Tuesday 17 December 2013

நோட்டாவுடன் புதிய கூட்டணி ----------கேப்டன் அதிரடி அறிவிப்பு

புதிய கூட்டணி குறித்து விவாதிக்க கேப்டன் பொதுக்குழுவை கூட்டியுள்ளார். அண்ணி பிரேமலதாவும், மச்சான் சுதீஷும் மேடையில்  இருக்க கட்சியில் மிச்சம் உள்ள எம்.எல். ஏக்களும் சில  வட்டம் மாவட்டங்களும் தரையில் அமர்ந்து மிச்சர் தின்று கொண்டிருக்கின்றனர்.

முதலில் அண்ணியார் பேச்சை துவக்குகிறார். தே.மு.தி.க வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் யாரிடம் கூட்டணி வைப்பது என்பதை பற்றி நாம் முடிவெடுக்கக் கூடியிருக்கிறோம். நான் நமது கட்சியின் சார்பாக முடிவெடுக்கும் உரிமையை கட்சியின் ஒரே தலைவர் (மாமோய் வீட்டுல வா வச்சிக்கிறேன்) கேப்டன் அவர்களுக்கு அளிக்கிறேன்.

பிறகு மச்சான் சுதீஷ் மைக் பிடிக்கிறார்.அக்கா அவர்கள் சொன்னது போல நமது கட்சியாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று முடிவெடுப்பதை மாமா கேப்டனின் கைகளில் அளிப்பதை நான் வழி மொழிகிறேன்.

பிறகு கேப்டன் மச்சான் சுதீஷின் பலத்த கரகோஷத்துடன் மைக்கை பிடிக்கிறார்.

நண்பர்களே கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் கூட்டணி முடிவை என்னிடம்ம் கொடுத்திருக்கின்றனர். ஆதலால் நான் தான் கூட்டணி குறித்து நல்லதொரு முடிவெடுப்பேன்.

டேய்..........மிச்சர் பேக்கட்ட கீழே பிடி.

 நான் அடிக்கடி கடவுலடனும் மக்கழுடனும் தான் கூட்டனி வைப்பேன் என்று சொழ்ழுவேன். ஆனால் மக்கழ் நமக்கு அளிக்கின்ற ஆதரவை பார்க்கும் போழ்.....து இனி கடவுளும் நம்மை கைவிட வாய்ப்புண்டு. மேலும் பண்ருட்டியார் நம்மை விட்டு போனதற்கு எனது ஆழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்த அம்மாவுடன் நாம் கூட்டணி வைத்து சந்தித்த வழக்குகள் ஏராளம். நம்மை மதுரை நீதிமன்றம், கடலூர் நீதி மன்றம் என்று பொய் வழக்குகள் போட்டு துரத்துது. மேலும் நாம் போகும் இடங்களிலெல்லாம் பீசை பிடுங்கி இருட்டடிக்குது.

கலீஞர் நான் போ சொல்ல வர சொல்ல கும்பிடு போட்டுட்டு இப்பொழுது நம்மை கைவிட்டு விட்டார்.

காங்கிரசும், பா.ஜ.க வும் என்னுடைய தலைமையில் கூட்டணி வைக்க ஒத்துக்கொண்டால் நான் நல்ல மருந்து குடித்து முடிவெடுப்பேன்.

புதுடில்லி சட்டமன்ற தேர்தலில் நமக்கு விழுந்திருக்க வேண்டிய ஓட்டுக்களில் ஆட்டையைப் போட்ட கேஜ்ரிவால் கட்சியுடன் கூட்டணி அமைக்க நான் ஒரு போதும் ஒத்துக்கொள்ள மாட்டேன்.

நம்மை விட அதிக வாக்குகள் பெற்ற "நோட்டா"வுடன் கூட்டணி அமைக்கலாமா என்று யோசித்து வருகிறேன். கூடிய விரைவில் நோட்டா தலைவருடன் பேசி நல்லதொரு முடிவை மக்கழ் மன்றத்திலே வைப்பேன்.

