Saturday 13 April 2013

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி--பிரபலங்களுக்கு மட்டும்

சமீபத்தில் விஜய் டி.வியில் பிரபலங்களை வைத்து நீங்களும் வெல்லலாம்  ஒரு கோடி பிரகாஷ்ராஜ் நடத்திக்கொண்டிருக்கிறார்.



அவர் உலக்கை நாயகனிடம் கேட்ட கேள்விகளில் இருந்து இந்த நிகழ்ச்சிக்கு கேள்வி தயாரிப்பவர்கள் எந்த லெவெலில் இருக்கிறார்கள் என்பது சந்தேகமாக இருக்கிறது. அதே போன்று கேணத்தனமான கேள்விகள் இதோ, விடையை பின்னூட்டத்தில் தெரிவிப்பவர்களுக்கு அடுத்த வீட்டுக்காரன் சொத்தில் ஒரு கோடி கொடுப்பதாக உறுதி அளிக்கிறோம் (நிபந்தனைகளுக்கு உட்பட்டது)

முதல் கேள்வி.............டொய்ங் ........டொய்ங்...............டொய்ங்...............டொய்ங்

1) கஸ்மாலம் எந்த மொழியிலிருந்து வந்தது?
a) செந்தமிழ் b) சென்னை தமிழ் c)தெலுங்கு d) சமஸ்க்ரிதம்

2) சென்னை தமிழில் குஜிலி என்றால் என்ன?
a) அட்ட பிகர் b) அழகான பிகர்  c)அடுத்த வீட்டு பிகர் d) ஒரு வகை நோய்

3) "வட போச்சே" என்ற வசனத்தில் வட எதை குறிக்கிறது?
a) மசால் வடை  b) கீரை வடை  c) உளுந்து வடை d) வேறு எதையோ

4) ஒன்று, இரண்டு மூன்றுக்கு பிறகு அடுத்து வரும் எண் எது?
a) நாற்பது  b) நானூறு   c) நான்கு   d) நாற்பதாயிரம்

5)ஜிகிரிதண்டா என்றால் உங்களுக்கு நினைவுக்கு வருவது?
a) கோவை   b) பெஜவாடா   c) மதுரை   d) பெத்தாபுரம்

6) ஆணி பிடுங்குவது என்றால் என்ன?
a) பிகரை கணக்கு செய்வது  b) பிகருக்கு கணக்கு சொல்வது    c)வேலை வாங்குவது    d) வேலைசெய்வது

7)  மெர்சல் என்ற சொல் தமிழ்நாட்டில் எந்த ஏரியாவில்  அதிகமாக பயன்படுத்தப் படுகிறது?
a) திருநெல்வேலி   b) பாப்பாரப்பட்டி    c) கொட்டாம்பட்டி    d) கொண்டித்தோப்பு

8) சட்ட சபையின் நடவடிக்கைகளில் முக்கியமானது எது?
a) பெஞ்ச் தட்டுவது    b) எதிர் கட்சி உறுப்பினர் முதுகில் தட்டுவது     c) செருப்பு வீசுவது  d) தூங்குவது

9) தமிழகத்தின் தலைசிறந்த "வெட்டு" எது?
a) கிடா வெட்டு     b) அதிர்வேட்டு      c) மின்வெட்டு   d) முடிவெட்டு

10) சாவு கிராக்கி என்ற சொல் எந்த நிலையிலிருந்து வந்தது?
 a) பிறப்பு  b) மூப்பு   c) ஆப்பு    d) இறப்பு

Follow kummachi on Twitter

Post Comment

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... நல்ல கேள்விகள்... அப்படியே விஜய் டிவிக்கு அனுப்பலாம்...!

”தளிர் சுரேஷ்” said...

இது போன்ற நிகழ்ச்சிகளை பார்ப்பதை தவிர்த்து வருகிறேன்! ஏற்கனவே சரத் குமார் சன் டீவியில் நடத்திய கோடீஸ்வரன் பார்த்து நொந்த அனுபவத்தில்! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

பூ விழி said...

அப்ப விஜய் டிவி கு எதிரா ஒரு கும்மச்சி டிவி வர போகுதா ..........

கும்மாச்சி said...

பூவிழி வருகைக்கு நன்றி.

சங்கர் ಶಿವಮೊಗ್ಗ said...

இந்த வீணாப்போன நிகழ்ச்சியை இன்னமும் பார்கிறீர்களா?

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சங்கர்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.