Friday 26 April 2013

சிவனும் பார்வதியும் வன்னியர்களே..........

சித்ரா பௌர்ணமி அன்று ஏதோ எல்லோரும் குடும்பத்துடன் நிலா சோறு உண்பார்கள் என்றும் தமிழர் பண்பாடு என்றும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நம்ம மருத்துவர் ஐயா மகாபலிபுரத்தில கட்சிக்காரங்கள எல்லாம் வைத்து சித்ரா பௌர்ணமியன்று ஒரு பெரிய மாநாடு நடத்தி தமிழர் பண்பாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறார். மாநாட்டில் பிரதான தலைப்பு "ஜாதி வெறி". ஜாதிகள் இல்லை என்று சொல்லிக்கொண்டே இந்த ஜாதி வெறியை தூண்டும் அரசியல்வாதிகள் அடிக்கும் கூத்து ஸ்ஸ்ஸ் .......ப்பா தாங்கமுடியல.

விழாவின் ஹைலைட்டு காடுவெட்டி குருவின் பேச்சு, சின்ன ஐயா, மருத்துவர் ஐயாவின் பேச்சுகள்தான். அதை வைத்து மூஞ்சி புத்தகத்திலும் ட்விட்டரிலும் நம் தமிழ்கூறும் நல்லுலகம் கலாய்த்துக்கொண்டிருக்கிறது, இல்லை இல்லை கழுவி ஊத்திக்கொண்டிருக்கிறது. அதில் சில

சிவனும் பார்வதியும் வன்னியர்களே..........காடுவெட்டி குரு.

சிவனும் பார்வதியும் வன்னியர்களே #ஏதோ மாம்பழத்த வைத்து விளையாடினது தப்பா?

பெண்களெல்லாம் வன்னியர்கள் ஆண்களெல்லாம் ..ன்னியர்களே.

கடுவுள்ன்றது யாரு?! என்ன குலம்!? என்ன கோத்திரம்!? .. #சாருஹாசன் சைட் டிஷ்கள்.

தான் என்ன சாதியென அறிந்துகொள்ள சொடலைமாடசாமி,தைலாபுரம் செல்லப்போவதாக தகவல்.

கடவுளின் சாதியைக் கண்டுபிடித்து விட்டார்கள். அடுத்து மதத்தை கண்டுபிடிக்க வேண்டியதுதான் பாக்கி.

அன்பான அரசியல்வாதிகளே, ஏனைய தெய்வங்களும் தங்கள் ஜாதி தெரிய காத்திருக்கின்றன.

சிவன் பார்வதி எங்கள் சாதி; ஆதாம் ஏவாள் எங்கள் கூட்டம்.

ஒரு நார்த் இண்டியா பிகரு மூக்குத்தியெல்லாம் போட்டுகிட்டு குறுக்க மறுக்க நடக்குது.. நார்த் இன்டியா கடவுள்ஸ்லாம் நம்மசாதிதானே?

நான் போனை எடுத்தால் கிளின்டன்,ஹிலாரி, பில்கேட்சுடன் பேச முடியும்-அன்புமணி #போன் ஒயர் அந்து ஒரு வாரமாகுது.

பெரியார் உயிரோடு இருந்தால்,கேடி வெட்டி,கில்லாடி குருக்களை தடியை வைத்து நாலு போடு போட்டிருப்பார்.

எனி பகுத்தறிவாளிகள் இன் ட்விட்டர் ப்ளீஸ் ஏதாவது பேசுங்கப்பா.

தமிழ்நாட்டில் கருணாநிதியை விடவும் கேவலமான அரசியல்வாதி ஒருவர் உண்டெனில் அது மருத்துவரய்யா அன்றி வேரொருவருமில்லை!

சமீபமாய் ராமதாஸ் மீது மக்களிடையே எந்தளவுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளதென்பதை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கழிவறைச் சுவர்கள் வெளிப்படுத்துகின்றன!

பார்வதியும் சிவனும் வன்னியர்கள் தான் - காடுவெட்டி குரு #முருகன் ஒய் கலப்பு திருமணம்?

