Monday 28 July 2014

அடுத்த சூப்பர் ஸ்டாரும், படுத்த சூப்பர் ஸ்டாரும்

சமீபத்தில் ஒரு பத்திரிகை நடத்திய கருத்துகணிப்பில் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை ஒரு நடிகருக்கு வழங்கியது. அதில் நடந்த தில்லுமுல்லு வேலைகளும் அதை தொடர்ந்த சர்ச்சைகளும் சமூக வலைதளங்களில் அலசப்பட்டு சந்தி சிரித்துக்கொண்டிருந்தன.

அதை தொடர்ந்து மதுரையில் ஒரு பெரிய விழா எடுத்து அவரது ரசிகர்கள் அவருக்கு "அடுத்த சூப்பர் ஸ்டார்" பட்டத்தை வழங்க இருந்தார்கள். அதற்கு அந்த நடிகரே மற்ற நடிகர்களை தொலைபேசியில் அழைத்து "எல்லோரும் வாங்கண்ணா" என்று அழைத்ததாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. நடுவில் தமிழக அரசு அந்த விழாவிற்கு தடை செய்து, அதற்கான காரணத்தையும் வெளியிட்டது.

அவரது ரசிகர்கள் விழாவிற்கு மோடி வரப்போகிறார், பிரணாப் முகர்ஜி வருகிறார், அமிதாப் பச்சன், ஷாருக் மற்றும் அனைத்து திரையுலக நட்சத்திரங்கள் வருகிறார்கள்  என்றெல்லாம் அலம்பல் செய்து கொண்டிருந்தார்கள். ஆகஸ்டு பதினைந்தாம் தேதி செங்கோட்டையில் கொடியேற்று விழாவை தவிர்த்து பிரதமர் இந்த விழாவிற்கு வருவாரா? என்று நமக்கெல்லாம் கவலை. ஏனென்றால் இந்த விழா அவ்வளவு சரித்திர புகழ் பெற்றது அல்லவா!!!.

மற்ற நடிகர்களோ நான்தான்பா லிட்டில் சூப்பர் ஸ்டார், யங் சூப்பர் ஸ்டார் என்று அலப்பறை செய்துகொண்டிருந்தார்கள். இன்னும் படுத்த சூப்பர் ஸ்டார், கெடுத்த சூப்பர் ஸ்டார், மடித்த சூப்பர் ஸ்டார், அடித்த சூப்பர் ஸ்டார், நடித்த சூப்பர் ஸ்டார், நடிக்காத சூப்பர் ஸ்டார் என்று மேலும் சில பட்டங்களை உருவாக்கி நமக்கு எப்படி சூடிக்கொள்ளலாம்  என்றுவருங்கால முதல்வர்கள் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே சூடிய பட்டங்கள் போக இன்னும் சில பட்டங்கள் கைவசம் இருக்கின்றன, இவற்றை ரூம் போட்டு யோசித்து வைத்திருக்கிறேன். ஏதேனும் நடிகருக்கு தேவை என்றால் ஒரு லட்சம் ரூபாய்க்கு டிராப்ட் எடுத்து கீழ்கண்ட விலாசத்திற்கு அனுப்பித்து வைத்தால் அவரவர் திரையுலகில் கிழித்ததற்கு ஏற்ப பட்டங்கள் அனுப்பி வைக்கப்படும்.

விலாசம்,

கொருக்குப்பேட்டை கும்மாச்சி
கொண்டித்தோப்பு குறுக்கு தெரு
டாஸ்மாக் அருகில்,
கூமட்டை புரம்,
சென்னை 600000.

நடிகைகளுக்கும் பட்டங்கள் தயாரிக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது.

அவற்றில் சில

தொப்புள் சூப்பர் ஸ்டார்
தொடை சூப்பர் ஸ்டார்
மடிப்பு சூப்பர் ஸ்டார்
இடுப்பு சூப்பர் ஸ்டார்
எடுப்பு சூப்பர் ஸ்டார்

டெயில் பீஸ்: நடிகர் பிரேம்ஜி அவர்களுக்கு யங் சூப்பர் ஸ்டார் பட்டத்தை நடிகர் சிம்பு அவர்கள் வழங்கியிருக்கிறார்கள். அதனை மிகவும் பெருமையுடன் பெற்றுக்கொண்ட பிரேம்ஜிக்கு வாழ்த்துகள்.