வழப்போகும் நாடாளு மன்றத்தேர்தலில் நாழ்ழ்ப்பது சீட்டுகளிலும் வெல்வது உழு(று)தி.

Follow kummachi on Twitter

Post Comment

17 comments:

Unknown said...

வரும் தேர்தலில் நோட்டா ஜெயிப்பது உறுதியாகிவிட்டதால் இப்படி யோசித்திருப்பார்போல இருக்கட்டும் எதுக்கும் ஒருகா தேர்தல் ஆனையத்தை சந்திச்சி நோட்டாவுக்கு கூட்டனி அமைக்க முயர்ச்சி பன்னட்டும். அவர் இப்படி வேண்டுமானால் சொல்லலாம் யாருக்கும் ஓட்டுபோட விரும்பாதவங்க எல்லாம் எனக்கு ஓட்டுபோட்டுக்கிட்டு இருந்தாங்க இப்ப நோட்டா வந்ததால அதுவும் போச்சி.

ராஜி said...

பொதுக்கூட்டத்தில் பேசும்போது தெளிவாதான் இருந்தாரா!?

திண்டுக்கல் தனபாலன் said...

என்னமோ போங்க...!

கும்மாச்சி said...

ஜெயம் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

கும்மாச்சி said...

ராஜி வருகைக்கு நன்றி.

கேப்டன் நிதானம் அறிந்ததே.

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

Robert said...

வெறும் மிக்சர் மட்டும் கொடுத்ததுக்கு கேப்டன் எதுவும் சொல்லலையா ???

Robert said...

கடவுலடனும் மக்கழுடனும் // மொதல்ல நான் கூட எதோ எழுத்து பிழையோன்னு நினைச்சேன் ..

கும்மாச்சி said...

ராபர்ட் வருகைக்கு நன்றி.

Anonymous said...

வணக்கம்
தேர்தல் என்றால் இதுவெல்லாம் சாதாரணம்......நன்றாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
த.ம 5வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கும்மாச்சி said...

நன்றி ரூபன்.

நம்பள்கி said...

தமிழ்மணம் + 1
விஜயகாந்த் பற்றி எல்லோரும் கிண்டல் செய்கிறார்கள்; அது அவரை அறியாதவர்கள் செய்யும் வேலை!

ஒரு சோதனை; டில்லியில் தனது கட்சிக்காரர்களை நிற்க வைத்து செய்தார். அது சரியானதே! வந்தால் மலை போனால்... timing சரியில்லை! ஆம் ஆத்மி அலையில் பாஜகவே பஞ்சர் ஆன போது? பாவம் அவர் கட்சியும் அடித்து செல்லப்பட்டது!

நான் அமெரிக்கா வரும் வரை அவர் என் நல்ல நண்பர்; தி.நகர் ராஜாபாதர் தெருவில் இப்ராஹிம் ராவுத்தருடன் அவர் வசித்தபோது, (திருமணத்திற்கு முன்பு) அடிக்கடி செல்வேன்; அவர் எல்லா படங்கள் நான் pre view-க்கு எனக்கு அழைப்பு உண்டு; நானும் செல்வேன்.என் நண்பர்கள் எததனை பேரை அழைத்து வந்தாலும் அவர் மகிழ்ச்சியுடன் எங்களை வர்வேர்ப்பார்!

என்னால், மூன்று மணி நேரம் படத்தில் உக்கராமுடியாது. Because, I am an A.D.H.D. நடுவில் படத்தை விட்டு எழுந்து போகக்கூடாது என்ற எழுதாத விதியால்,(அது அவமரியாதையாம்) அவர் அழைத்தாலும் நான் pre view-க்கு செல்வதை நிறுத்திக்கொண்டேன். என் நண்பர்கள் தான் என்னை திட்டுவார்கள்.