பார்வதியும் சிவனும் வன்னியர்கள் தான் - காடுவெட்டி குரு # அதுசரி உங்க கட்சிக்கு இப்படி ஆள் சேர்த்தாதான் உண்டு.

நானறிந்த கட்சிகளிலே பாமக போல கேவலமானது எங்கும் கானோம்!

நேற்று பாமகவின் ஜாதிவெறி மாநாடு சிறப்பாக நடந்தேறியது.

நான் போனை எடுத்தால் கிளின்டன்,ஹிலாரி, பில்கேட்சுடன் பேச முடியும் - அன்புமணி! #அட! போனுல இங்கிளீஸுல பேசுறது, பிஎஸ்என்எல் ஆளுகண்ணே!!

பார்வதியும் சிவனும் வன்னியர் தான்-காடுவெட்டிகுரு. #கடவுளோடு கூட்டணி வைக்கிறேன்னு சொல்றது இதுதானோ?.

நான் ஃபோனை எடுத்தால் க்ளின்டன், ஹிலாரி, பில்கேட்சுடன் பேச முடியும்-அன்புமணி#அமெரிக்காவே அண்ணனை நம்பித்தான் இருக்கு டோய்.

நான் ஃபோனை எடுத்தால் க்ளின்டன், ஹிலாரி, பில்கேட்சுடன் பேச முடியும்: அன்புமணி #அண்ணே அதுக்கு அவங்களும் ஃபோனை எடுக்கனும்.

பார்வதியும் சிவனும் வன்னியர் தான்! -காடுவெட்டி குரு! #அய்யாவும் சிவனும் ஒண்ணு! அத அறியாதவங்க வாயில மண்ணு! ஆங்......

ராமதாசின் பேச்சில் நல்லதைத் தேடுவதும் மலத்தில் அரிசி பொறுக்குவதும் ஒன்றுதான்.

அல்லாரும் கிண்டலா அடிக்குறீங்க ,இருங்க அவங்க உறுப்பினர் அட்டைய காட்றேன் //சைண்டிஸ்ட் ,பாரெஸ்ட் கட்டர், குரு...


சிவன்=வன்னியர். பார்வதி=வன்னியர். therefore, முருகன் = வன்னியர்! ஆதி வன்னியனே கலப்புத் திருமணம் பண்ணியிருக்கான். உங்களுக்கென்ன கேடு..?

டாடி எனக்கு ஒரு  டவுட்டு காடு வெட்டிங்கிறார்களே அவர் எந்த காட்டை வெட்டினாரு#சொல்லுங்க டாடி சொல்லுங்க டாடி....டிஷும்....டிஷும்Follow kummachi on Twitter

Post Comment

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா...டிஷும்....டிஷும்... டிஷும்....டிஷும்...

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

அருணா செல்வம் said...

சிவனும் பார்வதியும் எனக்கு “அந்நியர்கள்“.

முத்து குமரன் said...

அந்த சிவனும் பார்வதியும் கூட பா.ம.க வை விரும்பாததால் தான் போன தேர்தல் ஊத்திகிச்சுன்னு ரமதாஸுக்கு யாராவது புரிய வையுங்கப்பா.

கும்மாச்சி said...

\\சிவனும் பார்வதியும் எனக்கு “அந்நியர்கள்“.//

அருணா வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

\\அந்த சிவனும் பார்வதியும் கூட பா.ம.க வை விரும்பாததால் தான் போன தேர்தல் ஊத்திகிச்சுன்னு ரமதாஸுக்கு யாராவது புரிய வையுங்கப்பா. //

முத்துகுமரன் அவிக ரெண்டு போரையும் இன்னுமா வாக்காளர் பட்டியலில் விட்டுவைத்திருக்கிறார்கள்.

”தளிர் சுரேஷ்” said...

கடவுளை கூட விடமாட்டார்கள் போல அரசியல்வாதிகள்! பகிர்வுக்கு நன்றி!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.