Tuesday 9 April 2013

தமிழக செய்திகள்-ஒரு பயங்கர உண்மை

இணையதளத்தை திறந்தால் பெரும்பாலும் தமிழகத்தை பற்றிய செய்திகள் கீழ் கண்டவாறுதான் இருக்கிறது. அதுவும் தட்ஸ்தமிழ் தளம் இந்த மாதிரி செய்திகளுக்கு பெயர் போனது.

தர்மபுரியை உறைய வைத்த பயங்கரம்.. பஸ்சில் காதலியின் கழுத்தை அறுத்துக் கொன்ற காதலன்
ராஜபாளையம் அருகே பயங்கரம்... காஸ் சிலிண்டர் பொருத்தப்பட்ட ஆம்னி கார் வெடித்து 5 பேர் பலி
மனைவி இறந்த துக்கம் தாங்காமல் இறந்த கணவன்: திருப்புவனத்தில் சோகம்
மாணவிகளை கேலி செய்த கும்பல் - தட்டிக்கேட்ட பெற்றோர்: கட்டையால் தாக்கிய இளைஞர்கள்
வண்டி ஓட்டியபடியே புருஷன், பெண்டாட்டி சண்டை.. குழந்தை கீழே விழுந்து பலி
இதைவிட்டால் ஓடிப்போன நடிகைகள்,மருமகளுடன் குஜாலாக இருந்த மாமனார் என்று பரபரப்பு செய்திகள் போடுகிறார்கள்.

காதலன் பேச்சை கேட்டு நடிகை அஞ்சலி ஆடுகிறார்- சித்தியின் முதல் ரகசியம் வெளியீடா?
உள்ளத்தை அள்ளித்தா கவுண்டமணி' ஸ்டைல் ரயில் டிக்கெட் பரிசோதகர் சிக்கினார்! 

எந்த மச்சான்ஸ் ஆக இருந்தாலும் நான் ரெடி ............நமீதாஅதிரடி 

 

பெரும்பாலான செய்திகளின் நோக்கம் பரபரப்பே. 

 

தமிழ்நாட்டில் மின்வெட்டு அடியோடு ஒழிப்பு. உபரியாக ஐயாயிரம் மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டு கர்நாடகாவிற்கு அனுப்பப்படுகிறது.

 

கர்நாடகா காவிரியில் வினாடிக்கு ஆயிரம் டிஎம்சி தண்ணீர் திறந்து விடுகிறது. டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி.

 

சட்டசபையில் இன்று கலைஞர் வருகை தந்தார், முதலமைச்சர் அம்மா அவரை எழுந்து நின்று வரவேற்றார்.

 

இன்று தமிழக சட்டசபையில்  நிதி நிலை அறிக்கையை ஒ.பி. சமர்ப்பித்தார்.  ஆளும் கட்சி உறுப்பினர்கள் பெஞ்ச் தட்டவில்லை.

 

கேரள அரசு முல்லை பெரியாறு அணையின் உயரத்தை அதிகப்படுத்த ஒப்புதல் அளித்தது.

 

நமீதா இனி தலை முதல் கால் வரை போர்த்திக்கொண்டுதான்  நடிப்பேன் என்று பேட்டி.

 

கூடலூரில் இன்று ஒரு கணவன் மனைவி சண்டை சச்சரவின்றி  உற்சாகமாக இருந்தார்கள், ஊரார் ஆச்சரியப்பட்டு விழா எடுத்தார்கள்.

 

இந்த மாதிரி செய்திகள் எல்லாம் அவர்கள் போடவும் மாட்டார்கள், அதற்காசந்தர்ப்பமும் அமையாது. நம்ம ஆசைக்கு நம் பதிவில் போட்டால்தான் உண்டு. 

 

 Follow kummachi on Twitter

Post Comment

5 comments:

துளசி கோபால் said...

//இந்த மாதிரி செய்திகள் எல்லாம் அவர்கள் போடவும் மாட்டார்கள், அதற்கான சந்தர்ப்பமும் அமையாது. நம்ம ஆசைக்கு நம் பதிவில் போட்டால்தான் உண்டு.//

நாங்களும் இதைப்படிச்சு மனசைத் தேத்திக்கிட்டால்தான் உண்டு. இப்படியெல்லாம் நடப்பதுபோல் கனவு கூட வரமாட்டேங்குதே!

திண்டுக்கல் தனபாலன் said...

இப்படியாவது செய்திகளை இட்டு சந்தோசப்பட்டுக் கொள்ள வேண்டியது தான்... காலத்தின் கொடுமை...

நன்றி... இதில் ஏதாவது ஒன்றாவது நடக்கட்டும்...!

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி துளசி கோபால்.

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

Unknown said...

இதுல பேஸ்புக் பக்கம் வந்து பாருங்க நிமிசத்துக்கு ஒரு புரளிய கிளப்பி விடுவாங்க
நாடி கவிதைகள்

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.