Tuesday 15 July 2014

டீ வித் முனியம்மா -------------பார்ட் 14

இன்னாடா பயம் (பழக்கடை செல்வம்) கொண்டித்தோப்பு ஜனம் அல்லாம் அந்த டிவி கடையாண்ட நின்னுக்கினு லுக்கு வுட்டுகிரானுங்கோ இன்னா விசயம்டா...........

அது ஒன்நியம் இல்ல முனிம்மா, ஃபுட் பாலு மேட்சு பாத்துகினுகீரனுங்க. சொம்மா நெய்மொரு, மெஸ்ஸி லஸ்ஸின்னு ரெண்டு பேரு தெரிஞ்சு வச்சிகின்னு நம்ம பசங்க நெம்பதான் அலம்பல் பண்றானுங்கோ...

டேய் மீச டீ போடுடா..............இன்னா முனியம்மா லிங்கம் சாரு, பாய், நாடாரு, லோகு அல்லாம் கூட அங்கதான் நின்னுகினு கீதா.....

லோகுவ இப்பதாண்ட கடையாண்ட பாத்தேன், நாய இட்டுகினு வந்துகினு கீறான்...........

சரி முனிம்மா பட்ஜெட்டுல இன்னா புச்சா கீது............

வா லிங்கம் சாரே, குந்து..............புச்சா ஒன்நியம் இல்ல, செட்டியாரு போட்ட அதே பட்ஜெட்ட பட்டிதட்டி டிங்கர் பண்ணி கொடுத்துகிரானுங்க, அவனவன் சோத்துக்கே அல்லடிக்கினி கீறான், செலை வைக்கோ இருநூறு கோடி போட்டுகிரானுங்க. அப்பால அது இது லொட்டு லொசுக்குன்னு அல்லாத்துக்கும் ஒரு குத்து மதிப்பா ஒரு நூறு கோடி போட்டுகிரானுங்க..

நீ இன்னா முனியம்மா இப்டி சொல்லுற, அம்மா ஐயா எல்லாம் சூப்பரு பட்ஜெட்டு அப்டின்னு சொல்றாய்ங்க......

அம்மா அப்டிதான் சொல்வாப்ல  அல்லாருக்கும் தெரியும், அது இன்னா செய்யும் பாவம், கோர்ட்டு கேசுன்னு கொடைச்சல் கொடுத்துகிரானுங்க, அதுல எஸ்கேப் ஆவனுன்னா அவனுங்களுக்கு சொம்படிச்சுதான் ஆவனும்.

கலீனரும் சூப்பரு பட்ஜெட்டு, கனிமோயி கோரிக்கைய எத்துகினு பட்ஜெட் போட்டுகிறாங்க, ஏயைக்கான பட்ஜெட்டுங்கிராறு.

அவருக்கு மவளும், பொஞ்சாதியும் மாட்டிகினு கீறாங்க, அவரும் அதையேதான் சொல்லுவாரு.

மொத்தத்துல இன்னா சொல்ற முனியம்மா இந்த பட்ஜெட்டுல நமக்கு இன்னா லாவம் சொல்லு.

அட போ நாடரு, நமக்கு இன்னா வரப்போவுது, பொயுதன்னிக்கும் நமக்கு பூ வியாவாரம், உனுக்கு மளிகை நமக்கு இன்னா லாவம்.

சரி வுடு முனியம்மா, இன்னா ராகுலு பையன் தூங்கிகினு கீரானு படம் போடுறானுங்க.

அதான் பாய் ஜெட்லி பட்ஜெட் வுட சொல்ல பையன் மட்டையாயிகிறான், அத படம் புட்ச்சி போட்டுகிரானுங்க, மோடி கூட தூங்கினாராமே. அதான் புரட்சி தலீவரு அப்பவே பாடினாரு நல்ல பொயுதை எல்லாம் தூங்கிக் கெடுத்தவன் நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டான்.........னு.

முனியம்மா அது அவர் பாடினது இல்ல, நம்ம பட்டுக்கோட்டையார் எயுதினது.

