Friday 13 January 2012

நாயர் சாம்ராஜ்யம்-(3)


ழக்கம் போல் நாயர் கடையை இரவு பதினொரு மணிக்கு அடைத்து விட்டு வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது மனைவியும் குழந்தையும் வீட்டின் உள்ளே உறங்கிக் கொண்டிருந்திக்கிறார்கள், நாயர் மாட்டுத்தொழுவத்தின் அருகில் உள்ள திண்ணையில் படுத்திருக்கிறார்.
காலை கன்றுக் குட்டியின் சத்தத்தை கேட்டு விழித்துக் கொண்டு மாடு கறக்க மனைவியை விளித்திருக்கிறார். அவளின் பதில் வராதது கண்டு மாட்டுத் தொழுவத்தில் பார்த்திருக்கிறார், மாடு கறக்கப் படாமலே இருந்திருக்கிறது. பின்பு எல்லா இடத்திலும் மனைவியையும் குழந்தையையும் தேடியும் கிடைக்கததால் இடிந்து அப்படியே உட்கார்ந்துவிட்டார். காலையில் டீ கடை திறக்காததால் வந்த வாடிக்கையாளர்கள் சிலர் ஆச்சர்யத்துடன் மூடியக் கதவை பார்த்து விலக ஆரம்பித்தனர்.

சிறிது சிறிதாக அங்கு கூட்டம் கூடத்தொடங்கியது. நாயர் யாரையும் நிமிர்ந்துப் பார்க்கவில்லை. நாடார் கடையும் திறக்கப்படவில்லை, கூடிய சிலர் ஒவ்வொருவர் ஒவ்வொரு கருத்தைக் கூறிக் கொண்டிருந்தனர். சாதாரணமாக நாயர் கடையும், நாராயணன் கடையும் விடியலிலே திறந்து விடுவார்கள். பேக்கரியும், நாடார் கடையும் எட்டு மணிக்குத்தான் திறப்பார்கள். இன்று எல்லாக் கடையுமே திறக்கப் படாமல் இருந்தது. சந்தேகம் எல்லோர் பேரிலும் வலுத்திருந்தது. சிறிது நேரம் கழித்து, நாராயணன் தென்பட்டான். அவன் நாயரின் அருகில் வந்து அமர்ந்தான், இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

சிறிது நேரம் கழித்து வேலாயுதன் சைக்கிளில் வந்து இறங்கி நாயரிடம் எதோ சொன்னான். பிறகு மூவருமாக கிளம்பி நாடாரின் வீட்டை நோக்கி நடந்தனர். கூட்டமும் அவர்களுடன் சென்றது. நாடார் வீடு பூட்டிக்கிடந்தது. கூட்டத்தில் இப்போது சலசலப்பு, நாடார் கடை எடுபிடிப் பையன்களையும் காணவில்லை. வழக்கம்போல் கடை திறக்கும் முன்பு வரும் கணக்குப் பிள்ளை ஐயரும் கூட்டத்துடன் சேர்ந்து கொண்டார். அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை.

நாயர் கூட்டத்தில் யாருடைய முகத்தையும் பார்க்கவில்லை. எப்பொழுதும் ஒரு தூரப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தார். கண்கள் இரண்டு சிவந்திருந்தன. அப்பொழுது, நாடாரும் அவரின் மனைவிக் குழந்தைகளும், கடைப் பையன்கள் பின்னால் வர வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர். வேலாயுதன் நாடாரிடம் எதையோ கேட்க அவர் தனக்கு ஒன்றும் தெரியாது என்பது போல பாவனை செய்தார். இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை.

பிறகு வேலாயுதன் தன் சைக்கிளில் ஏறிக்கொண்டு ரெயில்வே ஸ்டேஷன் நோக்கிப் போனான். போன ஒரு மணியிலேயே திரும்பி வந்தான். நாயர் திரும்ப தன் வீட்டு வாசலில் அமர்ந்துவிட்டார். கன்றுக்குட்டிகள் இன்னும் கத்திக்கொண்டு இருந்தது.  நாராயணன் அவற்றை அவிழ்த்து கறவை மாடுகளிடம் விட்டான். வேலாயுதன் நாயரிடம் அமர்ந்து எதோ சொல்லிக்கொண்டு இருந்தான்.

நாயர் வீட்டினுள் சென்று பால்குவளையை எடுத்துக் கொண்டு மாடு கறக்கச் சென்றார். நாராயணன் அவருக்கு உதவி செய்து கொண்டு இருந்தான். வேலாயுதன் டீ கடை திறக்க ஏற்பாடு செய்யப் போனான்.
நாடார் கடை திறக்கப் பட்டது. கணக்கு பிள்ளையிடம் எல்லோரும், நாயரின் மனைவி யாருடன் போனாள் என்று கேட்க ஆரம்பித்தனர்.

அன்று மாலை அந்தக் கேள்விக்கு விடை கிடைத்தது.
.................தொடரும்

Follow kummachi on Twitter

Post Comment

11 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

தொடர்கிறேன் ...

கும்மாச்சி said...

நன்றி எஸ்.ரா.

அக்கப்போரு said...

following

அக்கப்போரு said...

தொடர்கிறேன்

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி.

சேகர் said...

அருமை...

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி.

Unknown said...

தொடருகிரேன் மாப்ள!

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி விக்கி.

ஹேமா said...

இப்போதுதான் 3 பதிவுகளையும் வாசித்தேன்.தொடரட்டும்.படங்கள் தெரிவு அழகு !

கும்மாச்சி said...

தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ஹேமா.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.