Sunday 8 January 2012

கலக்கல் காக்டெயில் -55 (++18)


அம்மா பீஃப் ஈட்டாரா

க்கீரன் பத்திரிகையில் எம்.ஜி.ஆர் சொன்னதை அம்மாவே சொன்னார் என்று ஒரு கவர் ஸ்டோரியை (மாட்டுக்கறி சாப்பிடும்  மாமி நான்) போட பத்திரிகை அலுவலகம் தாக்கலுக்கு உள்ளானது. அம்மாவை கொ.ப.செ ஆக்கலாம் என்று எம்.ஜி.ஆர் சொன்ன பொழுது ஒரு ப்ராமினை எப்படி திராவிட கட்சி கொ.ப. செ ஆக்கலாம் என்று மற்றவர்கள் ஆட்சேபனை தெரிவிக்க, எம்.ஜி.ஆர் அம்மு எனக்கு ஒரு முறை மாட்டுக்கறி சமைத்து தந்தது, அதை நான் உண்ணவில்லை பின்பு அவரே உண்டார், அவரையா இப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டாராம்.

இதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று தெரியவில்லை. மேலும் இது மாதிரியான ஜாதிரீதியான தனிமனித தாக்குதல் எந்த பத்திரிகை தர்மத்தில் உள்ளதோ தெரியவில்லை.ஆனால் மேற்படி செய்தி நக்கீரனில் வெளியானதால் கோபம் கொண்ட அம்மா விசுவாசிகள் ஆடிய தாண்டவம் இந்த தாக்குதல். நக்கீரன் தரப்பில் போலிஸ் பாதுகாப்பு கேட்டு வெகு நேரம் வரை வரவில்லை என்று  சொல்லுகிறார்கள். அரசு தரப்பிலிருந்து எந்த நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை.

நக்கீரன் கருத்துக்கு எதிர்ப்பு இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்கலாம். அதை விட்டு இது போன்ற தாக்குதல்கள் நம்மை முகம் சுளிக்க வைக்கின்றன.

கலைஞர் இதை கண்டித்திருப்பதை காணும் பொழுது “தினகரன்” தாக்குதல்கள் நியாபகம் வருகின்றன. ஒரு வேளை அவர்கள் அடித்தால் தக்காளி சட்னியும், மற்றவர்கள் அடித்தால் ரத்தமும் வரும் என்று நினைத்திருப்பார் போல.


எப்படியும் கோவாலுக்கு களிதான் இடம்தான் தெரியவில்லை, வேலூரா பாளையங்கோட்டையா என்று?

கடலூரில் தாண்டவம் ஆடிய “தானே”

டலூரில் சமீபத்திய புயல் தாக்குதல் மாவட்டத்தையே கலைத்துப் போட்டிருக்கிறது. கடலூரிலேய வெகு நாட்களுக்கு மின்சாரம் வரவில்லை. குடிதண்ணீருக்கு மக்கள் அவதிப்பட்டிருக்கிறார்கள், இன்னும் சில இடங்களில் பட்டுக்கொண்டிருக்கிரார்கள். சுற்றுப்புற கிராமங்களின் நிலைமை இன்னும் மோசம்.

நமது முதலமைச்சர் மெதுவாக நான்கு நாட்களுக்கு பிறகுதான் ஹெலிகாப்டரில் போய் பார்வையிட்டிருக்கிறார். மக்கள் தங்களுக்கு சரியான நிவாரணம் வரவில்லை என்று வீதியில் போராடுகிறார்கள். மேலும் சில இடங்களில் நிவாரணம் முழுவதும் போய் சேராமல் வட்டம், மாவட்டம், ஒன்றியம், அதிகாரிகள் என்று ஆட்டையைப் போட்டிருக்கிறார்கள்.

மத்திய அரசு இப்பொழுதுதான் புயலா? எங்கே? அடித்ததா? அப்படியா? என்று பாராமுகம் காட்டுகிறார்கள்.

மவனே இருக்குடி உங்களுக்கு ஆப்பு, நாடாளுமன்ற தேர்தல் வருமில்ல.


ரசித்த கவிதை
கள்ளிப்பால் பெண்ணே

உடலின் பசிக்காய் உறவில் திளைத்துக்
குடலிற் கருவைக் குவித்து வளர்த்துப்
பத்துத் திங்கள் பாரம் தாங்கிப்
பெற்றபின் பெற்றது பெண்மக வெனிலோ
அள்ளிப் பாலை அளிக்காது
கள்ளிப் பாலைக் கருதிக் கொடுப்பரே!

நன்றி: அகரம் அமுதா..............சிங்கப்பூர்


ரசித்த கீச்சுகள்

இறைவன் என்பவன் ஒரு மோசமான ஆர்க்கிடெக்ட், இன்பத்தை கொண்டுபோய் இரண்டு கால்களுக்கிடையிலா ஒளித்து வைப்பான்...........சரவணகார்த்திகேயன்

கையில பிரஸ் இருக்குன்றத்துக்காக சந்திரமுகி பங்களாவுக்க பெயிண்ட் அடிக்க கிளம்புவ கோவாலு ஐயோ ஐயோ...........பரத் பாரதிஇந்த வார ஜொள்ளு

Follow kummachi on Twitter

Post Comment

4 comments:

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.