Saturday 21 September 2013

அடாவடி ஆத்தாவும் சினிமா நூற்றாண்டும்

இந்திய சினிமா தொடங்கி நூறு ஆண்டுகள் ஆகியதை வைத்து இந்திய சினிமா நூற்றாண்டு விழா இன்று தொடங்குகிறது. தமிழக முதல்வர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார்.

விழாவிற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும், ஆந்திர முதலமைச்சர் கிரண் குமார் ரெட்டியும், கர்நாடக முதல்வர் சித்த ராமையா, கேரளா முதல்வர் உம்மன்சாண்டியும் கலந்து கொள்கின்றனர்.

விழாவில் பங்கேற்க கலைஞர்களுக்கு அம்மா ஆணையுடன் அழைப்பிதழ்கள் வைக்கப்பட்டதாக இணையங்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.  இதைப் பற்றி கலைஞரிடம் கேட்ட பொழுது "அவர்கள் யார் என்னை அழைக்க" என்று நெத்தியடி பதில் கொடுத்திருந்தார். இவர் மட்டும் செம்மொழி விழாவிற்கு எல்லோருக்கும் அழைப்பு விடுத்தாரா என்ன?

இந்த விழா செலவிற்காக முதலமைச்சர் பத்து கோடி ரூபாய் நிதியுதவி செய்ததாக செய்திகள் வந்தன. யார் வீட்டு பணம், சத்தியமாக அம்மாவின் அறுபத்தாறு கோடியிலிருந்து இல்லை என்பது ஊரறிந்த உண்மை.

வழக்கம் போல் நடிகைகளின் தொடைகறியும், தொப்புள் சூப்பும் இந்த விழாவில் அளிக்கப்படும். இந்தக் கூத்தை ஒரு நாட்டின் குடியரசுத் தலைவர், நான்கு முதலமைச்சர்கள் தங்கள் கடமையை விட்டு விட்டு காணப்போகின்றனர்.

இந்த விழாவிற்கு செய்திகள் சேகரிக்க ஜெயா டி.வி.க்கு மட்டும்தான் அனுமதியாம்.(நிகழ்ச்சியை ஒளிபரப்ப ஜெயா டிவி உரிமை வாங்கியிருப்பது  அறிந்த விஷயம்) மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவை நடத்துவோரிடம் இதுபற்றிக் கேட்டபொழுது முதலமைச்சர் நிதியுதவி செய்துள்ளார் அதனால்தான் ஜெயா டிவிக்கு மட்டுமே உரிமை என்று சொல்லியிருக்கிறார்கள். அடேய் அந்தப் பணம் மக்கள் பணம், அம்மா பணம் இல்லை.

மேலும் அணிலு, புயலு, கேப்டன் இவர்கள் எல்லோருக்கும் அழைப்பிதழ் வைத்து "தயவு செய்து அந்தப் பக்கம் தலைவைத்து படுக்காதீர்கள்" என்று விழா அமைப்பாளர்கள் தனியாக நோடீஸ் வைத்திருக்கிறார்கள். பாவம் அணிலு ஆத்தாவிடம்  இந்தப் பம்மு பம்மியதற்கு நல்ல மரியாதை. அதனால் என்ன அடுத்த தேர்தலில் அவர் மாற்று கட்சிக்கு "பெருச்சாளியாக" உழைப்பார்.

"புயல்" என்னை எப்படியாவது கூப்பிடுங்க வேணுமென்றால் அம்மாவை புகழ்ந்து ஒரு நகைச்சுவை நாடகம் போடுகிறேன் என்றுஅம்மாவுடன் தூதுவிட்டு பார்த்தார். ஆனால் ஆத்தா இன்னும் உக்கிரமாக இருப்பதாலும் மலை ஏறவே முடியாது என்று நெட்டு குத்தாக நிற்பதாலும் அவரின் வேண்டுகோள் புறக்கணிக்கப் பட்டது.

