Monday 27 February 2017

ஹைட்ரோகார்பன் திட்டம்-நெடுவாசல்

மீபத்திய செய்திகளில் நாம் அடிக்கடி கேட்டுக்கொண்டிருப்பது ஹைட்ரோகார்பன் திட்டம்,  நெடுவாசல் என்ற இரண்டு வார்த்தைகளை. இந்த திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் மக்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். போராட்டத்தை நாம் ஆதரிக்கிறோம். இந்தியாவின் வளர்ச்சி என்று சொல்லிக்கொண்டு நடுவண் அரசு தமிழ் நாட்டில் கொண்டு வரும் திட்டங்கள் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு உதவப்போவதில்லை. மாறாக தமிழ் நாட்டை ஒட்டு மொத்தமாக அழிக்கப் போகிறது.

நெடுவாசலில் பூமிக்கடியில் இயற்கை எரிவாயு (ஹைட்ரோகார்பன்) வளம் உள்ளது என்று சில வருடங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது. தற்பொழுது அந்த இயற்கை எரிவாயுவை வெளிக்கொணரும் திட்டத்தை நிறைவேற்ற இருக்கிறது. அதற்கு தமிழக அரசும் ஒப்புதல் கொடுத்துவிட்டது. யார் கொடுத்தார்கள் என்று ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் ஒருவரை ஒருவர் கை காண்பித்துக் கொண்டு இருக்கிறார்கள். மக்களுக்கு தெரியும் இருவருமே காரணம் என்பது.

இந்த திட்டத்தின் சாதக பாதங்கங்களை அலசிப்பார்த்தால் இந்த திட்டத்தினால் கிடைக்கும் நன்மைகளை விட இழப்புகள் அதிகம் என்பதை பாமர மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் வீதிக்கு வந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இந்த குழம்பியக் குட்டையில் அரசியல் மீன் பிடிக்க சில அல்லக்கைகள் கூட்டம் கூட்டி மைக் பிடித்து ஹைட்ரோ கார்பன் என்றால் என்ன, அது மீதேன் தான்பா அதுக்கு இன்னொரு பேர் இருக்கு என்று பாட்ஷா வசனம் பேசிக்கொண்டு ஜல்லியடிக்கிறார்கள். சீமானோ இந்த வாயுவை எடுக்க (அவரது கூற்றின் படி காற்று) ஆழ்துளை கிணறுகள் தோண்டும் முறை அதனால் பூகம்ப வாய்ப்பு என்று அடித்து விட்டுக்கொண்டிருக்கிறார்.

நெட்டிசன்கள் அவர்கள் பங்கிற்கு "யாரோ பானபுத்திரறாம், பத்திரரும் இல்ல புத்திரரும் இல்ல" என்று ஹைட்ரோக்கர்பனை வைத்து "செய்து"கொண்டிருக்கிறார்கள்.
இது தான் மீதேன் கிணறு என்றும் இதை அணைக்க இதை தோண்டிய நாடு  இன்னும் முயன்று கொண்டிருக்கிறது என்று!!!! அடேய் அடேய் சும்மா அடிச்சு விடாத!!!!!

ஹைட்ரோகார்பன் பற்றிய ஆராய்ச்சியை பத்தாம் வகுப்பு மாணவர்களின் வேதியல் தேர்விற்கு விட்டுவிடுவோம். நெடுவாசல் மக்கள் நன்றாகவே தெரிந்துகொண்டுதான் இப்பொழுது போராடுகிறார்கள் என்பது உண்மை.

கர்நாடக வளர காவிரி யு டர்ன் அடித்தது
ஆந்திரா கொழிக்க பாலாறு வரண்டது
கேரளா செழிக்க முல்லைபெரியாறு முடங்கிவிட்டது
கோக்ககோலா ஓட தாமிரபரணி நின்றது
இலங்கை இன்புற மீனவர்கள் துன்புறுகின்றனர்.
இனி இழப்பதற்கு ஒன்றும் இல்லை.

போராடுபவர்களுக்கு முடிந்தால் நாம் உதவுவோம், அதுவரை இந்தப் பிரச்சினையில் குளிர்காய நினைக்கும் ஒட்டு பொறுக்கிகளே ஒதுக்கி வைப்போம்.

Follow kummachi on Twitter

Post Comment

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இன்னமும் விழிப்புணர்வு அதிகம் தேவை...

கும்மாச்சி said...

உண்மை தனபாலன், வருகைக்கு நன்றி.

Yarlpavanan said...

எழுச்சி மிக்க சிறந்த படைப்பு
விழிப்புணர்வு மலர வேண்டும்

vimalanperali said...

போராட்டம் நம் வாழ்வியல் முறை!

வேகநரி said...

கும்மாச்சி நெடுவாசல் போராட்டத்தை ஆதரிக்கிறார்.
இது நன்மையா தீமையா என்பது எனக்கு தெரியாது!
தமிழ் மக்கள் பெரும்பான்மையினர் எதற்காக தமிழகத்தில் போராடுகிறார்களோ, அதற்க்கு பிரமுகர்கள், சினிமா பிரமுகர்கள் அரசியல்வாதிகள், ஆதரவு கொடுக்கிறார்களோ அதன் உண்மை தன்மை பற்றி எனக்கு மிகவும் சந்தேகம். கேள்விகள் உண்டு.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.