Monday 25 June 2012

துப்பாக்கி (சுடப்பட்ட கதையா?)


துப்பாக்கி கதை என்ன என்பதை முதன் முதலாக ஒரு இணையம் வெளியிட்டுள்ளது. இதனால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெரிய எதிர் பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் துப்பாக்கி வழக்கமான கதையாக இல்லாமல் சற்று வித்தியாசமாக உள்ளது என்று எல்லோராலும் பேசப்படுகிறது. இனி கதைக்கு போவோமா...............

கதை கதாநாயகன் கதாநாயகிக்கு கடிதம் மூலமாகவே சொல்லுவது போல் உள்ளது. இனி.........................

நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப்பார்க்கலாம் என்று முடிவுக்கு வந்தேன். 

“அலுவலகத்தில் இருக்கிறேன் நீலகிரிஸில் சாயங்காலம் சந்திக்கலாம்” என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை தவறாதவனின் மகளைத்தான் காதலிக்கிறோம் என இறுமாந்திருந்தேன்.
சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்தமர்ந்த உனது அப்பனை பார்த்தபோது “எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது” என்ற பழைய கவிதைதான் நினைவிற்கு வந்தது. மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிகபட்சம் என்றாலும் எருமைமாடு என்பது உனது அப்பனுக்கு குறைந்த பட்சம்தான். அந்தக் கடையில் பில் போடுவதற்காக இருந்த கம்ப்யூட்டர் தவிர மீதம் இருந்த அனைத்தையும் தின்று தீர்த்துவிடும் வெறி அவர் கண்களில் மின்னியதை நான் கவனிக்க தவறிவிட்டேன். சரி எதையாவது சாப்பிட்டுவிட்டு பேச்சைத் துவங்கலாம் என சர்வரை அழைத்தேன். அதற்குபின் உனது அப்பனின் கைங்கர்யத்தால் சமையல் கட்டிருக்கும் டேபிளிற்கும் இடையே சும்மார் நூறு ஓட்டங்களாவது எடுத்திருப்பான் சர்வர்.

கதாநாயகி நான் இல்லை
சரவணபவனிலும், தலப்பாகட்டிலும் நீ புல் கட்டு கட்டுவது ஒரு ஜெனடிக் பிரச்சினை என்பது எனக்கு அப்போதுதான் புரிந்தது. வேழ முகம்தான் இல்லையே தவிர பேழை வயிறு இருக்கிறது உன் பரம்பரைக்கே.

அவரது வேட்டையை முடிவுக்கு கொண்டுவர இயலாதவனாக கையறு நிலையில் இருந்தபோது “தம்பி இப்பல்லாம் முன்ன மாதிரி சாப்பிட முடியறதில்லப்பா..........வயசாச்சில்ல........” என தன் திருவாய் மலர்ந்தார். திடப் பொருளிருந்து இப்போது ரோஸ்மில்க் என்ற திரவப் பொருளுக்கு மாறினார். அப்பாடா ஒரு வழியாக முடித்து விட்டார் பேச்சை ஆரம்பிக்கலாம் என்று இருந்த பொழுது “ஒரு கஸார்ட்டா” என்று மேலும் சர்வரை அழைத்தார். கஸார்ட்டாவும் ஜருதா பீடாவும் சாப்பிடுவதில்லை என்பதை தவிர கோவிலில் உண்டைகட்டிக்கு காத்திருக்கும் கோவில் யானைக்கும் உங்கப்பனுக்கும் ஆறு வித்யாசங்கள் கூட இல்லை.  “தம்பி எப்ப சாப்பிட்டாலும் கடைசியா ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிடறது நல்லதுப்பா” என்ற அவரது கூற்றில் இருந்த கடைசியா எனும் வார்த்தைதான் எனக்கு வாழ்வின் மீது நம்பிக்கை ஏற்படுத்தியது.

படத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லீங்கோ
ஸார் நான் உங்க பெண்ணை விரும்பறேன், அவளையே கல்யாணம் பண்ணிக்கொள்ள ஆசைப்படுகிறேன் அது விஷயமாக பேசத்தான் போன் பண்ணினேன்” என்று மெல்ல பேச்சை துவங்கினேன். “அப்ப போன வாரம் இது விஷயமாய் பேச ஆனந்தபவனுக்கு வந்தது நீங்க இல்லையா தம்பி” என ஆச்சர்யமாக அவர் கேட்டபோதுதான் மொத்தக்குடும்பமும் இரை எடுப்பதற்கென்றே எவனையாவது இரையாக்குவதை ப்ரொபஷனல் டச்சோடு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன்.

“தம்பி இது பெரிய விஷயம், ஒரே நாளில் பேசித் தீர்த்துவிட முடியாது நீங்க என்ன பண்றீங்க நாளைக்கு அன்னபூர்ணா வந்துடுங்க அங்கே பேசிக்கலாம்” என்ற உனது தகப்பனை கொலை செய்ய அந்த நேரம் என்னிடம் துப்பாக்கி இல்லாமல் போனது எனது துர்பாக்கியமே.

என்ன இப்போ புரிஞ்சுதா துப்பாக்கி கதை.
மின்னஞ்சலில் வந்த ஒரு கதைதான் இங்கு சுடப்பட்டிருக்கிறது.

Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

MANO நாஞ்சில் மனோ said...

ஸ்ஸ்ஸ்ஸ் இப்பவெ கண்ணை கட்டுதே...!!!

கும்மாச்சி said...

மனோ ஸார் வருகைக்கு நன்றி.

முத்தரசு said...

கதை புரியுதோ இல்லையோ கதாநாயகி இல்லைன்னும், படத்துக்கு சம்பந்தம் இல்லைன்னும் படங்கள் நல்லாவே புரியுதுங்க

”தளிர் சுரேஷ்” said...

நல்ல கற்பனை!

திண்டுக்கல் தனபாலன் said...

முதல் தகவலுக்கு நன்றி !

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி தனபாலன்.

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி மனசாட்சி.

Philosophy Prabhakaran said...

ரொம்ப நாளைக்கு முன்னாடி மெயிலில் படித்தது...

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி பிரபா.

ரங்குடு said...

முன்னே எல்லாம் பொண் பாக்குறேன் பேர்வழின்னு ஒரு கிராமமே பொண்ணுங்க வீட்டுக்குப் போய் ஒரு வெட்டு வெட்டி, கடசில ஊருக்குப் போய் லெட்டர் போடுறோம்னு சொல்லிட்டுப் பொவாய்ங்க.

அந்த பொண்களும், அவிய்ங்க அப்பங்களும் மறுபடியும் பொறந்து இவ்ய்ங்களப் பழி வாங்கறாப்போல இருக்கு.

நல்லா வேணும்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.