Friday 24 May 2013

செத்தான்டா சிமெண்டு மூட்டை

டில்லியில்  உருவான ஐ.பி. எல் ஸ்பாட் ஃபிக்சிங் புயல் தென்மேற்காக நகர்ந்து முபையில் மையம் கொண்டு இப்பொழுது தென் கிழக்கு நோக்கி நகர்ந்து சென்னையை தாக்கிக்கொண்டிருக்கிறது.

குர்கானில் ஒரு காவல் துறை அதிகாரி மர்மமான முறையில் மரணம் அடைந்ததில் தொடங்கியது இந்த புயல். அவர்தான் ஐ.பி. எல்லில் தில்லுமுல்லு நடக்கிறது என்ற சந்தேகத்தை கிளப்பியவர். அதன் தொடர்ச்சியாக டெல்லியில் உள்ள புக்கீஸ் கொடுத்த தகவலின் பேரில் முதலில் ஸ்ரீசாந்த், சாண்டிலா, மற்றும் சவான் என்று  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த மூன்று பேரை கைது செய்தது டில்லி காவல் துறை. அதிலிருந்து தொடங்கிய வேட்டை இப்பொழுது சென்னை வரை வந்திருக்கிறது.

ஸ்ரீசாந்த் அறையிலிருந்து கைப்பற்றிய மடிக்கணினியிலிருந்து அவர் சில நடிகைகளுடன் இருந்த ஏடாகூடா படங்களை வைத்து அவரை மிரட்டி அவரிடமிருந்து விஷயங்களை கறக்க ஆரம்பித்தனர். மேலும் அவரது மன்மத லீலைகளை நாளுக்கு நாள் காவல் துறை வெளிவிட்டுக்கொண்டிருக்கிறது. அவர் தொடர்பு வைத்திருந்த நடிகைகளில் நம்மூரு வீரமான ப்ரியம் நடிகையும் உண்டு எனபது உபரி தகவல். அவர் ஒரு மேட்சில் வீசிய ஒரு ஓவரில் குறிப்பிட்ட ஓட்டங்களை கொடுத்தே ஆகவேண்டும் என்று பேசி இந்த சூதாட்டக்காரர்கள் நாற்பது லட்சம் வரை பணம் கொடுத்ததாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதிலும் அவர் ஒரு ஓட்டம் கம்மியாக கொடுத்ததனால் புக்கிகள் பணத்தை திரும்ப கேட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. பின்னர் அதை எப்படியோ சமாளித்து பணத்தை அமுக்கிக்கொண்டுவிட்டார்.

பின்னர் மும்பை போலிஸ் மறைந்த நடிகர் தாராசிங்கின் மகன் விண்டூ தாராசிங்கை கைது செய்தது. இவர் இந்த சூதாட்டத்தில் ஏஜண்டாக செயல்பட்டார் என்று கிடைத்த துப்பின் பேரில் கைது செய்து விசாரிக்க அவர் சென்னை பக்கம் கை காண்பித்து விட அது இந்திய கிரிகெட் வாரிய தலைவர் சீனு மாமாவின் மருமகன் "குருநாத் மெய்யப்பன்" காவல் துறை விசாரணை வரை வந்திருக்கிறது.

குருநாத் தமிழில் திரைப்படங்கள் தயாரிக்கும் தொழிலில் கொடிகட்டிப் பறந்த மெய்யப்ப செட்டியாரின் பேரனாவார். இவர் ஒரு கோடி ருபாய் வரை சூதாடியிருப்பதாக காவல்துறை சொல்கிறது. மேலும் இவருக்கு ஐ.பி.எல் ஸ்பாட் ஃபிக்சிங்கில் பெரும் பங்கு இருந்ததாக காவல்துறை சந்தேகிக்கிறது. சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வீரர்களுக்கு சில நடிகைகளுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள காரனமா(மா)க இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. அந்த நடிகைகளில் விரல் நடிகரிடம் கடிபட்டவரும், உலக்கை நாயகனின் நடிகை மகளும் அடக்கம். தற்பொழுது உலக்கையின் மகள் ஒரு அதிரடி வீரருடன் ஜல்சா செய்வதாக தகவல்.


இது போதாதென்று சீனு மாமாவின் மகன் அஸ்வின் வேறு பங்காளி சண்டையில் அப்பாவை பற்றியும் மச்சானை பற்றியும் காவல்துறையிடம் போட்டுக்கொடுத்துக்கொண்டிருக்கிறார். மொத்தத்தில் சிமெண்டு சீனுவிற்கு வந்ததும் சரியில்லை வாய்த்ததும் சரியில்லை. இப்பொழுது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் உரிமையாளர் குருநாத் இல்லை என்று அணி நிர்வாகம் கூறுகிறது. சீனு மாமாவும் சம்பந்தம் இல்லை என்று சொல்கிறார். அவரது கிரிக்கட் வாரிய பதவி ஆட்டம் காணுவதால் குருநாத்தை என் மருமகனே இல்லை என்று சொன்னாலும் சொல்லுவார்.வாரியத்தில் இருக்கும் சொத்திற்கு பங்கு போட சிமிண்டு போல காத்திருக்கும் கூட்டம் அவருக்கு நாள் குறிக்கிறார்கள்.

