Monday 23 January 2012

கலக்கல் காக்டெயில் -57


ஆட்சியில் இருப்பது யார்?

ர வர தமிழ் நாட்டில் ஆட்சி யார் கையில் இருக்கிறதென்றே தெரியவில்லை. ஆத்தா எந்த முடிவெடுத்தாலும் உயர்நீதிமன்றமோ இல்லை மேல் முறையீடு செய்தவுடன் உச்சநீதிமன்றமோ அம்மாவின் ஆணைக்கு அப்பப்போ ஆப்பு வைத்து விடுகிறார்கள். சமச்சீர்கல்வி, அண்ணா நூற்றாண்டு நூலகம், மக்கள் நலப்பணியாளர்கள் வரிசையில் இப்பொழுது புதிய தலைமை செயலகத்தை அம்மா மருத்துவமனையாக்குகிறேன் என்று அரசாணை பிறப்பித்து டெண்டரும் விட்டு ஒப்பந்தப் புள்ளிகள் கோரும் வேளையில் உயர் நீதிமன்றம் மத்திய அரசின் மாசு கட்டுப்பாட்டு துறையின் அனுமதி பெற்றாகிவிட்டதா? என்று தாற்காலிகமாக நிறுத்திவிட்டது.

ஆனால் அதையெல்லாம் பற்றி ஆத்தாவுக்கென்ன? நான் ஏதாவது இப்படி அதிரடியாக செய்துகொண்டுதான் இருப்பேன், என்னை யாரும் ஒன்றும் செய்யமுடியாது!! என்று தினம் ஒரு கூத்து அரங்கேறும்.ஒரு அணில் காக்காவாகிறது

முதலில் “அணில்” அப்பா, அம்மாவை பார்த்து பூங்கொத்து கொடுத்து நடந்து முடிந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவரானார், அதற்கே உன்பாடு என்பாடு என்று ஆகிவிட்டது அவருக்கு. அடுத்ததாக உ.பி.ச. துரத்தப்பட்டவுடன் அணில் ஆத்தா அந்த இடத்தில் இப்பொழுது இருக்கிறாராம். உ.பி. ச தோட்டத்தில் செய்து கொண்டிருந்த வேலைகளை இப்பொழுது இவர்தான் பார்த்துக்கொள்கிறாராம். அதற்கு அச்சாரமாகத்தான் இசைக்கல்லூரிகளின் மேற்பார்வை பொறுப்பை அம்மா கொடுத்தாராம்.

எப்படியும் அப்பனும், ஆத்தாளுமாக சேர்ந்து அணிலை அலாக்காக அரசியலில் “கிடக்கிறது கிடக்கட்டும், கிழவியை தூக்கி மனையில் வை” என்று தூக்கி வைத்துவிடுவார்கள் போல.
எப்படியோ “அணில்” கூட்டம் இப்பொழுது காக்கா கூட்டமாக மாறிக்கொண்டிருக்கிறது. எந்த ஆட்சி வந்தாலும் இவர்கள் சலுகைகள் பெறாமல் இருக்க மாட்டார்கள். முந்தைய ஆட்சியில் அங்கு ஒட்டிக்கொண்டு நல்ல கல்லா கட்டினார்கள், கடைசியில் வந்த பிணக்கில் காக்கைகள் திசை மாறிடிச்சு.

பொதுக்குழு

குடும்பத்தில் இப்பொழுது குடுமிபிடி சண்டை என்றவுடன் பொதுக்குழுவை கூட்டுகிறார் ஐயா. அதிலும் குழப்பமாம். பெரிசு சொன்ன தேதியை தளபதி ஒப்புக்கொள்ளவில்லையாம். அந்தவீட்டு சகோதரி கலந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே பிப்ரவரி மூன்றாம் தேதிதான் கூட்டம் என்பதில் குறியாக உள்ளாராம்.

துணைவியார், நான் உயிரோடு இருக்கும்பொழுதே என் பெண்ணை இப்படி காய்ச்சுகிறார்களே என்று ஒரே புலம்பலாம்.

நல்லா அடிச்சுகிட்டு சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க, நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வந்தாலும் வரலாம்.ரசித்த கவிதை

கனவு வந்து போனபின்பும்
காட்சி மனதில் எஞ்சியிருப்பது போல் 
நீ வந்து போனதற்கான தடயங்களின்
நிழல்களை என் மனதுக்குள் தந்துவிட்டு
நிஜங்களை நீ பறித்து செல்ல-நான்
நிழலாய் பின் தொடர்கிறேன்-உன்னை
உந்த நினைவுகளைச் சுமந்த படியே.........

----------------சி.உதயா
இந்த வார ஜொள்ளு

Follow kummachi on Twitter

Post Comment

5 comments:

Anonymous said...

கலக்கல் காக்டெயில்...கலக்கல்...சில நீதிபதிகள் அதிக ஈகோ ..ஜெ யை விட...

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ரெவ்ரி.

mage said...

kizham thalaila onnum ellai adhukke puriyala enga poi pudungaradhunnu. amma enna mayi.... analum kavalaipadadha adhu pona vazhiyile poikittu erukeedu

ஹேமா said...

கவிதை ரசனை !

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ஹேமா.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.