Friday 18 July 2014

சட்டசபை லிமரிக் கவுஜைகள்


சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கூடியுள்ளது. அங்கு நடக்கும் நாடகங்கள் ஊடகங்களில் சந்தி சிரிக்கின்றன........அதை வைத்து என்னுடைய மற்றுமொரு லிமெரிக் முயற்சி.

வேட்டி கட்டினா வெளியே துரத்து
பாட்டி சொல்லுது உரிமம் ரத்து
சரக்கடிக்கும் சீமான்கள் எல்லாம்
மறக்காமல் பட்டாப்பட்டி எடுத்து
மாட்டி சென்றால் மானம் பிழைக்கும்.

அம்மா தாயே!!!

கூடுவது மழைக்கால தொடர்
பாடுவது புரட்சிதலைவி புகழ்
தட்டுவது பெஞ்ச் பலகை
திட்டுவது கெட்ட வார்த்தையில்
ஓடுவது ஓடுகாலி எதிர்கட்சியினர்.



சட்டசபை விவாதங்கள் எல்லாம்
கெட்டவைகளை முன்னிறுத்தி மேலோங்கும்
அல்லக்கை கூட்டங்கள் அம்மாவை
பல்லக்கில் தூக்கி வைத்து ஆடும்
மட்டமான அரசியல் அரங்கம்.







Follow kummachi on Twitter

Post Comment

13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை லிமெரிக்...!

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

Unknown said...

சூப்பர் வாத்யாரே!

கும்மாச்சி said...

அசோக்ராஜ் வருகைக்கு நன்றி.

ராஜி said...

ஹெலிகாப்டர் வானத்தில் பறக்கும்போதே கும்பிடா1? வெளங்கிடும்

கும்மாச்சி said...

ராஜி வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

உண்மைகளை உரைத்தது லிமரிக்! வாழ்த்துக்கள்!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

KILLERGEE Devakottai said...

மேலே பார்த்து கும்பிடுறாங்களே ? ஏன் கருடபகவான் காட்சியளிக்கிறாரா ?

saamaaniyan said...

அரசியல் அவலங்களை அருமையான லிமெரிக்காய் வடித்துள்ளீர்கள். அதற்கு சிறப்பு சேர்ப்பதாய் (!) அமைந்த ப‌டங்கள் ! படத்திலிருக்கும் அவர்கள் பார்ப்பது போலவே நானும் அண்ணாந்து பார்த்தேன்... அரசியல் விடிவு என் கண்களுக்கு அகப்படவில்லை !!!

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr

எனது புதிய பதிவு : தமிழன் என்று சொல்லடா... தமிழில் பேசடா !

http://saamaaniyan.blogspot.fr/2014/07/blog-post.html

( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )

அருணா செல்வம் said...

மட்டமான அரசியல் அரங்கம்.....

Yarlpavanan said...

சிறந்த குறும்பாக்கள்
தொடருங்கள்

கவிதை வானம் said...

இப்பலாம் அரசியலே நல்ல தமாஷ்

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.