கண்ணதாசன்  

கண்ணதாசனின் பிறந்ததினம் இன்று. கவிதையின் எளிமையை நமக்கு உணர்த்தியதில் கண்ணதாசனின் பங்கு அளப்பரியது. பல புறநானூற்று கால காதல் இலக்கியங்களில் பதவுரைகளும்,  பொழிப்புரைகளும்  இல்லாமல்

 "தாமரை பூவினில் வண்டு வந்து
 தேனருந்த மலர் மூடிக்கொள்ள
 உள்ளிருந்தே வண்டு ஆடுதல் போல்
 என் உள்ளத்தில் நீ நின்று ஆடுகிறாய்"

என்று எளிய வரிகளில் புரிய வைத்தவர்.

அவருடைய கவிதை நயம் இன்றும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ரசித்த கவிதை

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
'
அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்!ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
'
அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!

- கண்ணதாசன்


ஜொள்ளு







Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

ராஜி said...

எல்லோருக்கும் இந்தப் பிரச்சினை இருப்பது தெரிய வந்தது
>>
இப்போ நிம்மதியா இருக்குமே!

கும்மாச்சி said...

ராஜி ரொம்ப சரியா சொன்னீங்க.

திண்டுக்கல் தனபாலன் said...

ப்ளாக்கர் டேஷ் போர்ட் உட்பட அனைத்திற்கும் தீர்வு : நமக்கான திரட்டி எது...? [http://dindiguldhanabalan.blogspot.com/2014/05/Speed-Wisdom-8.html (எனது அனுபவம் இது போல் 1 வருடம் முன்பே )

கும்மாச்சி said...

தனபாலன் உங்களது உபயோககரமான தகவலுக்கு மிக்க நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.