Saturday 21 August 2010

எந்திரனும் ஆற்காட்டாரும்


சென்னை: டெல்லி, மும்பை, கர்நாடகத்துடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் மின் வெட்டு குறைவுதான் என்று மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார்.


ஏய் அவிய்ங்களா நீங்க, நீங்க இன்னும் போகலையா......

சென்னையில் நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர்,

தமிழகத்தில் நீர் மின்சாரம், காற்றாலை மின்சாரம், அனல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது காவிரியில் நீர்வரத்து உள்ளதால் அதிலிருந்து 200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

அய்யா கெளம்பிட்டாய்ங்கையா கெளம்பிட்டாய்ங்கையா

அனல் மின்சாரம் நிலக்கரி மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. நாடு முழுவதும் 30 ஆண்டுகளுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே உள்ளது. நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டால் இந்தோனேசியா, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யவேண்டிய நிலை ஏற்படும்.

இதே கதைய எத்தனை முறை தான் சொல்லுவீங்க. ஏங்க போன முறை இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொழுது குளறுபடின்னு சொன்னாங்களே அது டுபாக்கூரா.

காற்றாலைகள் மூலம் 7,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும் என்று எரிசக்தி மேம்பாட்டு முகமை கூடுதல் செயலாளர் கூறியுள்ளார். தமிழகத்தில் கோடையில் காற்று வீசுவது குறைவு.

எங்கே செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலையா, அதால தான் இடத்த மாத்திட்டீங்களா...........

இதுவரை காற்றாலை மூலம் 2,500 முதல் 3,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்துள்ளோம்.

சரி அதுக்கு இப்போ இன்னாங்கறீங்க.

மரம், இலை, எரு, கோழி எச்சம் ஆகியவற்றில் இருந்தும் மரபுசாரா மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது. சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க மத்திய அரசு, தமிழகத்தை ஊக்குவித்து வருகிறது.

ஏங்க இது நாலாப்பு பாடத்தில வருதுங்க, இன்னும் நீங்க பாஸ் செய்யலையா?.

சிவகங்கை மாவட்டத்தில் சூரிய சக்தியின் மூலம் 6 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.

நல்லாத்தான் ஒப்பிக்கிறீங்க, நீங்க அடுத்த வருஷம் காட்டாயம் அஞ்சாப்புதான்.

சென்னை பெருநகர வளர்ச்சி குழும விதியின்படி 5,500 சதுர அடிக்கு மேல் வீடு கட்டுபவர்கள் மற்றும் நிறுவனங்கள் அமைப்போர், சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெறும் கருவிகளை பொருத்த வேண்டும் என்ற சட்டம் விதிக்கப்பட்டுள்ளது.

இங்கே ஐநூத்தியிம்பது சதுர அடி வூட்டுக்கே முழி பிதுங்குது, அத்த விடுங்க மேலே சொல்லுங்க.

அதே போல கரும்பு சக்கை மூலமும் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. தனியார் சர்க்கரை ஆலைகள் மூலம் 300 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மூலம் 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சரி இப்போ இன்னா சொல்ல வரீங்க, நம்ம வூட்ல பாதி நேரம் மின்சாரம் இல்ல அதுக்கு இன்னா இப்போ சொல்றீங்க.

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் மின்பற்றாக்குறை குறைவு தான். தமிழகத்தை பொறுத்தவரை கிராமங்களில் 2 மணி நேர மின் தட்டுப்பாடு உள்ளது.

அப்படிப் போடு அறிவாள, சப்ஜெக்டுக்கு வந்துட்டீங்க

அதே நேரத்தில் டெல்லியில் 6 மணி நேர மின் வெட்டும், மும்பையில் 2 மணி நேர வெட்டும், கர்நாடக மாநிலம் முழுவதும்10 மணி நேரம் மின் வெட்டும் நிலவுகிறது என்றார் வீராசாமி.

