Tuesday 21 February 2017

கலக்கல் காக்டெயில் 178

மிஸ் யூ தலைவா....

இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் தமிழகம் கண்டிப்பாக ஒரு சிறந்த அரசியல் தலைவரின் அறிக்கைகளையும், போராட்ட வியூகங்களையும் இழந்திருக்கிறது. என்னதான் செயல்தலைவர் ஒரு சில முடிவுகளை எடுத்து அரசியல் ஆர்பாட்டங்கள் நடத்தினாலும் தலீவரின் ஒரு அறிக்கை செய்யும் மாயத்தை செய்யமுடியவில்லை.

எவ்வளவோ அரசியல் எதிரிகளை பார்த்துவிட்டார். இவரது அறிக்கைகளின் தன்மை எதிரிகளை சும்மா இருக்க விடாது, ஒன்று பதிலறிக்கை வெளியிடவேண்டும் அல்லது அவர் சுட்டிக்காட்டிய தவறுகளை திருத்திவிட்டு ஜல்லியடித்தாக வேண்டும்.  இதற்கு சிறந்த உதாரணம் மறைந்த இரண்டு முதலமைச்சர்களுமே. இருவருமே இவரது எதிர்கட்சி செயல்பாட்டுக்கு தெரிந்தோ தெரியாமலோ மதிப்பளித்தனர்.

தலைமைசெயலகத்திலிருந்து தகவல்கள் முதலமைச்சருக்குப் போகுமுன்பே எதிர்கட்சி தலைவரான இவரது வீடு தேடி வந்துவிடும். அதை வைத்துக்கொண்டு இன்னும் பல புள்ளிவிவரங்களையும் வைத்து வார்த்தை ஜாலத்தில் அறிக்கை வாயிலாக எதிரணிக்கு குடைச்சல் கொடுப்பார்.

இன்று அவர் செயல்படும் நிலையிருந்தால்.....

ஊழல் பெருச்சாளிகளின் சாம்ராஜ்யம் முடிந்தது
வளையில் பெருச்சாளிகள்
கவலையில் மக்கள் ..............
உடன்பிறப்பே
உண்மத்தம்கொண்டோர்
கூவத்தூரில்
கூடியிருக்க
களம் பல கண்ட நாம்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
அறமே தவமெனக் கொண்டு
ஆட்சி அமைப்போம்...

என்று அடித்துவிட்டிருப்பார்.

மிஸ் யூ தலைவா.................


றைந்திருக்கும் எதிரி 

முதன் முதலாக தமிழக மக்கள் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ஒரு வருட காலத்திலேயே எதிர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். வழக்கமாக ஐந்து வருடத்திற்கு ஒரு முறை இந்த முடிவை எடுப்பார்கள். அதற்கு காரணம் தற்பொழுது நடந்த உட்கட்சி பூசல்களும் கட்சியையும் ஆட்சியையும் ஒரு மாஃபியா கும்பல் கபளீகரம் செய்வதை தடுக்க முடியாத கையாலாகத்தனம்.

ஏழு கோடி மக்கள் விரும்பாத ஒரு முதலமைச்சரை வெறும் 122 பேர் முடிவில் வைக்கும் நமது அரசியல் சாசனத்திற்கு இப்பொழுது தேவை ஒரு சீராய்வு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்களின் விருப்பத்திற்கு அப்பாற்பட்ட முடிவை எதிர்கொள்வது, ஏற்கக்கூடியதல்ல.

இனி நமது போராட்டம் இந்த காசு போட்டு ஒட்டு பொறுக்கும் அரசியல்வாதிகள் மேல் மட்டுமல்லாமல் இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் மீது திரும்ப வேண்டியது அவசியம்.

சித்த கவிதை

நீதியை தேடி 

நித்திரையில் வரும் கனவோ!
நிழலாய்த்தொடரும் உறவோ!
கடையில் இருக்கும் பொருளோ!
காகிதத்தில் எழுதும் கதையோ!

நீதியும் தராசும் நிதியின் பக்கம் -
நிழலாய்ப்போனதில் 
மெய்யும் இன்று 
பொய்யாய்ப்போனதே!

வாய்தா வாங்கியே வழக்கும் நீளுது!
வறுமை அன்றோ வரட்சியில் வாடுது !
கேட்டுப்பையில் காசும் நிறைந்தது !
கோர்ட்டில் ஃபைலோ கேசாய் குமியுது!

நீதியைத்தேடி ஒரு கூட்டம் !
நித்திரை தொலைத்து ஒரு கூட்டம்!
தானாய்  சேருது ஒரு கூட்டம்!
இணையதளத்தால் கூடுது ஒரு கூட்டம் !
வீதியைய் நிறைத்தது ஒரு கூட்டம்! 
விளங்கவும் மறக்குது ஒரு கூட்டம் !

நாட்டை பிடித்த கேடா!
நயவஞ்சகத்தின் நாடா!
எதிர்க்க துணிந்தோம்;
எதிரியும் இல்லை!

நன்றி: H. ஹாஜா மொஹினுதீன் 

மிழ் சினிமா 2017 ம் வருடத்தில் இதுவரை 21  படங்கள் வெளிவந்துள்ளன. சரி அதனால் என்ன? என்றுதான் கேட்கிறீர்கள். ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை கொடுக்கவில்லை என்பதே நிதர்சனம் (வாயால் வடைசுடும் வியாபர தகவல்கள் நீங்கலாக).

2016  டிசம்பரில் வெளிவந்த "துருவங்கள் பதினாறு" நல்ல படம் என்று நண்பர்கள் சொல்லுகிறார்கள் இன்னும் பார்க்கவில்லை.

தெலுங்கு திரைப்பட உலகில் இந்த வருடம் 8 திரைப்படங்கள் வந்ததில் நான்கு அமோக வெற்றியாம், தயாரிப்பாளர்கள் இப்பொழுது அங்கு ரீ மேக் உரிமைக்கு அடித்துக்கொண்டிருப்பார்கள். 

Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நாமே தேடிக் கொண்ட தலைவிதி…~~!

கும்மாச்சி said...

உண்மை தனபாலன்.

ஸ்ரீராம். said...

காலம் மாறட்டும். கவலைகள் தீரட்டும். து.16 நான் கூடப் பார்க்கவேண்டும்.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ஸ்ரீராம்

Yarlpavanan said...

"நீதியும் தராசும் நிதியின் பக்கம் -
நிழலாய்ப்போனதில்
மெய்யும் இன்று
பொய்யாய்ப்போனதே!" என்ற
அருமையான வரிகளுக்குப் பாராட்டுகள்!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

மறைந்திருக்கும் எதிரி - சரியா சொன்னீர்கள்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.