Wednesday 2 July 2014

கோட்டையில் கொடியை நாட்டி..............

நேற்று  எனது வலைப்பூவை புதுப்பிக்க வந்த மின்னஞ்சலையும் அது தொடர்பான எனது பிரச்சினைகளையும், தொழில்நுட்ப வித்தகர்களின் உதவியையும் நாடி பதிவு இட்டேன்.

நேற்றைய பதிவை படிக்க இங்கே  சொடுக்கவும்.


வழக்கம்போல் திண்டுக்கல் தனபாலன் சுட்டி அனுப்பி முயற்சிக்க சொல்லியிருந்தார். ப்ளாகர் நண்பனின் தளத்தில் மேற்கூறிய பிரச்சினைக்கு தீர்வு அளித்திருந்தார்.

அவரது பதிவை கவனமாகப்  படித்து அவர் கூறியபடியே செய்து பார்த்தேன் பின்பும் "பப்பரப்பா" தான்.  பின்புதான் தெரிந்தது கூகுள்அட்மின் கன்சோலில் நுழைய நமது ப்ளாகை டாட் காமாக மாற்றிய பொழுது கொடுத்த மின்னஞ்சல் விவரம் தேவை. அது நமது முதன்மை கணக்கு மின்னஞ்சல் அல்ல. பகவான்ஜி பின்னூட்டத்தில் வந்து யோவ் நீர் எப்படி கல்லாவை தொறந்தே என்று எல்லோருக்கும் சொல்லு என்று கேட்டிருந்தார்.

ப்ளாகர் நண்பனில் அப்துல் பாசித் கடவுச்சொல் மீட்க வழிகள் கொடுத்திருந்தார். ஆனால் "user name" மறந்து போன என் போன்ற தீவட்டிகளுக்கு எந்த தொழில் நுட்ப வல்லுனர்களும் உதவ முடியாது. இருந்தாலும் மூஞ்சிப்புத்தகத்தில் சொடுக்கி அனுப்பி   http://
www.mykeepcalmandcarryon.com/2013/09/tutorial-how-to-renew-your-blog-domain.html
கல்யாண சுந்தர் முன்வந்தார். இருந்தாலும் தவறு என் மீது. " user name" மறந்து விட்டது. ********@kummacchionlie.com என்ற முகவரியில் முன்பாதி என்ன கொடுத்தேன் என்பது மறந்துவிட்டது. நான் டாட் காம் மாறி நான்கு வருடங்களாகிறது.கூகிளாண்டவரிடம்  முறையிடலாம் என்றால் அவரது தரிசனம் கிடைப்பது குதிரை கொம்பாகிவிட்டது. மேலும் அவரை அணுக எங்கு கப்பம் கட்டவேண்டும் போன்ற விவரங்கள் என்னிடம் இல்லை. Forum சென்று கூட்டு பிரார்த்தனை செய்யலாம் இருந்தாலும் என் போன்ற மாங்காக்களுக்கு அங்கு விவரம் கிடைக்காது.

இரவு முழுவதும் யோசித்து தூக்கம் கெட்டது. காலையில் அசதியில்  உறங்கிய பொழுது கனவில் வேறு எனது வலைப்பூ இன்னும் இரண்டு வாரங்களில் இயற்கை மரணம் அடைந்து விடுவதாகவும், பின்பு நான் பிரிவாற்றாமையால் வாடி சரக்கடிக்க காசு வாங்க மனைவியிடம் கெஞ்சுவதாகவும்  பயமுறுத்தி எழுப்பிவிட்டது. 

காலையில் எழுந்ததும் மனைவி வேறு என்ன ஏதோ பறிகொடுத்தது போல் இருக்கிறீர்கள், ஏன் இன்று சரக்கடிக்க ஏதாவது புது கதையா? என்று ஏடாகூடமாக கேள்வி கேட்கவே விவரத்தை சொன்னேன்.

எப்பொழுதும் டைரியில் ஏதாவது கிறுக்கிக்கொண்டிருப்பீர்களே இதை எல்லாம் எழுதி வைக்கக்கூடாதா? என்று உசுப்பி விடவே 2010 வருட டைரியை தேடிக்கண்டு பிடித்ததில் ஜூலை மாதம் ஏதோ ஒரு தேதியில் இந்த விவரத்தை பென்சிலில் குறிப்பிட்டு வைத்திருந்தேன், அதை போட்டு பார்க்க கூகுள் கன்சோல் கோட்டை  வாசல் திறந்தது.

யுரேகா யுரேகா ( எவோ அவ ரேகா) என்று கூவி விட்டு கடனட்டை விவரங்களை சரிபார்த்தேன், எல்லாம் சரியாகவே  இருந்தது.

ஆதலால் இந்தப் பிரச்சினை உள்ளவர்கள் user name என்ன கொடுத்தீர்கள் என்பதை நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.

சமீபத்தில் வாங்கியவர்கள் என்றால் bloggeradmin@உங்கள் வலைப்பூ முகவரி.com  என்றிருக்கும். வெகுகாலம் முன்பு செய்திருந்தால்  bloggeradmin என்ற இடத்தில் வேறு பெயர் கொடுத்திருப்பீர்கள். அதை நினைவு கூர்வது நல்லது.

இல்லை என்றால் எத்துனை முறை நமது வலைப்பூ முகவரி கொடுத்தாலும் இது இப்பொழுது கணக்கில் இல்லை என்று வரும்.

கூகிள் என் இந்த முகவரியை நமது முதன்மைக் கணக்குடன் இணைக்கவில்லை என்பது புரியாத புதிர்.

Follow kummachi on Twitter

Post Comment

1 comment:

”தளிர் சுரேஷ்” said...

ஜெயித்து வந்தமைக்கு வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.