Tuesday 7 May 2013

கலக்கல் காக்டெயில் -109

ஜாதி அரசியல்

மகாபலிபுரத்தில் கிளப்பிய வெறி மரக்காணத்தில் பற்றவைக்கப்பட்டு இப்பொழுது தமிழகமெங்கும் எரிந்துகொண்டிருக்கிறது. சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தது போல் அரசிய ஆதாயத்திற்காக இந்த மாதிரி வன்முறை தூண்டும் பேச்சுகளுக்கு தடை விதிக்கப்பட்டு மீறினால் தக்க தண்டனை அளிக்க வேண்டும். அரசியல் தலைவர்கள் சிறை பிடிக்கப்பட்டதானால் தொண்டர்கள் பஸ்ஸை எரிப்பது, மரங்களை வெட்டி சாலையில் போட்டு போக்குவரத்தை தடைப்படுத்துவது போன்றவை அத்து மீறிய செயல். வடமாவட்ட மக்கள் போக்குவரத்து இல்லாமல் அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். முதலில்  அரசாங்கத்தை கண்டித்து கூவிய கட்சி தொலைகாட்சி இப்பொழுது முதல்வர் எடுத்த நடவடிக்கையின் தீவிரம் உணர்ந்து பம்ம ஆரம்பித்துக் கொண்டிருக்கின்றது.

நல்ல ஆட்சி செய்யும் அம்மா "தலைவரிடம் கருணை காட்டவேண்டும்" என்று இறங்கி வருகிறார்கள்.

ஜாதி அரசியலை மக்கள் விரும்பவில்லை என்பதை எத்தனையோ தேர்தல் முடிவுகள் தெரிவித்தாலும் இவனுங்க அடங்கமாட்டேங்கிறாங்க.

கூடங்குளம் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்

கூடங்குளம் பற்றி உச்சநீதிமன்ற வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மக்களின் அச்சத்தை போக்குங்கள் என்று அறிவுரை கூறி பதினைத்து நெறிமுறைகளையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கியிருக்கிறார்கள். மேலும் கூடங்குளம் எல்லா பாதுகாப்பு வசதிகளையும் செய்து உற்பத்தியை தொடங்கலாம் என்று சொல்லியிருக்கிறது.

ஆனாலும் போராட்டக்காரர்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பு எங்களை கட்டுப்படுத்தாது என்று கூறுவது நேர்மையான வாதம் அல்ல. அப்படி என்றால் எதற்கு உச்சநீதிமன்றத்தை அணுகவேண்டும். தீர்ப்பு சாதகமாக வந்தால் ஏற்புடையது இல்லையென்றால் கட்டுப்படுத்தாது என்று சொல்லுவது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.

ரசித்த கவிதை 

துடிப்பு

சட்டெனப் பிடித்து
பட்டென அறுத்து
தடதடவெனத் துண்டாக்கி
பாலிதீன் பையில்
வாங்கி வந்த பிறகும்
துண்டுகளில்
துடித்துக் கொண்டிருக்கும்
கறிக் கோழிக்கு
முழுவதாக  சாவதற்குக்கூட
நேரம் கொடுப்பதில்லை
இன்றைய மானுடம்

--------------------------------கவிஜி

ஜொள்ளு



07/05/13






Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இன்றைய மானுடம் அப்படித்தான் ஆகி விட்டது...

reverienreality said...

கூடங்குளம்...அப்படி என்றால் எதற்கு உச்சநீதிமன்றத்தை அணுகவேண்டும். //

Just correcting....

போராட்டகுழுவினர் உச்ச நீதிமன்றத்தை அணுகவில்லை நண்பரே...

It is a ruling on பூவுலகின் நண்பர்கள்'s...

கும்மாச்சி said...

ரெ வெரி தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

அருணா செல்வம் said...

துடிப்பு... அருமையான
கவிப்பூ கும்மாச்சி அண்ணா.
ரசித்தேன்.

கும்மாச்சி said...

அருணா வருகைக்கு நன்றி.

Anonymous said...

ஜாதி, கூடங்குளம், கட்சி அரசியல், இத்தியாதிதான் ஐயா ......... இந்தியா!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.