இருக்கட்டும் லிங்கம் சாரு, படத்துல பாடினது எங்க தானை தலைவருதான்...

வேட்டிகட்டின பெரிய மனுசங்கல கிளப்புல உள்ள உடமாட்டேன்னு சொல்லிகிரானுங்க, அத்த வச்சி சட்டசபையில பேசிகிறானுன்களே இன்ன மேட்டறு.

மெட்ராசுல நெறைய சரக்கடிக்க க்ளப்புங்க கீது, அதுல வேட்டி கட்ன ஆளுங்கள் உடமாட்டானுங்க, மப்புல எவனாவது உருவிட்டானா இன்னாவர்து........அதான்.

டேய் லோகு உன் புத்தி போவுது பாரு, அதெல்லாம் ஒரு மேட்டரா?

இன்ன நேத்திக்கி சட்டசபையில மின்வெட்டு வேற, மின் தடை வேறேன்னு நத்தம் சொல்லிகிறாரு........

அதுவா நாடார் சட்டசபையில அம்மாக்கு சொம்படிச்சு பென்ச் தட்ட சொல்ல ஏதாவது குடாக்கு மாதிரி பேசுவானுங்க...........நமக்கு இன்னா மின்வெட்டு மின்தடை அல்லாம் ஒன்னு தான்............சுச்சி போட சொல்ல ஃபேனு சுத்தாது.......அப்பால இன்னா..........

சரி முனியமா நடராசன உள்ளே போட்டுகிராணுங்க போல கீது.....

தோடா பயம் இங்க என்னாட நூசு கேட்க வரசொல்ல ரீஜென்டா இருக்கோணும், சொம்மா சசிகலா நடராசனு மேட்டரு இல்லாத மேட்டரு பத்தி கேட்ட அப்பால டப்பா டான்ஸ் ஆடிடும் அஹான்.......இந்த அர்ரெஸ்ட், ஜாமீனு, வஞ்சிரமீனு எல்லாம் சொம்மனாங்காட்டி செய்வாங்க..........போலீசு காரனுக வேலையில்லாம கீறானுங்க பாரு.  போடா போயி பொயப்ப பாரு இல்ல சினிமா நூசு பிகரு படம்னு பாத்துட்டு போய்கின்னே  இரு.

சரி முனியம்மா காண்டாவாத படம் இன்னா போட்டுக்கிறான் காமி





Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு

கும்மாச்சி said...

ஐயா வருகைக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

ஒரு லாவமும் கிடையாது...!

Thulasidharan V Thillaiakathu said...

டீ வித் முனியம்மா நல்லாவே கீதுப்பா.....முனியம்மா டீ கடையாண்ட குந்திகினு இப்புடி கீசு கீசுன்னு கீசுது!

//செட்டியாரு போட்ட அதே பட்ஜெட்ட பட்டிதட்டி டிங்கர் பண்ணி கொடுத்துகிரானுங்க, அவனவன் சோத்துக்கே அல்லடிக்கினி கீறான், செலை வைக்கோ இருநூறு கோடி போட்டுகிரானுங்க. அப்பால அது இது லொட்டு லொசுக்குன்னு அல்லாத்துக்கும் ஒரு குத்து மதிப்பா ஒரு நூறு கோடி போட்டுகிரானுங்க..// முனியம்மா சூப்பரா டாக்கு வுடுது.....

கும்மாச்சி said...

துளசிதரன் வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

நடராசன் பேரைக்கேட்டதும் செம காண்டாயிருச்சே முனிம்மா ஏன்? நல்ல பகிர்வு! நன்றி!

வெங்கட் நாகராஜ் said...

நாட்டு நடப்பு - முனீம்மாவின் பார்வையில்! நல்லா இருக்கு கும்மாச்சி...

கும்மாச்சி said...

வெங்கட் நாகராஜ் வருகைக்கு நன்றி.

'பரிவை' சே.குமார் said...

முனிம்மா பார்வையில் கலக்கிட்டீங்க...

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.