அதால, தமிழ்நாட்டுல கணக்குப் போட்டு மொத்தமா பதினெட்டு மணி நேரமா.

ங்கொய்யால இங்கே ஏன் மின்சாரம் இல்லேன்னா, அங்க இல்ல இங்க இல்ல இப்படின்னு சொல்றதே உங்களுக்கும் உங்க தலைவருக்கும் பொழைப்பப் போச்சு. பாத்து பக்கத்துப் பையன பாத்து காபி அடிச்சா இன்னும் மூணு வருஷம் பயிலுன்னு சட்டம் இருக்குது. நீங்க நாலாப்பு பாஸ் பண்றா மாதிரித் தெரியல.சரி தலைப்புக்கும் சப்ஜெக்ட்டுக்கும் இன்னா சம்பந்தமுன்னு ரோசனை செய்யாம வோட்ட போடுங்கப்பு.

Follow kummachi on Twitter

Post Comment

8 comments:

Jey said...

அண்ணாச்சி இது நல்லாயில்லை சொல்லிட்டேன் ஆமா....., உங்களுக்கும் ஆற்காட்டாருக்கும் இருக்கு வாய்ன்க்கா தகராறுல ..ஏன், நாலாப்பு பெயிலு, அஞ்சாப்பு பாஸு அப்படின்னு என்னை இடையில இழுக்குறீங்க...என் வூட்டுல கூட சொல்லாம கொல்லாம அடிக்கடி கரண்ட் கட்டாவுது...சரியா பதிவெழுத முடியல..பின்னூட்டம் போட முடியல...நானெல்லாம்.. கம்முனு கிடக்கலையா..., தேர்தல் வரும்போது உங்க ஓட்டுக்கு என்ன ரேட்டோ அதுகேத்தா மாறி பைசா வங்குனோமா..ஓட்டை குத்துனோமானு போய்ட்டே இருக்கனும்....

கும்மாச்சி said...

\\தேர்தல் வரும்போது உங்க ஓட்டுக்கு என்ன ரேட்டோ அதுகேத்தா மாறி பைசா வங்குனோமா..ஓட்டை குத்துனோமானு போய்ட்டே இருக்கனும்.... //

ஐயோ ஜெயி விவரம் தெரியாம பேசறீங்களே, அந்த ஓட்டுக்கு கட்டிங் வாங்கற உரிமை எனக்கில்லை சாமி

senthil velayuthan said...

ங்கொய்யால இங்கே ஏன் மின்சாரம் இல்லேன்னா, அங்க இல்ல இங்க இல்ல இப்படின்னு சொல்றதே உங்களுக்கும் உங்க தலைவருக்கும் பொழைப்பப் போச்சு. பாத்து பக்கத்துப் பையன பாத்து காபி அடிச்சா இன்னும் மூணு வருஷம் பயிலுன்னு சட்டம் இருக்குது. நீங்க நாலாப்பு பாஸ் பண்றா மாதிரித் தெரியல.
நல்லா சொன்னீங்க போங்க

கும்மாச்சி said...

ஆமாம் செந்தில், எந்தப் பிரச்சினை என்றாலும் ஆந்திராவை பார், கர்நாடகாவை பார்னு ஜல்லியடிச்சிட்டு இருக்காங்க.

settaikkaran said...

என்னா டெக்னிக்கா எழுதுறாங்கப்பா...! :-)

கும்மாச்சி said...

சேட்டை அண்ணாச்சி வருகைக்கு நன்றி

sarathy said...

ithan padam superb, oi!

சிங்கம் said...

ஆர்காட்டாரும்தான் இந்த மந்திரிப்பதவி வேணாம்னு நெனச்சு விட்டுடட்டுமான்னு குடும்பத்தாரே கேட்டாரு.. அவிங்க விட வேணாம்னு சொல்லிட்டாய்ங்க.. அவுருந்தா என்னா பண்ணுவாரு

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.