Monday 23 September 2013

கலக்கல் காக்டெயில்-123

சினிமா நூறு

இந்திய சினிமா நூறு விழாவிற்கு அம்மா அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார்கள். பின்னர் சினிமாவில் சிறப்பு பங்காற்றியவர்களுக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விருதை வாங்கியவர்களில் சில பேர்களைவிட தமிழ் சினிமாவிற்கு பங்காற்றியவர்கள் இன்னும் நிறைய பேர் விருதிற்கு தகுதியானவர்கள்.

இந்த விருது பரிந்துரையில் அரசியல் தலையீடு இருந்தததை மறைக்கவோ மறக்கவோ முடியாது. விழாவிற்கு அழைப்பு வைத்ததிலிருந்து தொடங்கியது குழப்பம். சினிமாவில் சிறப்பு பங்காற்றிய எண்ணற்ற கலைஞர்கள் இதில் அரசியல் காரணங்களால் அழைக்கப்படவில்லை.

போதாத குறைக்கு இதற்கு அரசு சார்பில் பத்துகோடி நிதியை வேறு வாரி வழங்கியிருக்கிறார். கோடிக்கணக்கில் காசு புரளும் இடத்தில் இந்த அரசு நிதி அனாவசியமானது. அந்த நிதியை வேறு எதாவது மக்கள் நிலதிட்டத்திற்குசெலவழித்திருக்கலாம்.

செம்மொழி மாநாடு, சினிமா விழா என்று மக்கள் பணம் வீணடிக்கப்படுகிறது. இதில் இரு கழகங்களும் சளைத்தவர்கள் அல்ல.

அம்மா வியூகம் 

அம்மா கூடாரம் வரப்போகும் நாடாளு மன்றத்தேர்தலுக்கான வியூகங்களை தொடங்கிவிட்டனர். அடிக்கடி அகில இந்திய உபரிகட்சித் தலைவர்கள் அம்மாவை வந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் அகில இந்திய ஃபார்வேர்ட் பிளாக் தலைவர் பிஸ்வாஸ் அம்மாவை சந்தித்து பேசியிருக்கிறார். அப்பொழுது பிரதமர் பதவிக்கு மோடி தகுதியானவர் அல்ல என்று அம்மாவிடம் சொல்ல அம்மா புன்னகைத்திருக்கிறார்.

பி.ஜே.பி.க்கும், காங்கிரசுக்கும் பெரும்பான்மை வராத போதில் மூன்றாவது அணி பேச்சு அடிபடப்போவது உறுதி. அம்மா நாற்பதையே அடித்தாலும் பிரதமர் பதவி டூ மச் தான். இருந்தாலும் ஆசை யாரை விட்டது. சுப்ரமணிய சாமி பேச்சை நம்பி வாஜ்பாய் அரசைக் கவிழ்த்து கையில் பச்சைபையுடன் பிரதமர் பதவியை கிட்டே மோந்து பார்த்து வந்தவர்தானே.

இலங்கை வடக்கு மாகாண தேர்தல் 

நடந்து முடிந்த வடக்கு மாகாண தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரும்பான்மையான இடங்களை பிடித்திருப்பது ஆறுதல் தரும் விஷயம். இத்தனைக்கும் சிங்கள ராணுவம் வீடு வீடாக சென்று துப்பாக்கி வைத்து மிரட்டியும் இது நிகழ்ந்திருக்கிறது.

ஓரளவுக்கு ஈழத்தமிழருக்கு விடிவுகாலம் போல் தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

ரசித்த கவிதை 

அரசியல்

அரசியல் என்னும் போர்வாள்
அறியாமையை சாகடித்து,
அறங்களை அரியாசனத்தில்
- அமர்த்த வேண்டும்.


அரசியல் குளிர் தரும்
சாதனமாக இல்லாமல்,
தாகம் தணிக்கும் தண்­ணீராக
- இருக்க வேண்டும்.


அரசியல் சாக்கடை என்று
கூவி கொண்டு இருக்காமல்
அதில் உள்ளே சென்று சுத்தம்
- செய்ய வேண்டும்.


அரசியல் சண்டை போடும்
சாதகமாக இல்லாமல்
சமத்துவம் பாடும் வேதமாக
- இருக்க வேண்டும்.


அரசியலுடன் கைகோர்ப்போம்!
ஆனந்தத்தின் இருப்பிடமாக
தேசத்தை மாற்றுவோம்!-------------------------ஸ்ரீ ஹேமா



ஜொள்ளு



Follow kummachi on Twitter

Post Comment

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

தேவை இல்லாத நிதி... கவிதை அருமை...

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி தனபாலன்.

ராஜி said...

இன்னிய பதிவுல அரசியல் வாடை தூக்கலா இருக்கு!!

கும்மாச்சி said...

வருகைக்கு நன்றி ராஜி.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இரண்டு முதல்வர்களும் விழா பைத்தியங்கள் தான் அதனால் தான் செலவு...

ரசிக்கும் படியான காக்டெயில்

கும்மாச்சி said...

சௌந்தர் வருகைக்கு நன்றி.

”தளிர் சுரேஷ்” said...

மக்கள் பணத்தினை வீணடிப்பதில் அம்மாவாகட்டும் ஐயாவாகட்டும் இதில் மட்டும் ஒற்றுமைதான்! கவிதை அருமை! தமிழர்களுக்கு ஒரு விடியல் உண்டானால் நல்லதுதான்! நன்றி!

கும்மாச்சி said...

சுரேஷ் வருகைக்கு நன்றி.

Manimaran said...

இதைவிட பெரிய கமெடி கடந்த ஆட்சியைவிட என் ஆட்சியில்தான் தமிழ் சினிமா செழிப்பாக இருக்கிறது என அந்த விழாவில் ஒரு போடு போட்டாங்க பாருங்க...

Post a Comment

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.