கேப்டனுக்கு இப்பொழுது நேரம் சரியில்லை, ஊரூராக கோர்ட் வாசல் படி ஏறி இறங்கிக்கொண்டு இருக்கிறார்.

மறைந்த நடிகர் நடிகவேள் எம்.ஆர். ராதா ஒரு தீர்க்க தரிசி, அவர் வழி தனி வழி, கூத்தாடிகளுக்கு மன்றம் வைக்காதீர்கள், நாங்கள் எல்லாம் யோக்கியர்கள் இல்லை என்று உண்மையைக் கூறிக்கொண்டிருந்தார்.

இந்தக் கூத்தாடிகள் கூட்டமும் அதை ஒவ்வொரு முறையும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. ஆளும்கட்சி தலைமையை எப்பொழுதும் அண்டிப்பிழைக்க வேண்டிய நிலை. யார் ஆட்சியில் வந்தாலும் பாசத்தலைவனுக்குப் பாராட்டு, பரதேசிக்கு பாராட்டு என்று ஏதாவது ஒரு விழா வைத்து சொம்படிப்பார்கள்.

இத்தனை நாட்கள் கூத்தாடிகளுக்கு தேதி கொடுக்காத ஆத்தா இப்பொழுது நூற்றாண்டு விழா சாக்கில் தேதி கொடுத்து வரவிற்கும் நாடாளு மன்றத்தேர்தலுக்கு கூத்தாடிகளின் ஆதரவை தேடிவிட்டார்.

ஹூம் நடத்துங்க, நடத்துங்க.

Follow kummachi on Twitter

Post Comment

10 comments:

KAYALVIZHI said...

ஒரு படத்திற்கு 30 கோடி சம்பளம் வாங்குகிராகள் என்றெல்லாம் கேள்விப்படுகிறோம். அவர்களிடம் நன்கொடை வசூல் செய்திருக்கலாமே . ஒன்றும் பேசிய முடியாது.
நாம் சுதந்திர இந்தியாவின் அடிமைகள்

கும்மாச்சி said...

பல்லவன் வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

வழக்கம் போல் நடிகைகளின் தொடைகறியும், தொப்புள் சூப்பும் இந்த விழாவில் அளிக்கப்படும். இந்தக் கூத்தை ஒரு நாட்டின் குடியரசுத் தலைவர், நான்கு முதலமைச்சர்கள் தங்கள் கடமையை விட்டு விட்டு காணப்போகின்றனர்.
// நக்கல் வரிகள்! வரிப்பணம் மக்கள் பணம் எவ்வளவு வீண்டிக்கப்படுகிறது இந்த கூத்தாடிகளுக்கு! இனியாவது இந்த மாதிரி கூத்தாடிகளை தலைவர்களாக்கி கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும்!

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி சுரேஷ்.

Anonymous said...

IS THERE ANY POSSIBILITIES FOR FILING PUBLIC INTEREST LITIGATION?

கும்மாச்சி said...

Yes why not? But who has the courage to do it?

Jayadev Das said...

பாசத்தலைவனுக்குப் பாராட்டு\\ அப்படிப் புகழும் டை'மண்டு',[late] சுக்ரீவனின் அண்ணன் போடறவர்களுக்கும் ஈனம் மானம் இல்லை, அந்தப் புகழை நிஜம்னு நம்புபவனுக்கும் சூடு சொரணை இல்லை. என்னத்த சொல்ல!!............

கும்மாச்சி said...

ஜெயதேவ் உங்கள் கருத்து சரியே.

வருகைக்கு நன்றி.

Unknown said...

மறைந்த நடிகர் நடிகவேள் எம்.ஆர். ராதா ஒரு தீர்க்க தரிசி, அவர் வழி தனி வழி, கூத்தாடிகளுக்கு மன்றம் வைக்காதீர்கள், நாங்கள் எல்லாம் யோக்கியர்கள் இல்லை என்று உண்மையைக் கூறிக்கொண்டிருந்தார்.\\

சத்தியமான உண்மை

கும்மாச்சி said...

சக்கரகட்டி வருகைக்கு நன்றி.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.