Monday 9 December 2013

கதை சொல்லுது பாட்டி

இருண்ட தமிழகத்தைப் பற்றி எழுதாத பதிவர்களே இல்லை. என்னதான் மாய்ந்து  மாய்ந்து எழுதினாலும் படிக்க வேண்டியவர்கள் படிப்பதில்லை. நிலைமை எப்பொழுது சீராகுமோ தெரியவில்லை. சென்னையில் இரண்டு மணிநேர மின்வெட்டு என்றால் மற்ற இடங்களில் கேட்கவே வேண்டாம்.

நமக்கு தெரிந்த வரையில்  இந்த மின்வெட்டுப் பிரச்சினை தீரவே தீராது. உண்மையில் தனியார் மின்திட்டங்கள் கைவிடப்பட்டதே மின்வெட்டுக் காரணமாம். தமிழகத்தில் மட்டும் கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி போன்ற கடலோர மாவட்டங்களில் 2007ம் ஆண்டே தனியார் மின்திட்டங்கள் அமைக்க மத்திய மாநில அரசுகள் அனுமதியளித்தன. இந்த திட்டங்கள் வந்திருந்தால் 17,140 மெகாவாட் உபரியாக உற்பத்தி செய்திருக்கமுடியும்.

ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த்பாரத் மற்றும் கோல்டன் ஜென் நிறுவனங்களைத் தவிர மற்ற நிறுவனங்கள் ஐந்தாண்டுகளுக்கு மேலாகியும் பணிகளைத் தொடங்கவில்லை. இதற்காண காரணங்களாக பல்வேறு தரப்பு எதிர்ப்புகளும், உள்ளூர் பிரச்சினைகளும் சொல்லப்படுகின்றன. மேலும் கமிஷன் ரேட் படியவில்லையா என்று தெரியவில்லை.

ஏற்கனவே போடப்பட்ட திட்டங்கள் ஆளும் கட்சிகள் கேட்கும் கமிஷன் கட்டுப்படியாகததால் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடிவிட்டது பழைய கதை.

இதற்கான காரணங்களை கேட்டால் இன்றைய முதல்வரும், நேற்றைய முதல்வரும் ஒருவரை ஒருவர் குறை சொல்லுவார்கள். இல்லை மத்திய அரசின் சதி, மாநில அரசின் விதி என்பார்கள்.

ஆட்சிக்கு வருவதற்கு முன் தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மூன்றே மாதத்தில் ஆக்கிகாட்டுவேன் என்று ஒட்டு வாங்கிய பாட்டி ஒன்னாப்பு பிள்ளைகளுக்கு சொல்லுவது போல்

ஒரு காக்கா கரண்டு கம்பத்தில உட்கார்ந்திருந்ததாம். அப்போஅந்த வழியாஒரு தள்ளு வண்டி தாத்தாவும் அவர் மகன் கோணவாய் குமரனும் போய்க்கொண்டிருந்தார்களாம்.

கரண்டு கம்பத்திலிருந்த காக்கையை பார்த்து தாத்தா "விடியலின் குரலே, கருமையின் அழகே காகமே, மின் கம்பத்தில் அமர்ந்திருக்கிராயே மின்சாரம் பாய்ந்து மாள்வாய்" என்றாராம்.

அதற்கு அந்த காகம் " நீர் ஆண்ட பொழுது பிடுங்கிய மின்சாரம் இன்னும் வரவில்லை, இது கூட தாத்தா தெரியாமல் குடும்ப வாழ்க்கையில் மூழ்கி விட்டாயே, உனக்கு உன் குடும்பத்தை கவனிக்கவே நேரம் போதவில்லை, என் உயிரைப் பற்றி கவலை வேண்டாம்" என்று எள்ளி நகையாடியதாம்.

இப்படிதான் போன முறை ஆட்சி நடந்தது, அதை ஒரு காக்காகூட  எள்ளி நகையாடும்படி இருந்தது.  இப்பொழுது என்னுடைய பொன்னான ஆட்சியிலே மின்சாரம் நிரம்பி வழிகிறது. எல்லோரும் அதை பக்கெட்டில் பிடித்துக் கொண்டு போகிறார்கள்.

  என்று கதை சொல்லுவார்கள்.

மக்களும் இதையெல்லாம் கேட்டு அடுத்த முறை மாற்றி குத்துவார்கள்.

Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

அம்பாளடியாள் said...

ஆஹா ..இந்தக் காக்கா கதை கூட அருமையாகத் தான் இருக்கிறது சகோதரா :)))
இதைக் கொஞ்சம் சமந்தப் பட்ட தாத்தா பாட்டி பாக்கிற மாதிரி இருந்த எவ்வளவு
நல்லா இருக்கும் !! :))) கரண்டு வருகுதோ இல்லையோ இதனால எத்தனை வித
இன்னல்கள் பிறக்கின்றது மக்கள் மத்தியில் .உணரும் தருணம் விரைவில் வர
வேண்டும் .சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் சகோதரா .

கும்மாச்சி said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

Unknown said...

கரெண்ட்கட் நல்லது ...எங்களைச் சிரிக்கவைக்கும் பதிவை ,கும்மாச்சியை எழுத வைப்பதால் !
த.ம 2

கும்மாச்சி said...

பகவான்ஜி வருகைக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

அறியாமை...

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

அசாத்தியமான ஒரு பதிவு! நல்ல கற்பனைத் திறன், நகைச்சுவைப் பதிவு!! ஜோக்காளிக்குப் போட்டி???!!!!!

துளசிதரன், கீதா

கும்மாச்சி said...

துளசிதரன், கீதா வருகைக்கு நன்றி.

அருணா செல்வம் said...

கும்மாச்சி அண்ணா....
பேசாம காக்காவிற்கு ஓட்டு போட்டு விடலாமா...?

ஆனால் தாத்தா பாட்டியை எதிர்த்து எந்த காக்கா நிற்கும்?

கும்மாச்சி said...

உண்மைதான் எந்த காக்காவும் நிற்காது.

வருகைக்கு நன்றி அருணா.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.