Monday, 16 August 2010

கலக்கல் காக்டெயில்-4

என்னது? சீட்டாடி செத்துட்டானா.....................!!!!


எப்படி எல்லாம் சாவறாய்ங்கப்பா

“வடி”வா புலம்ப வச்சிட்டான் .

போனமுறை ஒரு பத்து நாள் விடுப்பில் ஊருக்கு சென்று வந்தேன். போய் இரண்டாவது நாள் நண்பனிடம் இருந்து அலைபேசி அழைப்பு. எங்களது பள்ளித் தோழன் மாணிக்கம் மாரடைப்பால் இறந்து விட்டான். உடனே வண்டி எடுத்துக் கொண்டு மணலி சென்றோம். மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் விட்டு விட்டு அகால மரணம்.

அவன் தம்பியும் எங்கள் பள்ளியில் படித்தான். அவனிடம் துக்கம் விசாரித்தோம். மாணிக்கம் பள்ளி படிப்பு முடிந்தவுடன், மணலி தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தான். பின்பு எப்போதாவது எங்களைப் பார்க்க சென்னை வருவான்.

மாரடைப்பு சம்பந்தப் பட்ட நோயோ, சர்க்கரை நோயோ இல்லை என்று அவன் தம்பி சொல்லிக் கொண்டிருந்தான். குடி, சிகரட் போன்ற பழக்கங்கள் கிடையாது என்றும் சொன்னான்.. பிறகு சற்று நிறுத்தி அண்ணனிடம் ஒரே ஒரு கெட்டப் பழக்கம்தான், “சீட்டாடுவாபோல” என்றான்.

இதைக் கேட்டவுடன் எனக்கு என்னது சீட்டாடி செத்துட்டானா? அந்த அகால வேலையில் கத்த முடியாமல் மனதிற்குள் சொல்லிக்கொண்டேன்.ரசித்த கவிதை.

எத்தனை தடவை

கொள்ளையடிப்பது

ஒரே வீட்டில்

உன் கண்கள்.ஐந்தில் வளையாதது

ஐம்பதில் வளைந்தது

முதியோர் கல்வி.அறுக்கமாட்டதவன் இடுப்பில்

ஐம்பத்தெட்டு அரிவாள்

அதிகபட்ச மந்திரிகள்.அமாவாசையன்று

நிலவு

எதிர்வீட்டு சன்னலில்++ 18 ஜோக்


இரு நாட்டுக்கும் சண்டை உச்சத்தில் இருந்தது. அவன் சண்டை விமானத்தில் பறந்துக் கொண்டிருக்கும் பொழுது எதிரிகளால் விமானம் சுடப் பட்டு அவன் தப்பி எதிரிகளிடம் சிக்கினான்.


அவர்களிடம் கெஞ்சினான். என்னை விட்டு விடுங்கள் நான் பிள்ளை குட்டிக்காரன்.


எதிரிகள் சரிப்பா உன்னை விட்டு விடுவோம், ஆனால் நாங்கள் சொல்லும் காரியங்களை நீ செய்ய வேண்டும் என்றார்கள்.


அதோ பார் எதிரில் மூன்று கூடாரம் தெரிகிறதல்லவா அதில் முதலில் உள்ளதில் இரண்டு பாட்டில் வோட்கா இருக்கிறது அதை நீ முதலில் ஐந்து நிமிடத்தில் குடிக்க வேண்டும், பிறகு இரண்டாவது கூடாரத்தில் ஒரு புலி பல்வலியால் துடித்துக் கொண்டிருக்கிறது அந்தப் பல்லை நீ பிடுங்க வேண்டும். மூன்றாவது கூடாரத்தில் ஒரு அழகானப் பெண் இருக்கிறாள் அவளை நீ திருப்திப் படுத்தவேண்டும். இவைகளை செய்தால் உனக்கு விடுதலை என்றார்கள்.


முதல் கூடாரத்தில் சென்று இரண்டு பாட்டில் வோட்காவை காலி செய்தான்.

இரண்டாவது கூடாரத்திற்கு சென்றான். புலியின் உறுமல் பயங்கரமாக கேட்டது. “தோ பார் புழி, கொஞ்சம் பொழுத்துக்கோ, உன் நல்லதுக்குத்தான் செய்கிறேன் என்றான். புலியின் உறுமல் இன்னும் பயங்கரமாகக் கேட்டது. பின்பு அதிலிருந்து சட்டை பேன்ட் எல்லாம் கிழிந்து பலத்தக் காயங்களுடன் வெளியே வந்து அவர்களிடம்


“ஏங்க அந்த அழகானப் பொண்ணுக்கு பல்வலி என்றீர்களே அவள் ரெடியா” என்றுக் கேட்டான்.

Follow kummachi on Twitter

Post Comment

7 comments:

Jey said...

காக்டெய்ல் நல்ல டேஸ்ட்.

கும்மாச்சி said...

ஜெ வருகைக்கு நன்றி பாஸ்

Thenammai Lakshmanan said...

நல்ல இருக்கு கும்மாச்சி..

Chitra said...

:-))

கும்மாச்சி said...

சித்ரா, தேனம்மை வருகைக்கு நன்றி.

Unknown said...

பதிவு அருமை......வாழ்த்துகள்

கும்மாச்சி said...

நன்றி குரு

Post a comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.