Thursday 19 September 2013

அம்மா தண்ணி போடுது தலைவரே!!!

சொறியாலயத்தில் பொதுக்குழு கூட்டம். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி அவசரக்கூட்டம்.

பொறைமுருகன், தொளபதி, பணிவிழி, வேரு, வெண்முடி, டி. ஆர்.வாலு, புஷ்கு   மற்றும் தென் சென்னை மாவட்டம் குண்டழகன் மற்ற வட்ட மாவட்டம், சதுரம், செவ்வகம் என எல்லோரும் ஆஜர். வழக்கம் போல அஞ்சா குஞ்சன் கடுப்பில் வரவில்லை.

தலைவர் அஞ்சதுண்டு நடுநாயகமாக வீற்றிருக்கிறார். ஒலிவாங்கியைப் பிடித்து கூட்டத்தை தொடங்குகிறார். கழக கண்மணிகளே, என் உடன் பிறப்புகளே எதிர்கட்சி வரவிருக்கும் தேர்தலை ஒட்டி அம்மையார் வியூகங்களை அமைக்கிறார். நாம் பனங்காட்டு நரிகள் இந்த சலசலப்பை கண்டு அஞ்சமாட்டோம். மேலும் நம்மை அழிக்கப்பார்க்கிறார்கள். கழகத்தை யாராலும் அழிக்க முடியாது.

பொறை முருகன் தனக்கே உரிய பாடி லாங்குவேஜில் நக்கலாக சிரிக்கிறார், பின்னர் மைன்ட் வாய்சில் "ஆமாம் அந்த வேலையைத்தான் உங்க குடும்பத்துக்கு கொடுத்திட்டீங்களே மத்தவங்க எப்படி அழிக்க முடியும்".

தலைவர்: இனி நமது ஆட்டத்தை தொடங்க வேண்டிய நேரமிது. வழக்கம்போல கூட்டணி வைத்துக்கொள்வதை என்னிடம் விட்டு உங்கள் கருத்தை ஒவ்வொருவராக கூறுங்கள்.

வெண்முடி: தலைவரே அந்தம்மா தண்ணி போடுது.

தலைவர்: அதைதான் நான் அன்றே சொன்னேன் தம்பி "அம்மையாருக்கு இன்று சற்று அதிகமாகிவிட்டது போலும் என்று"

வெண்முடி: (மைன்ட் வாய்சில்) ஆமாம் அப்புறம் கைதுக்குப் பயந்து கோவம் என்று திருத்திக்கிட்டு இப்போ ஏன்னா பேசுறாரு பாரு. அது இல்லை தலைவரே "அம்மா தண்ணி"ய சொன்னேன். அப்புறமா மலிவு விலையில இட்லி போடுது, சாம்பார் சோறு போடுது, தயிர் சோறு போடுது, அனேகமா நாற்பதும் அடிச்சிடும் போல.

தலைவர்:துவண்டு விழாதே தோழா, அதற்குத்தான் நாம் பெங்களூரு நீதிமன்றத்தில் நீதிக் கடமை ஆற்றிக்கொண்டிருக்கிறோம். மணிமேகலை இருக்கும் வரை அம்மையாரின் பிரதமர் கனவு நிறைவேறாது.

வட்டம், மாவட்டங்கள்:  ஆமாம் தலைவரே.

தலைவர்: கலங்காதே கண்மணிகளே, நமது தொளபதி இருக்கும் வரை நாற்பதும் நமக்குத்தான்.

குண்டழகன்: (மைன்ட் வாய்சில்) ஆமாம் அவர் சீட்டே கொளத்தூர்ல போன தபா "டப்பா டேன்ஸ் ஆடிக்கிச்சு. ஆமாம் தலைவரே தொளபதி இருக்கும் வரை நமக்கு கவலை இல்லை. நாற்பதும் நமதே.

தலைவர்: நாற்பதிலும் நாம் வெற்றிக்கனியை பறிக்கவேண்டுமேன்றால் வலுவான கூட்டணி தேவை.

வாலு: (மைன்ட் வாய்சில்) ஆமாம் இப்போ இருக்கிற நெலமையில எவனும் நம்ம சீண்ட மாட்டேங்கிறான். தலைவரே நீங்கள் ஆணையிடுங்கள் மணிமேகலை அம்மாவுடன் நான் பேசி கூட்டணிக்கு அச்சாரம் போடுகிறேன்.

தலைவர்: தம்பி வாலு கவலை வேண்டாம் மணிமேகலையை நான் பார்த்துக்கொள்கிறேன். இங்கிருக்கும் தமிழ் குடிதாங்கி, தோணி முதலியோரை நம் பக்கம் இழுக்கவேண்டும்.