இந்த விசாரனையில் அம்பயர்களையும் விட்டுவைக்கவில்லை. அதற்கு முதல் பலி ஆசாத் ராஃப்.

இந்த ஐ.பி.எல் சூதாட்டம் ஒன்றும் புதியதல்ல.  முதலாவது ஐ.பி.எல்  தொடக்கத்திலேயே இந்தப்போட்டிகளின் பேரில் சந்தேகம் எழுந்தது. இதன் சூத்திரதாரியான லலித் மோடி முதலில் நாயடிபட்டு நாட்டை விட்டே வெளியேறினார். பின்னர் இப்பொழுது மத்திய அமைச்சராக இருக்கும் சசி தரூர் கொச்சின் அணி உரிமையில் தில்லுமுல்லு செய்து தனது காதலிக்கு பங்கு வாங்கினார். அதனால் அவர் அமைச்சர் பதவியை இழக்க வேண்டி நேரிட்டது, பின்னர் மறுபடியும் மத்திய மந்திரியானது வேறு கதை. இது போன்ற தில்லுமுல்லுகள்தான் இப்பொழுது பூதாகரமாக உருவெடுத்திருக்கிறது.

வழக்கம்போல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொல்லி பூச்சாண்டி காட்டிவிட்டு வரவேண்டியது வந்தவுடன் அடங்கிவிடும்.

ஊழல் பெருச்சாளிகள் நிறைந்தது அரசியல் என்று தெரிந்தும் ஐந்து முறைக்கு ஒரு முறை அவர்களுக்கே ஓட்டை மாற்றி மாற்றிக் குத்தி வேடிக்கை பார்க்கும் பொது மக்களைப்போல, இதையெல்லாம் தெரிந்திருந்தாலும் மட்டையடி ரசிகர்கள் அடுத்த போட்டிக்கு அதிகாலையில் வரிசையில் நின்று டிக்கட் வாங்கி ஆர்ப்பரிப்பார்கள்.

சரிபா இன்னிக்கு யார் யார் ஆடுறாங்க?.



Follow kummachi on Twitter

Post Comment

20 comments:

TamilNews24x7 said...

ஹஹஹஹ... டைட்டிலை படிச்சிட்டு சிரிப்பை அடக்க முடியலை...!

ம.தி.சுதா said...

எல்லாம் பணம் பண்ணும் வேலை சகோ

அன்புச் சகோதரன்
ம.தி.சுதா

கும்மாச்சி said...

ம.தி.சுதா வருகைக்கு நன்றி. வெகுநாட்களுக்குப் பிறகு உங்களிடமிருந்து பின்னூட்டம் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

ம.தி.சுதா said...

தப்பாக நினைக்க வேண்டாம் இப்போதெல்லாம் வேலையோடே காலம் கழிகிறது

கும்மாச்சி said...

சுதா சமயம் கிடைக்கும்பொழுது வலைப்பூவிற்கு வந்து செல்லுங்கள் சகோ.

Anonymous said...

டைட்டில்...... முடியலை !!!! :-))))))))))))!

திண்டுக்கல் தனபாலன் said...

கொடுமைகள் இன்னும் நிறைய வெளி வரலாம்...

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

Advocate P.R.Jayarajan said...

வெளையாட்டு வினை ஆச்சு...! என்ன கேடு இவங்களுக்கு...? இதெல்லாம் தேவையா...?

நம்பள்கி said...

//சரிபா இன்னிக்கு யார் யார் ஆடுறாங்க?.//

நாட்டாமை மாத்தி எழுதங்க...
சரிபா இன்னிக்கு யார் யார் [சொல்கிறபடி] ஆடுறாங்க?

நம்பள்கி said...

செத்தான்டா சிமெண்டு மூட்டை!
பெத்தாண்டா [அஸ்வின்] கொள்ளிக்கட்டை...!

கும்மாச்சி said...

நம்பள்கி, வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

ஜெயராஜன் சார் வருகைக்கு நன்றி.

குட்டன்ஜி said...

எங்கு போய் முடியுமோ!

கும்மாச்சி said...

குட்டன் வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

இவ்வளவு நடந்தும் நாளைக்கும் சென்னை ஜெயிக்கும் பாரேன்! என்று முழங்கி கொண்டிருக்கிறான் சராசரி சென்னை தமிழன்! எல்லாம் சூதாகிவிட்டது!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

Jayadev Das said...

சாமியார் சல்சா பண்ணியதை நேரிலே பார்த்தாலும் அவர் மேல் நம்பிக்கை இழக்காத "பக்தர்கள்" போன்றவர்கள், கிரிக்கெட் ரசிகர்கள்.

கும்மாச்சி said...

ஜெயதேவ் உண்மை ஐந்து வருடத்திற்கு ஒரு முறை ஒட்டுப்போடும் மக்களைப்போல.

நம்பள்கி said...

நாட்டாமை...
'செத்தான்டா சிமெண்டு மூட்டை' தலைப்பை, "சாவாமாட்டாண்டா சிமெண்டு மூட்டை" என்று மாத்தி எழுது...!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.