இதற்கான வெற்றி விழா வருகிற ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றி முதலமைச்சர் தொடங்கி வைக்கப்போவதாக நடிகர் அறிவித்திருக்கிறார். அதே விழாவில் குமாரி குஞ்சுளாவிற்கு "இடுப்பு பெருத்த கடுப்பு நடிகை" என்ற பட்டப் பெயரை ஆளுநர் கொண்டையா வழங்குவார்.

ஸ்............ ப்பா மிடில..............
Follow kummachi on Twitter

Post Comment

25 comments:

Rahul Suresh said...

nice article.......

Unknown said...

உங்க அலும்புக்கு ஒரு அளவே இல்லையா ?
ரசிக்கும் படியா இருக்கு ,பால் கிளாஸ் பாவையின் போஸ் !
த ம 2

கும்மாச்சி said...

பகவான்ஜி வருகைக்கு நன்றி.

கும்மாச்சி said...

ராகுல் சுரேஷ் நன்றி.

JR Benedict II said...

ஹா ஹா சூப்பர் தல.. அதிலும் உங்க அட்ரஸ் செம..

கும்மாச்சி said...

ஹாரி வருகைக்கு நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

ஹாஹாஹாஅ.....செம பட்டங்கள் ங்க...கும்மாச்சி! இவங்கதான் அந்த இடுப்பு பெருத்த நடிகை அவார்ட் வாங்கும் குமாரி குஞ்சுளாவா?!!!!

கும்மாச்சி said...

துளசிதரன் வருகைக்கு நன்றி.

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

முத்தரசு said...

கும்மாச்சி குத்துங்க எசமான் குத்துங்

கும்மாச்சி said...

முத்தரசு வருகைக்கு நன்றி.

கவிதை வானம் said...

ஒரு லட்சம் ரூபாய்க்கு டிராப்ட் எடுத்து கீழ்கண்ட விலாசத்திற்கு அனுப்பித்து வைத்தால் அவரவர் திரையுலகில் கிழித்ததற்கு ஏற்ப பட்டங்கள் அனுப்பி வைக்கப்படும்.........கும்மாச்சி அண்ணேன்...கோடியில கேட்கக்கூடாதா?

கும்மாச்சி said...

முத்துராசன் வருகைக்கு நன்றி.

KILLERGEE Devakottai said...

தொப்புள் சூப்பர் ஸ்டார்
தொடை சூப்பர் ஸ்டார்
மடிப்பு சூப்பர் ஸ்டார்
இடுப்பு சூப்பர் ஸ்டார்
எடுப்பு சூப்பர் ஸ்டார்

நல்லவேளை அடுப்பு சூப்பர் ஸ்டார்
அப்படீனு போடாம போனீங்களே...

கும்மாச்சி said...

கில்லர்ஜி வருகைக்கு நன்றி.

அருணா செல்வம் said...

அட இப்படியெல்லாம் நடக்குதா....?

கும்மாச்சி said...

அருணா வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

பட்டங்களை அடுக்கிய விதம் சூப்பர்! சுவையான பதிவு! நன்றி!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

Anonymous said...

ajith fan, semma mokka post, unga thalaya pathi ethavathu eluthunga, ungaluku likes venumna mattum vijay venum...

கும்மாச்சி said...

Sorry Anilkunju I am not a Ajith fan.

Avargal Unmaigal said...

அடுத்த பதிவில் படத்தை பதிவின் டாப்பில் போடவும் இல்லையென்றால் இந்த வயசில் போட்டோவை தேடி கிழே வரை வருவது மிக கடினமாக இருக்கிறது

கும்மாச்சி said...

போட்டுடலாம் பாஸ், ஆனால் பாதி பேர் பதிவை படிக்கமாட்டார்கள்.

sarathy said...

Nalla savukkadi, thalavaa! 😷🙈🙉🙊

Muthuram Srinivasan said...

முதல் முறை உங்கள் வலைப்பக்கம் வந்தேன். புக்மார்க் செய்து விட்டேன். கலக்குறீங்க போங்க.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.