Monday 22 April 2013

கேப்டனுக்கு என்ன ஆச்சு? காதலித்து கைவிட்டதாக புகார்.

விஜயகாந்த் வீட்டு முன்பு சரிதா தர்ணா: காதலித்து கைவிட்டதாக புகார். சரிதான் இது என்னடா? கேப்டனுக்கு வந்த சோதனை, உள்ளே தள்ள ஐடியாவா என்றெல்லாம் யோசிக்க வைத்து,  இணையத்தில் இந்த தலைப்பைப் பார்த்து உள்ளே சென்று படித்தால் இது வேற கேப்டனாம். தட்ஸ்தமிழில் எப்படியெல்லாம் செய்தி போடுறாங்க. வர வர இந்துநேசன் ரேஞ்சுக்கு போய்ட்டாங்க. 
 
செய்தி இது தான்.
 
கரூரில் தன்னை கைவிட்ட காதலன் வீட்டுக்கு முன்பு அமர்ந்து காதலி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகில் உள்ள தாளப்பட்டியைச் சேர்ந்தவர் விஜயகாந்த் (29). தரகம்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். விஜயகாந்த்தும் மாவத்துரையைச் சேர்ந்த பழனியப்பன் மகள் சரிதாவும்(29) காதலித்துள்ளனர். இந்நிலையில் விஜயகாந்த் சரிதாவை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றுள்ளார். இது குறித்து அறிந்த சரிதா கரூர் கலெக்டர் ஜெயந்தியிடம் நியாயம் கேட்டு மனு கொடுத்தார். சரிதாவின் மனு குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் குளித்தலை மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார். போலீசார் விஜயகாந்த் மற்றும் சரிதா குடும்பத்தாரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சரிதாவை திருமணம் செய்துகொள்வதாக விஜயகாந்த் உறுதியளித்தார். ஆனால் அவருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த சரிதா நேற்று முன்தினம் மாலை முதல் விஜயகாந்த் வீட்டுக்கு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு வந்து சரிதாவை சமாதானப்படுத்தினர். விஜயகாந்துக்கு வேறு பெண்ணை திருமணம் செய்து வைக்கும் முயற்சிகள் கைவிடப்பட்டுவிட்டது என்றும், உங்களுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் சரிதாவிடம் தெரிவித்தனர். அதன் பிறகே அவர் போராட்டத்தை கைவிட்டுவிட்டு வீட்டுக்கு கிளம்பினார்.
 
கேப்டன் இந்த முறை தப்பித்துவிட்டார்.

Follow kummachi on Twitter

Post Comment

6 comments:

Jayadev Das said...

"கேப்டனுக்கு என்ன ஆச்சு? விஜயகாந்த் காதலித்து கைவிட்டதாக சரிதா புகார்" அப்படின்னு போட்டிருந்தா நடிகை சரிதான்னு நினைச்சு இன்னும் பரபரப்பாயிருக்கும் [வயசும் ஒத்துப் போகுது!! ஹி .........ஹி .........ஹி .........]

கும்மாச்சி said...

கரெக்டுதான், அங்கேதான் நம்ம பதிவர் தர்மம் தலையிட்டது.

திண்டுக்கல் தனபாலன் said...

நானும் என்னமோ நினைச்சேன்...!

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி தனபாலன்.

VOICE OF INDIAN said...

நாங்க வெயில்ல ஏற்கனவே மண்டை காஞ்சு கிடக்கோம்...........

கும்மாச்சி said...

பாலசுப்ரமணியன் வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.