வியஜகாந்த் ஒரு மிக மிக நல்ல மனிதர்--என்னைப் பொருத்தவரை.
எங்கள் தொடர்பு அத்துப் போய்- கிட்ட தட்ட 30 வருடங்கள் ஆகிறது! என்னுடன் அவர் அவருடன் எடுத்த பல படங்கள் -- with negatives - இன்றும் என்னிடம் இருக்கிறது தேவைப்பட்டால், அவைகளை வெளியிடுவன்.

வியாகாந்த் ஒரு தங்கம்--கருப்ப தங்கம்-இதை நன்கு பழகி உணன்ர்தவன் என்று கூறுகிறேன்.

அவரை நான் 'விஜி' என்று தான் அழைப்பேன்; அவர் என்னை டாகடர் என்று அழைப்பர்; நாம எல்லாம் சம வயது தானே! சும்மா பேர் சொல்லிக் கூப்பிடுங்கள் என்று எவ்வளவோ முறை சொல்லியும்--என்னை டாகடர் டாக்டர் என்று கூப்பிட்டு சங்கடப்படுதத்துவார். எங்கள் பண்ணையத்தில் மாடு மேய்ப்பவனே என்னை 'பேர்' சொல்லித் தான் கூப்பிடுவான். வைத்தியத்திற்கு வந்தாலும், அதையும் சொன்னேன்! விஜி கேட்டால் தானே!

நான் உங்களை சந்திப்பது நண்பன் என்ற முறையில்-தொழில் முறையில் அல்ல என்று சொன்னாலும் கேட்கமாட்டார்.

காலம் இப்போ அவரை மாற்றி இருக்கலாம்; இருந்தாலும் ஒரு மணிதனின் அடிப்படை குணம் மாறது! மாறவே மாறாது!

மறுபடியும் - விஜயகாந்த் ஒரு தங்கம்!

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

அரசியல் நாற்றத்தை முற்றும் அகற்ற
முரசெனெத் தந்தீா் மொழி!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

கும்மாச்சி said...

நம்பள்கி விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர் எனும் உங்கள் கூற்றில் எனக்கு மாற்று கருத்து இல்லை.

அவருடைய அரசியல் நிலைப்பாடும், செயல்களும்தான் இங்கு விமர்சிக்கப்பட்டிருக்கின்றன.

மற்றபடி உங்களது மனதை அது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

கும்மாச்சி said...

கவிஞர் பாரதிதாசன் வருகைக்கு நன்றி.

நம்பள்கி said...

என்னை நீங்கள் கிண்டல் செய்தாலே என் மனது புண்படாது; அப்படி இருக்க, நீங்கள் விஜயகாந்தை கிண்டல் செய்தால் எனக்கு மனது ஒன்றும் புண் படாது; இந்த மனது புண்படும் என்ற வாய்ஜாலம் ஆன்மீகவாதிகள் சொத்து!

அரசியலுக்கு வந்தால் எல்லோரும் நக்கல் செய்வார்கள்; அதே நக்கலை மற்ற தலிவர்களிடம் செய்ய தமிழனுக்கு தைரியம் கிடையாது! அதைதான் நான் சொன்னேன்!

எந்த நாய் குடிக்கவில்லை? அரசே குடி கடையை திர்ந்து வைத்து விட்டு...அப்புறம் என்ன புடலங்கா?

நானே சந்தர்ப்பம் கிடைத்தால் கிண்டல் செய்வேன். கிண்டல் என் கூடப் பிறந்தது! நானே விஜயகாந்தை கிண்டல் செய்துளேன். இதை தாண்டி தான் ஒருவன் அரசியலில் ஜெயிக்கணும்--நல்ல உதாரணம் மு.க.

அவரை தாராளமாக கிண்டல் செய்யுங்கள் அது உங்கள் உரிமை!
________________
கும்மாச்சி said...நம்பள்கி விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர் எனும் உங்கள் கூற்றில் எனக்கு மாற்று கருத்து இல்லை.

அவருடைய அரசியல் நிலைப்பாடும், செயல்களும்தான் இங்கு விமர்சிக்கப்பட்டிருக்கின்றன.

மற்றபடி உங்களது மனதை அது புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.