Friday 20 December 2013

கலக்கல் காக்டெயில்-132

துணை தூதர் கைது விவகாரம்

அமெரிக்காவில் இந்திய துணை தூதர் கைது விவகாரத்தில் இந்திய அரசு அதிரடியாக நடந்து அவரை பிணையில் விடுவிக்க ஏற்பாடு செய்துவிட்டது. உண்மையில் அவரின் கைது பின்னணியைப் பார்க்கும் பொழுது நமது இந்திய அரசாங்கத்தின் ஒருதலைபட்ச மனப்பான்மை நன்றே புரிகிறது.

இந்திய துணை தூதர் தம் இல்லத்தில் வேலைக்கு வைத்திருந்த பணிப்பெண் சந்கீதாவிற்கு குறைந்தபட்ச சம்பளத்தை தராததும், அளவுக்கு அதிகநேரம் வேலை வாங்கியதும் தான் முக்கிய குற்றச்சாட்டு.

அமெரிக்க இந்திய அரசுகளின் அதிரடி நடவடிக்கைகளும் ஊடகங்களின் "நானே ராஜா, நானே மந்திரி, நானே நீதி" போக்கும் ஒரு சாமானியனுக்கு கிடைக்க வேண்டிய நீதியை மறுக்கின்றன.

சங்கீதா ராபர்ட் இப்பொழுது அரசாங்கத்தின் போக்கைக் கண்டு தலை மறைவாகியுள்ளார். ஊடகங்களை காணவும் மறுக்கிறார்.

நீதிதேவதை வழக்கம்போல் கன்னைக் கட்டிக்கொண்டிருக்கிறாள். 

தேசிய கட்சிகளுக்கு பெப்பே.........

தமிழகத்திலுள்ள இரண்டு பிரதான கட்சிகளுமே தங்களது பொதுக்குழுவைக் கூட்டி தேர்தல் வியூகங்களுக்கு ஏற்பாடுகள் செய்கின்றன.

மத்தியில் ஆண்டு கொண்டிருக்கும் காங்கிரஸ் கிட்டத்தட்ட அனாதையாக கைவிடப்பட்ட நிலை.

ஸ்பெக்ட்ரம் வழக்கு, சொத்துக்குவிப்பு வழக்கை வைத்து மிரட்டியும் இரண்டு கட்சிகளும் கூட்டு சேர மறுக்கின்றன. தற்பொழுது உள்ள சூழ்நிலையில் காங்கிரசை சேர்த்தால்  முதலுக்கு மோசமாகிவிடும்.

பி.ஜி.பி யுடன் தமிழகத்தில் தற்பொழுது சேர்ந்துள்ள ம.தி.மு.க வும், பா.ம.க வும் தி.மு.க வை கூட்டணியில் உள்ளே விடக்கூடாது என்பதில் தீவிரமாக இருக்கின்றன.

தேர்தல் முடிந்தவுடன் ஆட்சி அமைக்கும் கட்சியுடன் சேர தி.மு.க, அ.தி.மு.க இரண்டு கட்சிகளுமே தயங்காது.

ஆட்சியில் பங்குபெறும் கட்சியை வைத்து பெங்களுரு சொத்துக்குவிப்பு வழக்கு மற்றும் ஸ்பெக்ட்ரம்  வழக்கின் போக்கும் மாறும்.

இதுதாண்டா அரசியல்.

ரசித்த கவிதை

கூடிவாழ்வோம்


செந்தமிழ்ப் புகழினைக் காத்திடுவோம் - தமிழ்
     செழித்திடப் பாமலர் கோர்த்திடுவோம்!
சிந்தையில் நன்னெறி சமைத்திடுவோம் - நாடு
     சிறந்திட நல்வழி அமைத்திடுவோம்!

வறுமையை வேருடன் நீக்கிடுவோம் - கொடும்
     மடமையாம் நோய்தனைப் போக்கிடுவோம்!
கடமையால் மேன்மையைத் தேக்கிடுவோம் - நாம்
     கற்றவர் வழியை நோக்கிடுவோம்!

விலையதின் உயர்வையே குறைத்திடுவோம் - நன்கு
     விலைப்பொருள் பெருகிட உழைத்திடுவோம்!
மலையென ஒற்றுமை வளர்த்திடுவோம் - கூடி
     மகிழ்வுடன் அனைவரும் வாழ்ந்திடுவோம்!
 
கவிஞர்.கி. பாரதிதாசன் 
 

ஜொள்ளு 






Follow kummachi on Twitter

Post Comment

12 comments:

Unknown said...

படங்கள் எல்லாம் எங்கே கிடைக்கிறது

கும்மாச்சி said...

சக்கர கட்டி வருகைக்கு நன்றி.

படங்களெல்லாம் இணையத்தில் சுட்டவைதான்.

Thulasidharan V Thillaiakathu said...

கலக்கல் காக்டெயில் வழக்கம் போல் கலக்கல்ஸ்!

"அமெரிக்க இந்திய அரசுகளின் அதிரடி நடவடிக்கைகளும் ஊடகங்களின் "நானே ராஜா, நானே மந்திரி, நானே நீதி" போக்கும் ஒரு சாமானியனுக்கு கிடைக்க வேண்டிய நீதியை மறுக்கின்றன."

மிகச் சரியே!!

அரசியல் என்னத்த சொல்றது?!! வழக்கமா தேர்தல் சமயம் நடக்கும் காமேடிதானே!! யார் கைய கோர்த்துக்கறது, யார் கைய அறுத்துக்கறது!!! அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்த்தர நண்பனும் இல்லைனு சாணக்கியன்னு ஒரு அறிவு ஜீவி ஆண்டாண்டு காலத்துக்கு முன்னமேயே சொல்லிட்டு போயிட்டாரு!! முக்காலம் எக்காலம் உணர்ந்த ஞானி!!

கவிதை அருமை! ஜொள்ளு வழக்கம் போல ஜொள்ஸ்!!!!

கும்மாச்சி said...

துளசிதரன் வருகைக்கு நன்றி.

நம்பள்கி said...

Very Bad ஜொள்ளு as this is Nothing but தொப்புளு!
+1

கும்மாச்சி said...

\\நம்பள்கி said...

Very Bad ஜொள்ளு as this is Nothing but தொப்புளு!
+1//

வேறென்ன "ளு" வேண்டும் நம்பள்கி.

வருகைக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது... வாழ்த்துக்கள்...

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி தனபாலன்.

ஜோதிஜி said...

கவிஞர்.கி. பாரதிதாசன்

பாரதிதாசன் என்ற கவிஞரா? இல்லை இவர் வேற கவிஞரா?

கும்மாச்சி said...

கவிஞர் கி. பாரதிதாசன் பிரான்சில் வசிக்கிறார். அவருடைய வலைதளத்தின் சுட்டி இதோ http://bharathidasanfrance.blogspot.com/2013/12/2.html

ராஜி said...

இந்திய மேதைகளின் பவுசு உலக அரங்கில் காத்தாய் பறக்குதுன்னு சொல்லுங்க!

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ராஜி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.