வேரு: இல்லை தலைவரே அவர் வருவாரா தெரியவில்லை. வேட்டியும், புடவையும் மாறி மாறி தோய்த்து அவர் துவண்டு விட்டார். இந்த முறை ஏதாவது கோமணம் கிடைக்குமா என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்.  இல்லையென்றால் நிர்வாணமாக நிற்பேன் என்று சூளுரைக்கிறார்.

தலைவர்: தம்பி தோனியையும் கூப்பிட்டு பார்ப்போம்.

கூசா:அவர் எப்படி தலைவரே வருவாரு? அவரு இப்போ ஜார்கண்டில் மோட்டார் பைக் வச்சிக்கினு போலிஸிற்கு கொடச்சல் கொடுத்துகிட்டிருக்காறு.

தலைவர்: தம்பி கூசா நான் அந்த கேப்டனை சொல்லவில்லை.

கூசா: ஓ அவரா? அவரே இப்போ நாக்கை துருத்த முடியாமல் அவமதிப்பு வழக்கில் ஊர் ஊராக கோர்டில் ஆஜராகி நாக்கு வெளியே தள்ளி கெடக்குறாரு.

தலைவர்: தம்பி பொறுத்திரு பொங்கி எழாதே.அவரை எப்படி வளைப்பது என்று பழந்தின்று கொட்டை போட்ட எனக்குத் தெரியும்.

பொறை முருகன்: மைன்ட் வாய்சில் ஆமாம் இவரு கேப்டன் அங்கே இங்கே டாஸ்மாக் என்று போக சொல்ல எல்லா இடத்திலேயும் கும்பிடு போட்டு பார்க்குறாரு, அந்தாளு மப்பும் மந்தாரமுமா வெறைப்பா போறாரு. 

தலைவர் உதவியாளர் பன்முகனாதனை திரும்பி பார்த்து துண்டு சீட்டு எதிர்பார்க்கிறார்.

பன்முகநாதன் சட்டைப்பையில் தேடி கிடைக்காமல் முழிக்கிறார்.

தலைவர்: யோவ் சீட்ட எங்கே வச்ச?  கலாசலா இல்லை சரோஜா சாமான் நிக்காலோவா?

பன்முகநாதன்: (மைன்ட் வாய்சில்) ஆமாம் இவரு வைக்கிற இடத்துலதான் வச்சேன் பேரு யாருக்கு தெரியும்.

தலைவர் முடிவுரையை ஆரம்பிக்கிறார்.

தலைவர்: தம்பி பொறுத்திருங்கள். எல்லோரும் நம் பக்கம் இருக்கிறார்கள். இல்லை என்றால் இருக்கவே இருக்கிறது. நாம் மதவாத முகமூடியை கழற்றி எறிந்துவிட்டு காவி ஜோதியில் கலந்துவிடுவோம். கண்மணிகளே கலங்காதீர்கள். இம்முறை நாம் களப்பணி களைப்படையாமல் ஆற்றவேண்டும். தொங்கியிருக்கும் தொண்டர்களை தூக்கி நிறுத்த வேண்டும். மற்றும் தேர்தல் நிதி திரட்டும் வேலையை இன்றே துவங்க வேண்டும். நிதி நிறைந்தவர் பொற்குவை தாரீர், நிதி குறைந்தவர்கள் கட்டுக்கள் தாரீர்.அடித்த கொள்ளைகளே கதி என்றிருக்கும் என் குடும்பம் செழித்திட இன்றே புறப்படுவீர். நம் மக்கள் நலம் காண  நாலு காலால் உழைப்போம். கண்மணிகளே எல்லோரும் என்னை தூக்கி கடலில் போட்டாலும் கட்டுமரமாய் மிதந்து அண்ணா பெரியார் சொன்ன வழியிலே  கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று முழங்கி, களம் பல கண்டு, அஞ்சி நடுங்காமல் கையை காலை பிடித்தாவது கூட்டணி அமைப்பேன்.

நாளை நமதே, நாற்பதும் நமதே. அண்ணா நாமம் வாழ்க.


Follow kummachi on Twitter

Post Comment

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... கலக்கல்...

கும்மாச்சி said...

தனபாலன் வருகைக்கு நன்றி.

Anonymous said...

paarthu.. kabi appa kadikkum..:))

”தளிர் சுரேஷ்” said...

செம கலக்கல்! வாழ்த்துக்கள்!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

பொன் மாலை பொழுது said...

அநியாயத்துக்கு யோசிப்பீர்கள் போல! :)

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி மாணிக்கம்.

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.