Wednesday 10 April 2013

தொலைக்காட்சி, ராசி பலன்கள்

பெரும்பாலான தொலைக்கட்சிகள் காலையில் தவறாமல் ஒளிபரப்பும் நிகழ்சிகளில் ராசி பலன் கட்டாயம் உண்டு. இவர்கள் சொல்லும் ஜோதிடம் பலிக்குமா பலிக்காதா, நம்பலாமா வேண்டாமா என்ற ஆராய்ச்சிகளுக்கு அவசியமில்லை. எப்படியும் நமக்கு என்ன நடக்குமோ அதுதான் நடக்கும், அதை பற்றி முன் கூட்டியே தெரிந்துகொள்வதில் ஆர்வமில்லைதான். இருந்தாலும் இரண்டு நாட்களுக்கு முன்பு தெரியாமல் இந்த மாதிரி நிகழ்ச்சி நம்ம வீட்டு பெருசுங்க பார்க்கும்பொழுது பார்க்க நேர்ந்தது.

அதில் எண் ஜோதிடம் சொன்னவர் அன்றைக்கு சரியான மூடில் இல்லை போலும்,  அவருக்கு என்ன பிரச்சினையோ. அன்றைக்கு எல்லா நம்பர்களுக்கும் அவர் சொன்ன ஜோதிடம் வித்தியாசமாக இருந்தது.

ஒன்றாம் நம்பர் உள்ளவர்கள் இன்று எடுத்த காரியம் எதுவும் உருப்படாமல் போகும்.

இரண்டாம் எண்காரர்கள் இன்று ரெண்டுகெட்டான் நிலைக்கு தள்ளப்படுவார்கள் ஆதலால் இன்று எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.

மூன்றாம் எண்காரர்கள் செய்யும் காரியம் எதுவும் இன்று மூளியாகிவிடும். மூலையில் முடங்கிவிடுவது நல்லது.

நான்காம் எண் உள்ளவர்கள் நாய் படாத பாடு படுவார்கள்.எல்லாம் நாசமாகிவிடும்.

ஐந்தாம் எண்காரார்களுக்கு இன்று பொருள் அழிவு நிச்சயம். ஆதலால் அடுத்த வீட்டுக்காரனின் சொத்திற்கு ஆட்டையை போட யோசியுங்கள்.

ஆறாம் எண் உள்ளவர்கள் "ஆற்றில் போட்டாலும் அளந்து போடுங்க" இல்லை என்றால் உங்கள் சொத்து ஆட்டம் கண்டுவிடும்.

ஏழாம் எண் உள்ளவர்கள் இன்று தொழில் தொடங்கவேண்டாம் எதுவும் எடுபடாமல் போகும்.

எட்டாம் எண் நேயர்கள் தொட்டது துலங்காது. ஆதலால் பட்டென்று உங்கள் பாட்னரிடமிருந்து விலகிவிடுங்கள்.

ஒன்பதாம் எண் நேயர்கள் ஒடுங்கிவிடுவார்கள், இல்லை முயற்சி தொடர்ந்தாலும் ஓடிவிடுவார்கள்.

இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள் அன்று மின்வெட்டு பதினாலு மணி நேரம் என்றாலும் பின்கட்டில் படுத்திருப்பதே நல்லது என்று தோன்றியிருக்கும்.




Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

Unknown said...

நல்ல வேலை பூஜ்யம் பற்றி சொல்லவில்லை

வாருங்கள் வந்து இணையுங்கள் நாடி கவிதையில்

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா...

தப்பிச்சிட்டோம் சாமீ... !

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

முத்தரசு said...

இல்லைங்கோ
நா பாக்கலைங்கோ

பூ விழி said...

நல்ல வேலை இதையெலாம் பார்பதில்லை
'கொடும கொடுமனு கோவிலுக்கு போன அங்கு ஒரு கொடும ஜிங்கு ஜிங்குனு ஆடுச்சாம் அப்படி இருக்கு '

கும்மாச்சி said...

முத்தரசு வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

\\\நல்ல வேலை இதையெலாம் பார்பதில்லை ///

பூவிழி உங்களுக்கு நல்ல நேரம்தான் இதையெல்லாம் பார்க்காத வரையில்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இது உண்மையா உங்க கைவண்ணமும் சேந்தா மாதிரி இருக்கே.
நல்லாவே சிரிக்க வச்சது.

கும்மாச்சி said...

முரளி சார் ஓரளவுக்கு சத்தியமா உண்மை, கொஞ்சம் உப்பு காரம் என் கைவண்ணம்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.