Monday 16 December 2013

கலக்கல் காக்டெயில்-131

வலையில் சிக்கிய ரத்தத்தின் ரத்தங்கள் 

பொள்ளாச்சி எம்.பி. சுகுமார், தென் சென்னை எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் இருவரும் இல்லாத எண்ணை நிறுவனத்திற்கு சிபாரிசு கடிதம் வழங்க கை நீட்டியிருக்கிறார்கள். இது ஒன்றும் பெரிய செய்தி அல்ல. வழக்கமாக இந்தியாவில் உள்ள எந்த எம்.பி. இடமோ இல்லை எம்.எல்.எவிடமோ சிபாரிசு கடிதம் வேண்டி சென்றால் காசு கட்டாயம் கொடுத்தாக வேண்டும்.

ஆனால் தவறாமல் எல்லோரும் சொல்லுவது இந்தக்காசு அவர்களுக்கு அல்ல, கட்சி தலைமையிடம் கொடுக்கவேண்டும் என்பார்கள்.

இதெல்லாம் அரசியலில் சாதாரணம்.

கழற்றி விடப்பட்ட காங்கிரஸ்

தி.மு.க வின் பொதுக்குழுவில் வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்கள். இது ஸ்பெக்ட்ரம் கூட்டணியில் ஏற்பட்ட உரசல் காரணமா இல்லை தேர்தல் பேரத்தில் அதிக சீட்டில் போட்டியிட அச்சாரமாக போடப்பட்ட உவ்வாகட்டி உட்டாலக்கடியா என்பது போகபோகத் தெரியும்.

எல்லோரும் தனியாக போட்டியிட்டால்ஒவ்வொரு கட்சியின் வண்டவாளம் தெரிந்துவிடும்.

எல்லோரும் தனி என்றால் நல்ல முடிவே வரவேற்போம், ஏனென்றால் மாற்றுக் கட்சிக்கு வகையுண்டு.

தி.மு.க வுடன் கூட்டணி இல்லை என்றவுடன் இளங்கோவன் நிம்மதியாய் இருக்கிறாராம். நல்லா சொல்றாங்கப்பா.

ரசித்த கவிதை 

மலருக்கு மலர் என்று பெயர்

நினைவுத் தாழ்வாரத்தில்
பற்றி படர்ந்தேருகிறது
பதின் பருவத்தின்
மலர் ஒன்று.
மல்லி
முல்லை
பிச்சி எனும்
பெயர்கள் எதுவும் தேவையில்லை
மலர் என்பதே போதுமானதாயிருக்கிறது!.
                                                  ------கடங்கநேரியன்

ஜொள்ளு


Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

Unknown said...

ஜொள்ளு அருமை

கும்மாச்சி said...

சக்கர கட்டி வருகைக்கு நன்றி.

ராஜி said...

மலருக்கு மலர் என்று பெயர்
>>>
கவிதை நல்லா இருக்கு. அந்த கவிதைக்கு பொருத்தமான படம் உங்க ஜொள்ளு ப்குதில வரும் ஃபிகர்களோட படம்தான்.

கும்மாச்சி said...

ராஜி வருகைக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

கடங்கநேரியன் அவர்களின் கவிதை அருமை... இதுவரை அவர்களைப் பற்றி தெரியாது...

நீங்களும் கலந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன் : -

தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டி...

விளக்கம் :

http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Pongal-Special-Article-Contest.html

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

கட்டுரைப் போட்டியின் அழைப்பிற்கு நன்றி. தவறாமல் கலந்துகொள்கிறேன்.

Unknown said...

ஜொள்ளு ஜொள்ளு விடத் தொடரும் !
த.ம 2

Thulasidharan V Thillaiakathu said...

கலக்கல் காக்டெயில் சுவை. அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!! அது இல்லையென்றால்தான் அதிசயமப்பா! கடங்கநேரியன் கவிதை அருமை!! ஜொள்ளு கள்ளு(??)டன் ..ம்ம்ம்ம்ம்...super!

Thulasidharan V Thillaiakathu said...

கலக்கல் காக்டெயில் சுவை. அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!! அது இல்லையென்றால்தான் அதிசயமப்பா! கடங்கநேரியன் கவிதை அருமை!! ஜொள்ளு கள்ளு(??)டன் ..ம்ம்ம்ம்ம்...super!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.