Sunday 28 April 2013

ஜா"தீ"

ஜாதி இரண்டொழிய வேறில்லை
யார் சொன்னது?
ஒன்றே ஜாதீ
ஒன்றே குலம்
ஒருவனே தலைவன்
"ஒன்றே" எங்கள் ஜாதீ
"ஒருவனே" எம்  தலைவன்
 விதைத்த விஷங்கள்
காற்றில் கலந்த
பல்லவன் 
கடற்கரை இன்று
கண்ணீர் சிந்துகிறது
கல்லிலேகலைவண்ணம்
பகீரதனோ
அமைதி பிரயத்தனம்
காணாத கடவுள்களுக்கு
ஜாதி சான்று,
ஜாதிக்கலவரங்கள்
வீதியெங்கும்
விதைக்கப்பட்டு
கலவரங்கள்
கட்டவிழ்க்கப்பட்டு
விளைவில் தீ
விண் முட்டுகிறது
கண்டு வாளாவிருக்கும்
அரசாங்கமோ
மே(ல்)தாவிகள்
மேசை தட்ட
முறுவலிக்கிறது.
சாராயமுடன் இணைந்த
சமுதாயம்
விலையில்லா!
அறிவை தொலைத்திருக்க
நாளைய தமிழகம்
நகைப்புடன்
காத்திருக்கிறது.

Follow kummachi on Twitter

Post Comment

2 comments:

வெற்றிவேல் said...

ஜாதி பற்றி அழகாக கூறியுள்ளீர்கள்... தொடர்ந்து எழுதுங்கள்...

அருணா செல்வம் said...


கொளுத்திப் போட்டதும்
பற்றிக்கொண்டு எறிவதால்
ஜாதி “தீ“ தான்.

தலைப்பும் கருவும் அருமையாக உள்ளது கும்மாச்சி அண்ணா.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.